Cricket Countdown....

Monday, July 12, 2010

ஒலக கோப்பய செயிச்சது ஆறு?

ஒரு வழியாக கால்பந்து உலகக்கோப்பையை ஸ்பெயின் ஜெயிச்சிட்டாங்கப்பா. ஆனா இதுக்கு எல்லாரும் பண்ணாங்க பாருங்க ஒரு அழிச்சாட்டியம், யப்பா தாங்க முடியலை.

ஸ்பெயினும், ஹாலந்தும் ரொம்ப கஷ்டப்பட்டு, பெரிய பெரிய அணிகளான பிரெசில், அர்ஜண்டினா, ஜெர்மனி எல்லாரையும் ஜெயிச்சி இறுதி போட்டிக்கு வந்தா? ஏதோ ஆக்டோபஸ் ஜோசியமாம் அதை பார்த்து ஸ்பெயின் தான் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க.



நம்ம டவுட் என்னாநா:

1. ஆக்டோபஸ் ஜோசியம் உண்மைனா, எல்லா போட்டியையும் இப்படியே நடத்தி இருக்கலாம்ல (கோடி கோடியா செலவு மிச்சம்)
2. அப்ப ஆக்டோபஸையும் சேர்த்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்காக விளையாடி இருக்காங்க (கள்ள ஆட்டம்?)
3. ஆக்டோபஸ் தன் உணவுக்காக ஏதோ ஒரு பெட்டியை திறக்க, அதுல ஸ்பெயின் கொடி இருந்ததால, ஸ்பெயின் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க. யாராவது இந்தியா கொடி அதுல வெச்சிருந்தா, இந்தியா ஜெயிச்சிருக்கும்ல!
4. சரி, கொடிக்கு பதிலா, ஒரு ஸ்பெயின் வீரரையும், ஒரு ஹாலந்து வீரரையும் தொட்டில இறக்கிவிட்டு இருந்தா, ஆக்டோபஸ்க்கும் நல்ல சோறு கிடைச்சிருக்கும், அந்த நாட்டுக்கும் புதுசா நல்ல Players கிடைச்சிருப்பாங்க
5. கடைசியா என் டவுடுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க, உலககோப்பையை ஜெயிச்சது ஸ்பெயினா? ஆக்டோபஸா?


ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த உலக கோப்பை இறுதி போட்டில ஸ்பெயின் Famous ஆச்சோ இல்லையோ, இந்த ஆக்டோபஸ் உலக Famous ஆகிடுச்சு.

சரியாருக்காவது உங்க பிளாக் Famous ஆகுமானு தெரிஞ்சுகனுமா? என்கிட்ட முதலை ஜோசியம் இருக்கு, ஆனா நீங்க அது வாயில கைவிட்டு பார்க்கனும். கடிச்சா நீங்க கண்டிப்பா Famous.

17 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெமோ காட்டுவீங்களா பாஸ்?(எப்படி முதலை வாயில கைய விடுறதுன்னு)

Jey said...

///ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த உலக கோப்பை இறுதி போட்டில ஸ்பெயின் Famous ஆச்சோ இல்லையோ, இந்த ஆக்டோபஸ் உலக Famous ஆகிடுச்சு.///

இப்பத்தான், அந்த ஆக்டோபஸூக்கு, நல்ல தீனி போடுறாங்களாம், அதுல ஒருவாளி மண்ண அள்ளி போடுறீங்களே பாஸ்., மேனகா காந்திக்கு மெயில் அனுப்புனாதான், நீங்க சரிப்படுவீங்க...

Unknown said...

//இந்த உலக கோப்பை இறுதி போட்டில ஸ்பெயின் Famous ஆச்சோ இல்லையோ, இந்த ஆக்டோபஸ் உலக Famous ஆகிடுச்சு//

True..Brother..

அனு said...

ஒண்ணு கவனிச்சீங்களா?? அது எப்பவுமே வலது பக்க டப்பாவ தான் choose பண்ணுது.. (என்ன ஒரு கண்டுபிடிப்பு!!!)

//என்கிட்ட முதலை ஜோசியம் இருக்கு, ஆனா நீங்க அது வாயில கைவிட்டு பார்க்கனும்//

ஃபர்ஸ்ட்டு முதலை brush பண்ணிச்சா??

Gayathri said...

"ஆக்டோபஸ் ஜோசியம் உண்மைனா, எல்லா போட்டியையும் இப்படியே நடத்தி இருக்கலாம்ல (கோடி கோடியா செலவு மிச்சம்)"

ஆமா இந்த கிரிகெட் சூதாட்டமும் ஒழிந்துபோகும்..

"கடைசியா என் டவுடுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க, உலககோப்பையை ஜெயிச்சது ஸ்பெயினா? ஆக்டோபஸா?"

மூட நம்பிக்கை தான் ஜெயிச்சுது!!

அருண் பிரசாத் said...

@ Jey

//மேனகா காந்திக்கு மெயில் அனுப்புனாதான், நீங்க சரிப்படுவீங்க...//

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம், என்ன இது சின்ன புள்ளதனமா complaint பண்ணிட்டு. Be Careful. நான் என்னை சொன்னேன்

@ரமெஷ்

கண்டிப்பா வாங்க, உங்களை வெச்சே ஒரு டெமோ காட்டிறலாம்

@ கே ஆர் பி

வருகைக்கு நன்றிங்க அண்ணா

அருண் பிரசாத் said...

@ அனு

ஆக்டோபஸ் ஜோசியத்தில் அறிய கண்டுபிப்பு செய்த அனுவுக்கு ஒரு ஆக்டோபஸ் பார்சல்

//ஃபர்ஸ்ட்டு முதலை brush பண்ணிச்சா??//

உங்களை கையைதான விட சொன்னேன், தலையை இல்லையே

@ Gayathri

//மூட நம்பிக்கை தான் ஜெயிச்சுது!!//

ஏன் இவ்வளவு சீரியஸா யோசிக்கிறீங்க. எது ஜெயிச்சதோ இல்லையோ, ஹாலாந்து கண்டிப்பா தோத்துச்சி

pinkyrose said...

ஆமா வாத்தியாருக்கே சந்தேகம் வந்தா எப்புடி?

pinkyrose said...

27 வோட்டு சார்

அருண் பிரசாத் said...

@ PinkyRose

//ஆமா வாத்தியாருக்கே சந்தேகம் வந்தா எப்புடி//

யார் அது? யார் அது? நமக்கு தெரியாம!

//27 வோட்டு சார்//

நோட் பண்ணுங்க, 24* போட்டு இருக்கேன் (*) னா நாட் அவுட்

ஹி ஹி ஹி. நீங்க நக்கீரன் வீட்டுக்கு பக்கத்து வீடா? (Just for Joke)

வெங்கட் said...

// இந்தியா கொடி அதுல வெச்சிருந்தா,
இந்தியா ஜெயிச்சிருக்கும்ல! //

எவ்ளோ செலவானாலும் சரி..
அடுத்த World Cup Cricket-க்கு
அந்த ஆக்டோபஸ்சை இந்தியா
கொண்டு வர்றோம்..

அதுக்கு வேணும்கறதையெல்லாம்
குடுத்து.. நல்லா செமத்தியா கவனிச்சு..,
இந்தியா கொடி இருக்குற பாக்சை
Choose பண்ண வெக்கிறோம்..

Match ஆடாமலே கோப்பையை
தூக்கிட்டு ஓடறோம்..
எப்புடி..??

அருண் பிரசாத் said...

கண்டிப்பா! தூக்குறோம், World Cup ஐ தாங்க. எல்லா செலவும் நீங்க பாத்துக்கோங்க. மத்தவங்க வந்தா மட்டும் போதும், வந்தா மட்டும் போதும்

கருடன் said...

@அருண்
//1. ஆக்டோபஸ் ஜோசியம் உண்மைனா, எல்லா போட்டியையும் இப்படியே நடத்தி இருக்கலாம்ல (கோடி கோடியா செலவு மிச்சம்)//

நடத்தி இருக்கலாம் அப்புறம் கால்பந்து இல்லாம கால்பந்து உலகக்கோப்பைய? அப்படின்னு நீங்க அதுக்கும் பதிவு போட்டு எங்கள அழவப்பிங்களே........(ப்ளாக் சொந்தக்காரர் வரதுக்கு முன்னாடி ஓடுட டெரர்....)

அருண் பிரசாத் said...

@ Terror

ஹி ஹி ஹி எங்க போதைக்கும் ஒரு ஊருகாய் வேணும்ல. அப்படி இல்லைனா உங்கள வெச்சி ஒரு பதிவ போட்டுற வேண்டியதுதான்

Anonymous said...

"சரியாருக்காவது உங்க பிளாக் Famous ஆகுமானு தெரிஞ்சுகனுமா? என்கிட்ட முதலை ஜோசியம் இருக்கு, ஆனா நீங்க அது வாயில கைவிட்டு பார்க்கனும். கடிச்சா நீங்க கண்டிப்பா Famous."

நீங்க ரொம்ப குசும்பு என்று தெரிய இது ஓன்று போதுமே...நல்லா ரசித்தேன் நன்றி

Anonymous said...

"சரியாருக்காவது உங்க பிளாக் Famous ஆகுமானு தெரிஞ்சுகனுமா? என்கிட்ட முதலை ஜோசியம் இருக்கு, ஆனா நீங்க அது வாயில கைவிட்டு பார்க்கனும். கடிச்சா நீங்க கண்டிப்பா Famous."

நீங்க ரொம்ப குசும்பு என்று தெரிய இது ஓன்று போதுமே...நல்லா ரசித்தேன் நன்றி

சாமக்கோடங்கி said...

அய்யா.. இந்த முதலை ஜோசியம் மேட்டர் சூப்பர்.. நாட்டுல நாம மட்டும் தான் மூடப் பழக்க வழக்கங்கள்ள முடங்கிக் கிடக்கிறோம்னு நெனச்சேன்.. இல்ல.. எல்லா ஊர்லயும் மனிதர்கள் இப்படிதானடா மடையான்னு சொல்லிட்டாங்க...

நன்றி..