Cricket Countdown....

Monday, July 26, 2010

A for அவஸ்த்தை



அருண்பிரசாத் னு எனக்கு பேரை வெச்சாலும் வெச்சாங்க, நான் படுற அவஸ்த்தை இருக்குதே, சொல்லி மாளாது. இந்த அவஸ்த்தை சின்ன வயசுலயே ஆரம்பிச்சிடுச்சி, 

ஸ்கூல்ல Attendanceல முதல் 4 பேருக்குள்ள வந்திடும், அதனால எடுத்தவுடனே வாத்தியாருங்க நம்மளதான் கும்முவாங்க. இதுல எங்க Class teacher மாத்தி யோசிக்கிறன்னு எல்லோரும் Alphabetical Orderல உட்காருங்கனார். கடைசி பெஞ்சுல சுகமா தூங்குன என்னை தாக்கி, சாரி, தூக்கி மொத பெஞ்சுல போட்டுடாங்க. 

அடுத்து, பரிட்சை ஹால்ல முதல் பெஞ்சுல உட்காரனும். பாத்துக்க வர்ற வாத்தி நமக்கு முன்னாடி நந்தி மாதிரி பெஞ்சு போட்டு உட்கார்ந்துடுவார். அந்த பக்கம் இந்தபக்கம் திரும்பமுடியாது. (அட, எல்லாரும் நல்லா பரிட்சை எழுதறாங்களானு பாக்கதாங்க)

உட்கார ஆளு சும்மா இருப்பாரா, நாம தீவிரமா ?! யோசிச்சிகிட்டு இருக்கும்போது (யாரது முழிக்கும்போதுனு படிக்கிறது, சின்னபுள்ளதனமா) இவரு “என்ன தம்பி பேப்பர் ரொம்ப கஷ்டமா?” ம்பார். (ஆமானு சொன்னா ஆன்சர் சொல்ல போறாரா? இல்லை Question மாத்த போறாரா). நாமளும் இளிச்சிட்டே ”பார்முலா யோசிக்கிறேன் சார்” னு (தமிழ் பரிட்சைல கூடதான்) புழுகனும்

அப்புறம், ஒருமுறை தமிழ் வாத்தியார் Class Teacherஆ வந்தார். வந்தவர் அதிரடியா எல்லோரும் நான் சொல்லுற வரிசைல தான் உட்காரனும்னு சொல்ல, யப்பா முதல் பெஞ்சுல இருந்து எஸ்கெப்னு நினைச்சா, தலைவர் “எல்லோரும் அகர வரிசைல உட்காருங்க”னிட்டார். மறுபடியும் வட போச்சு. பக்கத்துல இருந்த பாரதி பையன் எஸ்கேப். சரி போறான், நம்ம இலக்கியா  பொண்ணு பக்கதுல உட்காரும்னு சந்தோஷபட்டா, புள்ளைங்கள தனியா உட்கார வெச்சிட்டார்.

ஒரு வழியா, கஷ்டப்பட்டு சொந்த முயற்சியில் (படிச்சிதான்னு சொன்னா நம்பவா போறீங்க) காலெஜ் வந்தாச்சு. ஆனாலும் இந்த பெயர் பிரச்சினை விடல. Practical கிளாஸ்னு சொல்லி Attendance படி காலங்காத்தால 6.30 மணிக்கெல்லாம் வந்து attend பண்ணுங்கனு சொல்லிட்டாங்க. ராத்திரி பூரா குரூப் ஸ்டடிஸ் செஞ்சிட்டு (எதை படிச்சோம்னு கேட்க கூடாது) விடியற்காலை 6 மணிக்கு எழுந்துக்கறது எவ்வளவு கஷ்டம்னு பசங்களுக்குதான் தெரியும்.


போகுதுனு பொருத்துக்கிட்டா, இந்த Viva-Voce கேட்குறேனு வர்ற External வாத்தி தனக்கு எல்லாம் தெரியும்னு எங்க Mam முன்னாடி சீன் போட முதல் ஆளா வர்ற நம்மல போட்டு தாக்கு தாக்குனு தாக்கு வாங்க. மார்க்கு சராமாரியா அடிவாங்கும். இதை பார்த்து பயந்து மேனேஜ்மெண்ட் External ஐ convince (கொடுக்க வேண்டியத கொடுத்துதான்) பண்ணி பின்னாடி வர்றவங்களுக்கு மார்க் போடவெப்பாங்க.

இப்படி பல சா(சோ)தனைகள் இருக்கு, இந்த A வால. அதுக்கு இன்னும் 2 பதிவு  போடலாம் (இன்னும் ரெண்டா? Me பாவம்னு நீங்க சொல்லுறது கேக்குது) இதுக்கு மேல நாம பெயரை மாத்தி என்ன பிரியோஜனம். நாம என்ன டி.ராஜேந்தரா? ஏதோ, நாம பட்ட அவஸ்தைய என் பொண்ணு பட கூடாதுனு அவள் பெயரை "S" ல வெச்சிட்டேன். ங்கொய்யால, எவன் alphabetla உட்காரவெச்சாலும், அகர வரிசைல உட்காரவெச்சாலும் கவலையில்லை.



42 comments:

Jey said...

//அடுத்து, பரிட்சை ஹால்ல முதல் பெஞ்சுல உட்காரனும்.///

காப்பி அடிக்க முன்னாடி ஆளில்லாத கோவத்த... எப்படியெல்ல்லாம் மொக்கை போட்டு சம்மளிக்கிற...,

pinkyrose said...

ஐ நான் தான் ஃபர்ஸ்ட் பெஞ்ச் அட சே ஃபர்ஸ்ட் ஆள் வட எங்க?!

pinkyrose said...

அருண் சார் படிச்சுட்டு ரொம்ப சந்தோசம இருக்கு ஏன் சார்?
அதுலயும் அந்த அகர வரிசை ...
ஹா ஹா ஹா
ப்ச் பாக்க கொடுத்து வைக்கலையேன்னு ஒரு ஃபீலிங்!

pinkyrose said...

என்ன கொடுமை என்னொட பின்னூட்டம் காணோம்?!

அருண் பிரசாத் said...

@ Jey

யப்பா, இன்னும் இண்ட்லில சப்மிட் கூட பண்ணல, அதுக்குள்ள கமெண்ட்டா! சரி ஓட்டு போட்டுட்டு போங்க

காப்பியா? அப்பிடினா?

@ Pinky

உங்க வடைய ஜெய் நரி தூக்கிட்டு போய்டுச்சி

//ப்ச் பாக்க கொடுத்து வைக்கலையேன்னு ஒரு ஃபீலிங்//

இப்படி கூடவா ஃபீல் பண்ணுவீங்க. அவ்வ்வ்வ்வ்வ்

//என்ன கொடுமை என்னொட பின்னூட்டம் காணோம்?!//

கண்டுபிடிச்சிடலாம். சட்டம் தன் கடமையை செய்யும்

Jey said...

///நாமளும் இளிச்சிட்டே ”பார்முலா யோசிக்கிறேன் சார்” னு //

இங்க வந்து மொக்கை போட்டு எங்கள கொல்ரதுக்கு, அன்னிக்கே பரிட்சை ஹால்ல உக்காந்து யோசிச்சிருகே...

pinkyrose said...

ஆமா அந்த பேய் நீங்களா?
எங்க இருந்து இப்டியெல்லம் வருது?

pinkyrose said...

ஓட்டு போட முடியல என்னான்னு பாருங்க?

Karthick Chidambaram said...

தல, புள்ளைங்களுக்கு பேரு வைக்கைல எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம்.
நல்லவேலப்பா எங்கப்பா புத்திசாலி.
:)))))

செல்வா said...

வந்துட்டேன் ...!! இருங்க படிச்சிட்டு வந்திடறேன் ..!!

கருடன் said...

//யப்பா, இன்னும் இண்ட்லில சப்மிட் கூட பண்ணல, அதுக்குள்ள கமெண்ட்டா! சரி ஓட்டு போட்டுட்டு போங்க//

நானும் வந்துட்டேன்.... அருண் ஒட்டு போடா முடியல. error வருது (Wrong Referrel...)

செல்வா said...

///என் பொண்ணு பட கூடாதுனு அவள் பெயரை "S" ல வெச்சிட்டேன். ங்கொய்யால, எவன் alphabetla உட்காரவெச்சாலும், அகர வரிசைல உட்காரவெச்சாலும் கவலையில்லை.////
ரொம்ப நல்லவரா இருக்கீகளே ......!!

கருடன் said...

நீங்க பச்சை பச்சைய எழுதி இருக்க விஷயம் ரொம்ப நல்ல இருக்கு... அட mind voice சொன்னேன்பா.

செல்வா said...

//“எல்லோரும் அகர வரிசைல உட்காருங்க”னிட்டார். மறுபடியும் வட போச்சு.///

வச்சமுள்ள ஆப்பு ..!! ...!!

கருடன் said...

//நம்ம இலக்கியா பொண்ணு பக்கதுல உட்காரும்னு சந்தோஷபட்டா//

அப்பவே கேடியா? திருமதி.அருண் கொஞ்சம் கவனிக்க...

//கண்டுபிடிச்சிடலாம். சட்டம் தன் கடமையை செய்யும் //

சிப்பு போலீஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணுங்க...

சௌந்தர் said...

உங்கள் கஷ்டம் எங்களுக்கு சிரிப்பு வருது எங்களுக்கு அந்த கஷ்டம் கிடையாது நாங்க மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் போனது கிடையாது ஹா ஹா ஹா

Anonymous said...

அருண் பிரசாத் ன்னு பேரு வெச்சு நீங்க பட்ட அவஸ்தை நல்ல தமாஷா சொன்னிங்க நல்லா இருந்தது ...

உங்க சாதனைகள் பாகம் 2 எழுதுங்க படிக்கா நான் இருக்கே இல்லே பின்னே என்ன கவலை?

Chitra said...

A for அப்பாவி ....
A for அவ்வ்வ்வவ்.....
A for அய்யோ பாவம்....

செம காமெடிங்க.... ஹா,ஹா,ஹா,ஹா...

அருண் பிரசாத் said...

@ pinky

//ஓட்டு போட முடியல என்னான்னு பாருங்க?//

வாக்காளர் அடையாள அட்டை இருக்குதா? இல்லைனா சொல்லுங்க வேறு யாராவது பேர்ல போட்டுறலாம்

//ஆமா அந்த பேய் நீங்களா?//

நீ வேறமா, நானே அந்த A வை பாத்து மெரண்டு போய் இருக்கேன்

@ Karthic

//நல்லவேலப்பா எங்கப்பா புத்திசாலி.//

எனக்கு எங்க அப்பாரு பேர் வெக்கலையாம், யாரோ ஒரு நர்ஸ் வெச்சிதாம் ஆஸ்பிடல்ல. அவங்களதான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்

அருண் பிரசாத் said...

@ செல்வா,

//ரொம்ப நல்லவரா இருக்கீகளே//

பின்னாடி பொண்ணுகிட்ட யார் வாங்கி கட்டிக்கிறது

@ Terror

//அப்பவே கேடியா? திருமதி.அருண் கொஞ்சம் கவனிக்க...//

பேச்சி பேச்சாதான் இருக்கனும், இந்த கோட்டை தாண்டி நீ வரக்கூடாது, நானும் வரமாட்டேன்.

@ செளந்தர்

அம்பூட்டு நல்லவனாயா நீ

@ sandhya

//உங்க சாதனைகள் பாகம் 2 எழுதுங்க படிக்கா நான் இருக்கே இல்லே பின்னே என்ன கவலை?//

சொல்லிட்டீங்க இல்ல, இனி பாகம் பாகமா, பக்கம் பக்கமா எழுதி தள்ளிடுவோம்.

மக்களே! உங்களுக்கு ரத்தம் வந்தா நான் பொருப்புயில்லை. எல்லாம் sandhya வேண்டுகோளுக்காக தான்

அருண் பிரசாத் said...

@ Chitra

A for அடிமை
A for அச்சச்சோ
A for ஆண்டவா காப்பாத்து

இதை எல்லாம் விட்டுடீங்க!

அனு said...

Same Blood :(

அனு said...

ஒரு advantage என்னன்னா..

Homework சப்மிட் பண்ணும் போது நம்ம நோட் கீழ போய்டும். நம்ம turn வர்றதுக்குள்ள டீச்சர் எல்லோரையும் அடிச்சு முடிச்சு tired ஆகி இருப்பாங்க. அதனால, நம்ம just வலிக்கிற மாதிரி act குடுத்தா போதும்.. ஹிஹி...

ப்ரியமுடன் வசந்த் said...

தாங்ஸ் மச்சி ...

இவண்

கடைசி பெஞ்ச் ஆள்..

அருண் பிரசாத் said...

@ அனு

என் இனமுங்க நீங்களும்

//Homework சப்மிட் பண்ணும் போது நம்ம நோட் கீழ போய்டும். நம்ம turn வர்றதுக்குள்ள டீச்சர் எல்லோரையும் அடிச்சு முடிச்சு tired ஆகி இருப்பாங்க. அதனால, நம்ம just வலிக்கிற மாதிரி act குடுத்தா போதும்.. ஹிஹி...//

உங்க டீச்சர் பரவாயில்லை. எங்க டீச்சர் மொத்தமா திருத்திட்டுதான் அடிக்க கூப்பிடுவாங்க. மறுபடியும் என் நோட் மேல வந்திடும். அவ்வ்வ்வ்வ்...

அருண் பிரசாத் said...

@ பிரியமுடன் வஸந்த்

//தாங்ஸ் மச்சி ...

இவண்

கடைசி பெஞ்ச் ஆள்..//

வா மாப்ள.. உங்களுக்காக அடி வாங்குற தியாகிங்க நாங்க. ஒரு குவாடர் சொல்லேன்...

கருடன் said...

@அணு
//ஒரு advantage என்னன்னா..
Homework சப்மிட் பண்ணும் போது நம்ம நோட் கீழ போய்டும்.//

அப்போ வெங்கட் பேரு இருந்த அங்கயும் நல்ல அடி விழுமா?? என்ன கொடுமைங்க இது....

அருண் பிரசாத் said...

@ Terror

//அப்போ வெங்கட் பேரு இருந்த அங்கயும் நல்ல அடி விழுமா?? என்ன கொடுமைங்க இது....//

வெங்கட் பேர் மட்டும் இல்லை அவர் கூட யார் சேர்ந்தாலும் சங்க கொள்கைபடி கும்முறது நிச்சயம்

எல் கே said...

hahah arumai.. koncham busy boss athan vara mudiyala

dheva said...

தம்பி....@ நீங்கதான் நல்லா படிப்பீங்கள்ள..அப்புறமென்ன பயம்.....உங்கள மாதிரி பேரு வச்ச ஆளுக இருக்குறதுனாலதான நாங்க தப்பிக்கிறோம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Gayathri said...

ஆஹா குழந்தைக்கு பேரு வைகர்துல இப்படி ஒரு விஷயம் யோசிக்க வேண்டி இருக்கு..நல்ல வேளை நானும் பொண்ணுக்கு சு ல பேரு வச்சுட்டேன்..தமாஷான பதிவு..

அருண் பிரசாத் said...

@ LK

ஆணி அதிகம்னு பதிவுலக மொழில சொல்லுங்க சார்

@ Dheva

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்குறாங்கப்பா...

@ Gayathri

இந்தியா போயும் உங்க குசும்பு குறையலயா? ஒருத்தன் ஃபீல் பண்ணி எழுதுனா, உங்களுக்கு காமெடி பீசா தெரியுதா?
(சும்மா, தமாசுக்கு சிஸ்டர்)

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..

நம்மளது " V " -ங்க..
எப்பவும் Last 4 பேர்ல
ஒருத்தரா தான் வரும்..

இவரு சொன்னதுக்கு
Opposite-ஆ எனக்கு
எல்லாம் நல்லதாவே நடக்கும்..

அதுக்கு பேரு மட்டுமா
காரணம்..? - இல்ல..
என் மனசும் நல்லதா இருந்தது..

அது தான் காரணம்னு
எங்க மிஸ் சொன்னாங்க..

அனு said...

@வெங்கட்
//அதுக்கு பேரு மட்டுமா
காரணம்..? - இல்ல..
என் மனசும் நல்லதா இருந்தது.//

ஆமாங்க.. மத்தவங்கள அடி வாங்க விட்டுட்டு தள்ளி நின்னு வேடிக்கை பாக்குற நல்ல மனசு!!!

ஆனா, நாங்கல்லாம் உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க.. (மத்தவங்களுக்கு கிடைக்க வேண்டியத கூட) எவ்வளவு கொடுத்தாலும் வலிக்காத மாதிரியே வாங்கிப்போம்..

http://rkguru.blogspot.com/ said...

///ஒரு வழியா, கஷ்டப்பட்டு சொந்த முயற்சியில்///

கண்டிப்பா நான் நம்புகிறேன்.... நல்ல துடிப்பான பதிவு வாழ்த்துகள்..

ஜில்தண்ணி said...

அதுக்குத்தான் எனக்கு இப்டி பேரு வச்சிடாங்க போல

நான் எங்கையும் கடைசி தான் பாருங்க

Anonymous said...

ஊன்மைதான்.ஆனா உங்க கஷ்டம் சிரிப்பை தான் வரவழைக்கிறது

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

நான் சொல்ல வேண்டிய பதிலை அனு சொல்லிட்டாங்க

@ குரு

நன்றி குரு

@ யோகேஷ்

உம்... கொடுத்து வெச்சவங்க தான்

@ MKRpost

வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான்தான் லாஸ்ட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்

மங்குனி அமைச்சர் said...

பேசாம நீங்க ஆல்பாபடிக் ஆடர்ணா உங்க கிளாசுக்கு முதல் கிளாசுல போய் உட்காந்திங்கன்னா , கடைசில இருப்பிங்க ... எப்பூடி

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

கடைசியா வந்து நீங்க கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட்னு நிரூபிச்சிட்டீங்க...

@ மங்குணி

யப்பா... இவரு நம்மல பெயில் பண்ண வழி பண்ணுறாரு

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நான் லாஸ்ட் பென்ச்ல லாஸ்ட் ஆளு.