Cricket Countdown....

Tuesday, September 14, 2010

ஒரிஜினல் “பல்பு”

முன்பே ஒரு பதிவில் என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா செய்த குறும்புகளை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்த குறும்பு இதோ!

அவளுடைய பிறந்தநாளுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்து இருந்தேன். அதை வைத்து நன்றாக விளையாடுவாள். அதில் ஏறி அமர்வது, தள்ளி கொண்டு சென்று சுவற்றில் இடிப்பது, அதன் பெட்டியில் விளையாட்டு பொருட்களை போட்டு மூடுவது, அதை கவிழ்த்து போட்டு உருட்டுவது, இப்படி பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள்.


ஒரு நாள் மாலை, வழக்கம் போல சைக்கிள் வைத்து விளையாடி கொண்டு இருந்தாள். நான் அப்பொழுது தான் கவனித்தேன் சைக்கிளில் உள்ள ஒரு இண்டிகேட்டர் லைட் காணாமல் போயிருந்ததை. என் மனைவியிடன்,  “சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா?” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க!)

இவங்க மேல் இருந்த கோபத்துடன் என் மகளிடம், “ ஷமி,  எங்க லைட்டு” என்றதுதான் தாமதம். விளையாடி கொண்டு இருந்தவள் பொம்மையை தூக்கி போட்டு விட்டு கையை தூக்கி “அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.

ஒரு நிமிடம் நான் திணற, என் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க, என் மகள் ஏன் அப்பா முழிக்கிறாரு? ஏன் அம்மா சிரிக்கிறாங்க??  நான் என்ன சொன்னேன்??? என்பது போல ஒரு லுக்கு விட்டாள்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு.

சரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.


54 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

muthal vettu

Anonymous said...

looks new gift for sham boy

dheva said...

தம்பி.. @ வச்சாளா எம் மக உனக்கு சரியான ஆப்பு.... கொய்யாலா ஊருக்கே மொக்கை போடுறா.. உனக்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்....

புள்ள கிட்ட கத்துக்கிட்டு வந்து பிளாக்ல நீ பண்ற அலும்பு... ! இப்போ தெரிஞ்சு போச்சுடா உன் மொக்கையின் பிறப்பிடம் எதுன்னு....(புள்ளைக்கு சுத்தி போடச் சொல்லுப்பா....)

மங்குனி அமைச்சர் said...

சரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.
////

புல்லு போட்டா புல்லு விளையும் , நெல்லு போட்டா நெல்லு விளையும் (டே..... மங்கு என்னடா பழமொழியா ? என்னவோ போடா .....)

Chitra said...

so cute......... she is very smart! :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரைட்டு... அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு...

அ.முத்து பிரகாஷ் said...

நம்ப ஷம்ஹித்தா வளர்ந்து எழுதப் போற பதிவுகளை நினைச்சு இப்போவே கொல நடுங்குது தோழர் !

அருண் பிரசாத் said...

@ பாபு
எங்க வெட்டுனு சொல்லிட்டு போனவர் ஆளையே கானோம்????

@ Anony
my baby is a girl baby boss

@ தேவா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

@ மங்குனி
ஊருக்கே பல்பு கொடுத்தா தனக்கு பல்பு தானா வரும்

கருடன் said...

//சரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.//

தூ.. கீழ விழுந்து மூஞ்சி மொகறை எல்லாம் உடைச்சிகிட்டு... நல்லவேளை மீசைல மண்ணூ ஒட்டல பெருமை...

அருண் பிரசாத் said...

@ சித்ரா
yes very smart like me :)

@ வெறும்பய
ரைட்டு

செல்வா said...

ஹி ஹி ஹி ..!! இதுக்கு பேருதான் பல்பு வாங்குறதா..?
ஹய்யோ ஹய்யோ ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் விடுங்க பல்பு வாங்குறதுதான் தினமும் நடக்குதே. பலப் வாங்காத நாளை சொல்லுங்க...

சிங்கக்குட்டி said...

நல்ல வேளை மேலே கைய கட்டுசுன்னு பெருமை படுங்க.

எங்கே லைட் என்று கேட்டதும் உங்களை நோக்கி கையை காட்டவில்லையே (டியுப் லைட்).

Madhavan Srinivasagopalan said...

அட.. சும்மாவா சொன்னாங்க.. தகப்பன் எட்டடி பாஞ்சா, பொண்ணு, பதினாறடி பாயுமுன்னு..

நீங்கதான் தெளிவா, பாப்பாகிட்ட "உன்னோட குட்டி சைக்கிள் லைட் எங்க ?"னு கேக்கணும்.. அத விட்டுபுட்டு பல்பு வாங்கினத சொல்லுறாரு, பெருசா..

சாந்தி மாரியப்பன் said...

நீங்க ரொம்ப நல்லவர்ன்னு உங்க பொண்ணு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்காங்க :-)))

Anonymous said...

ஹா ஹா செம பல்பு!
கூடவே டியூப் லைட்டு பட்டம் வேறயா? :)
சோ க்யூட் நான் உங்களைச் சொல்லல ;)

vinu said...

அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.

:நல்ல வேலை இந்த வார்த்தைக்கு முன்னால "அப்பா நீ" அப்படீன்னு ஒரு ரெண்டு வார்த்தை சேர்த்தி சொல்லலை

கருடன் said...

//(எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க!)//

கவலைபடாத மச்சி!! ஆண்கள் சம உரிமைக்கு நான் போராடறேன்... இதனால எத்தனை தலை போனாலும் சரி...

Gayathri said...

ஹஹா சுப்பர் பதில்...எப்படி உங்கள கை காட்டாம விட்டா?? ஹா ஹா சும்மா தமாஷு...என்ஜாய்

அருண் பிரசாத் said...

@ நியோ
:)

@ செல்வா
ஒரிஜினல் அக்மார்க் பல்பு செல்வா

@ டெரர்
public public


@ ரமெஷ்
ஒரு கூடை பல்புக்கு இது பரவாயில்லை

அருண் பிரசாத் said...

@ சிங்ககுட்டி
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

@ madhavan
அப்போ, இன்னும் பயிற்சி தேவையோ? ரைட்டு

நன்றி அமைதிசாரல்

grrrrrrrrr balaji

அருண் பிரசாத் said...

@ vinu
எல்லோரும் ஒரு முடிவாதான் இருக்கீங்க

@ டெரர்
நீதான் யா மனுசன். சரி யார் தலை போகனும்

@ Gayathri
நான் தான் சூரியன் ஆச்சே!

சௌந்தர் said...

இதை படித்து விட்டு வாய் விட்டு சிரிச்சிட்டேன் ஹா ஹா ஹா சரியான பல்பு தான்

Jey said...

//“சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா?//

ங்கொய்யாலே, அவனவன்...வங்கி கொடுத்த 1 மணி நேரத்துக்குள்ள... உடைச்சி கலிபண்ணி பீதியக் கிளப்புராங்களேனு...கடுப்புல இருந்த..., நாதாரி மக்கா..., உம்பொண்ணு சமத்தா 10 நாள் பத்திரமா வச்சிருந்தானு... எண்ணை ஊத்துரயா..., பிச்சிப் புடுவேன் பிச்சி.. ராஸ்க்கல்

Jey said...

//“ ஷமி, எங்க லைட்டு” //

நம்ம புள்ளகளுக்கு இண்டிகேட்டருன்னா நல்லாத்தெரியும், அத விட்டுட்டு எங்கே லைடுனு கேட்ருக்கே..., உன்னை கைகாட்டாம...ஒரிகினல் டியூப் லைட்ட காட்டிருக்கா செல்லக் குட்டி...சந்தோசப் படு மச்சி...

அன்புடன் மலிக்கா said...

அச்சோ அச்சோ செம பல்பு

ஷம்ஹித்தா வின் குறும்பு
அரும்பின் மணம்போல்
கரும்பாய் இனிக்குது.


http://niroodai.blogspot.com/

என்னது நானு யாரா? said...

அருண்! இப்போ தானே பாபா கவுண்டிங்க் ஸ்டார்ட் ஆகுது..போக போக பாருங்க..வெளுத்து கட்டப்போறா!

இந்த காலத்து பசங்க...ம்! அப்பா! நாம ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்குது!

கருடன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு//

அது கையால இல்லை... வாயால... அங்கும் பல்பு, இங்கும் பல்பு.

Unknown said...

:)))

Unknown said...

கொய்யாலா ஊருக்கே மொக்கை போடுறா.. உனக்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்---hahaha..

repeatu..

அருண் பிரசாத் said...

நன்றி செளந்தர்

@ ஜெய்
என் பொன்னு பரவாயில்லையோ!

வாங்க மலிக்கா, முதல் வருகைக்கு நன்றி

@ என்னது நான் யாரா
கவுண்டவுன் இப்பதான் ஆரம்பிக்குதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

ok siva

கருடன் said...

@என்னது நானு யாரா?
//அருண்! இப்போ தானே பாபா கவுண்டிங்க் ஸ்டார்ட் ஆகுது..போக போக பாருங்க..வெளுத்து கட்டப்போறா!//

பாபா கவுண்டிங்க் இல்லை பங்காளி பாப்பா கவுண்டிங் டபுள் ஸ்ட்ராங். எனக்கு வேலை குறைஞ்சா சரி...

Thamira said...

குழந்தைகள் தரும் பல்புகள் பெறுவது சுவாரசிய‌ மகிழ்வு. தொடர்ந்து பகிர்க. ஒரு பதிவில் ஒன்றென்றில்லாமல் நான்கைந்தெனில் வருபவர்களுக்கு நல்விருந்தாக அமையும். :‍-))

velji said...

100 watts bulb!

சுசி said...

கியூட்டான பல்ப்.. ரெம்ப பிரகாசம் போங்க.

GSV said...

இப்ப புரியுது எங்கேந்து "Trainning" எடுகிறிங்கன்னு...yes very smart like me :) இந்த சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சுபோச்சு ஒய்!!! இனிமேல் எப்படியும் நல்ல பதிவா போடுவிங்க ங்கிற நம்பிக்கை வந்து இருக்கு. வாழ்த்துக்கள் !!! உங்களுக்கு இல்ல ஷாமி க்கு.

வெங்கட் said...

பாப்பா கையால பல்பு
வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்...

கூடிய விரைவில்
நமது அருண் அவர்கள்
தான் வாங்கிய பல்புகள் ( 3,67,908+ )
வைத்து ஒரு சிறப்பு பல்பு கண்காட்சி
ஏற்பாடு செய்வார்கள்
என்று அறிக்கப்படுகிறது..

Unknown said...

ஹா ஹா ஹா.. எப்படியெல்லாம் பல்பு வாங்கறீங்க..

ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது..

VELU.G said...

இதே மாதிரி நிறைய பல்பு வாங்கி வீடே பிரகாசமாக வாழ்த்துக்கள்

ஜெயந்தி said...

பல்ப் இல்ல ட்யூப் லைட்டே கொடுத்திருச்சு.

கோவி.கண்ணன் said...

:)

பல்பு கேட்டு வாங்கி இருக்கிங்க

அருண் பிரசாத் said...

@ ஆதிமூலகிருஷ்ணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். அப்படியே செய்யறேன்

நன்றி velji, சுசி

அவ்வ்வ்வ்வ்வ்வ் GSV

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

ஆமாங்க வெங்கட், வாங்க நீங்க பிளாக்ல இதுவரை வாங்கி இருக்கற 632,092 பல்பையும் சேர்த்து மொத்தம் ஒரு மில்லியன் பல்பு காட்சினு ஒரு கண்காட்சி வெச்சிறலாம்

அருண் பிரசாத் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு, ஜெயந்தி, Velu.G

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி. கண்ணண் சார்

மார்கண்டேயன் said...

//கொடுத்த 1 மணி நேரத்துக்குள்ள...//

உங்க கஷ்டம் புரியுது ஜெய்,

வருங்காலத்துல, 'டாடி, நீ ரொம்ப ஸ்மார்ட் டாடி' அப்படீன்னு ஒரு பதிவ அருண் கிட்ட இருந்து எதிர்பாக்கலாம் . . .

வால்பையன் said...

பல்பு பளீர்ன்னு எரியுது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஷம்ஹிதா... ஸோ ஸ்வீட்!
பொருத்தமான தலைப்பு! (ஒரிஜினல் பல்ப்!)

அருண் பிரசாத் said...

@ மார்கண்டேயன்

ஓ, இப்படி ஒரு விஷயம் இருக்குதா?

அருண் பிரசாத் said...

@ வால்பையன்

வாங்க, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ். தொடர்ந்து வாங்க

நன்றி Nizaamudeen

கருடன் said...

மச்சி நீ வாங்கினது எத்தனை வாட்ஸ் பல்பு??

கருடன் said...

50 + 1

NS Manikandan said...

பல்பை காட்டி பல்பாக்ய விதம் அருமை - சுட்டிகளின் சுட்டிடனதிற்கு அளவே இல்லை.


உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

Chittoor Murugesan said...

பாஸ் !
கழுகு வலைச்சரத்துல வெளியான வல்லரசு கனவுகளை படிச்சு கமெண்ட் போட்டிருந்திங்க. அந்த திட்ட சுருக்கத்தையாச்சும் பத்து பேருக்கு ஷேர் பண்ணலாமே

அருண் பிரசாத் said...

தொடர்ந்து 50 வது கமெண்ட்டை 4வது முறையாக போடும் டெரர் வாழ்க

முதல் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலக்கல் கலந்தசாமி & Chitoor S Murugaesan