"நான் இந்தியன் அல்ல"
1. ரமெஷ் - இந்த ஆள் சினிமா ரொம்ப பாக்குது. so, நம்கு ஊர் சுத்திகாட்ட டைம் கிடையாது
2. பட்டாபட்டி -எழுதுன பதிவைவிட கமெண்ட் overaa வருது. அத reply பண்ணவே டைம் போதாது
3. வெங்கட் - சாரி, இவர் பிஸியோ பிஸி மனைவிக்கு புடவை எடுக்க போகனும், பசங்களுக்கு homework செய்யனும்.
4.பெயர் சொல்ல விருப்பமில்லை - பாவம் பொண்ணு கேட்குற கேள்விக்கு பதில் சொல்லவே நேரம் இல்லை
5. அனு - வெங்கிய கலாய்கரதே Full Time Job, நம்கி Appointment தராது
6. ப்ரியமுடன் வஸந்த் - ஒரு தொடர்பதிவுக்கு அல்லாரையும் மாட்டிவிட்டுச்சி, பதிவுல்கம் இத அடிக்க தேடுது, So நம்கூட வராது
(வெளிநாட்டு தமிழ் தொடர்ந்து எழுத கடினமாக இருப்பதால், நம் தமிழிலேயே இனி தொடருவோம்)
முதலில் எங்கள் நாட்டில் இல்லாத ஆட்டோவில் ஏறி ஒரு கோவிலுக்கு போனேன். நல்லா பெயர் வெச்சாங்கையா, ஆட்டோனு ஒரே ஆட்டோ ஆட்டுனு ஆட்டி எடுத்துட்டான். கிடைக்கிற சந்துல, 2 பஸ்க்கு நடுவுலலாம் ஓட்டுராங்க. ஒரு வழியா உயிர்பிழைத்து கோவிலுக்கு போனேன்.
இந்த நாட்டின் கோவில்கள் மிக அருமையான கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை பார்த்து வியந்தேன். அவற்றை சரியாக பாராமரிக்க வேண்டும். அங்கு வரும் பெண்களும் அவர்களின் உடையும் வண்ணமயம்.
இந்த ஆட்டோவே வேணாம் சாமினு, அடுத்து பேருந்தில் கடற்கரைக்கு போனேன்.ஏதோ மாநகர பேரூந்தாம்ல இதுல ஏறி உட்கார்ந்தா ஏதோ ஹெலிகாப்டர்ல உட்கார்ந்த மாதிரி இருந்தது. நீங்க வேற பெருசா கற்பனை பண்ண வேண்டாம், நான் அதோட ஓட்டை உடைச்சல் சத்தத்தை சொன்னேன். பக்கத்துல இருந்த புண்ணியவான் நான் அவர் வீட்டு தலையணை மாதிரி நல்லா என் தோள் ல சாஞ்சு தூங்குறார். இன்னும் என்னடானா இந்த மாதிரி பஸ்ல மனிஷனை ஏத்திட்டு போறதே பெருசு போதாததுக்கு பஸ் மேல சைக்கிள், சாமான்கள், மூட்டை இன்னும் எதைஎதையோ ஏத்துறாங்க.
ஆனா இந்த மெரீனா கடற்கரை, எவ்வளவு பெருசு! எவ்வளவு கூட்டம்! எவ்வளவு குப்பை! குப்பைத்தொட்டியை தவிர எல்லா இடத்திலும் குப்பை இருக்கு.
அடுத்து மைசூருக்கு போனேன். உலகதுலயே அதிக Employers இருக்குற நிறுவனம்னு பெருமை உள்ள ரயில்ல பயணம், உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இத பத்தி சொல்லியே ஆகணும். இது தான் இந்த நாட்டிலேயே வேகமா போகும் வாகனமாம். நடுவுல டிரைவருக்கு வழி மறந்துபோச்சானு தெரியலை. அங்க அங்க அரை மணிநேரம் நிருத்திபுடராருயா! சிக்னல் கிடைகலையாம். இதுல பான் பராக் நாற்றம் வேற வண்டி பூரா. நாங்க எங்க ஊருல இந்திய டீயை விரும்பி குடிப்போம் அந்த நினைப்புல ரயில்ல விற்கிர டீயை குடிச்சா, வாய்ல வைக்க முடியல. கிட்டதட்ட 3 மணிநேரம் லேட்டா போய் சேர்ந்தேன் . ஆனா, இந்த மைசூரு அரண்மனை அருமைங்க. என்னமா வாழ்ந்து இருக்காருயா அந்த மஹாராஜா. Climate உம் நல்லா இருந்தது.
அடுத்து அங்க இருந்து ஆக்ரா போனேன், ஒரு கார்ல ஏறி தாஜ்மகாலுக்கு போனேன். என்னா டிராபிக்பா. வண்டி நத்தை போல ஊருது. அங்க அங்க டிராபிக் போலிசு வண்டிய நிறுத்தி பணம் வாங்குறார். இது இங்க வழக்கமாம் (மாமூலாம்). அடிக்குற வெயில்ல Non Ac கார்ல போனா நீங்க கருவாடுதான். ஆனாலும், அந்த பெரிய ரோடை நல்லா மெயின்டேய்ன் பண்ணுறாங்கப்பா....
ஆணிய புடுங்க வேணாம்னுட்டு, நடந்தா - அய்யோ, பிளாட்பாரத்தை கானோம். எல்லாத்துலயும் கடை போட்டு இருக்காங்க. நீங்க இங்க நடக்கும்போது கவனம் கொள்ளவேண்டியது என்னனா முதல்ல லாரி, பிறகு பஸ், பிறகு கார், பிறகு பைக் எல்லாத்துக்கும் வழிவிட்டுட்டு பிறகே நீங்க போகனும். என்னாது? டிராபிக் சிக்னல்லா! அதை பார்த்து போனா உங்களுக்கு சங்குதான்.
ஆனா, தெரு ஓரமா இருக்குற சாப்பாட்டு கடைல கூட்டம் இருக்கு. ஏழைல இருந்து எல்லாதரப்பு மக்களும் சாப்பிடுறாங்க. விலையும் ரொம்ப குறைவு. ருசியும் அருமை. இந்த நாடு எல்லா துறைகளிலும் வேகமாக முன்னெறிவருகிறது. மக்களின் உழைப்பும், அப்துல் கலாம் போன்ற அறிவாளிகளும் இணைந்து விரைவில் இதை உலகின் பெரிய வல்லரசாக மாற்றுவர். கண்டிப்பாக படங்களில் காட்டுவது போல இந்தியா கிடையாது 20% அப்படி இருந்தால் 80% நன்றாக முன்னேறியுள்ளது. சிறு மாற்றங்களையும், சில திருத்தங்களையும் செய்தால் இந்தியா அழகான, வலிமையான நாடு.
டிப்ஸ்:
1. நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், இந்தியாவில் பிரதமர் பதவியை எளிதாக அடையலாம். அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்2. மேலும் இங்கு எந்த ஒரு பதவியையும் அடைய நீங்கள் ஒரு அரசியல்வாதியின் வாரிசாகஇருக்க வேண்டும்
3. இல்லையெனில், வெட்டியாய் இதை போல எழுதியும், பேசியும் மட்டுமே வாழ்நாளை முடிக்க வேண்டும்.
இந்த 3 க்கும் நீங்கள் உடன்பட்டால் - நீங்கள் "இந்தியர்" ஆக தகுதி உண்டு
ஜெய் ஹிந்த்!
டிஸ்கி: இதில் சொல்லிய கருத்துக்கள், பெரும்பாலும் இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்து சென்ற என் வெளிநாட்டு நண்பர்கள் சொல்லியது.
அடுத்து தொடர்பதிவுக்கு வருபவர் - "பெயர் சொல்ல விருப்பமில்லை"
கரு - கடவுள் ஒரு வாரம் லீவில் செல்கிறார், நீங்கள் அவர் பொறுப்பை ஏற்றால் என்ன என்ன செய்வீர்கள்?
தலைப்பு - நான் கடவுள்
கலக்குங்க......
19 comments:
Good Post...
தொடர்பதிவுக்கு அழைத்த(இழுத்துவிட்ட)தற்கு நன்றி!
கொஞ்சம் டயம் கொடுங்க, ப்ளீஸ்.
//1. நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், இந்தியாவில் பிரதமர் பதவியை எளிதாக அடையலாம். அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்
2. மேலும் இங்கு எந்த ஒரு பதவியையும் அடைய நீங்கள் ஒரு அரசியல்வாதியின் வாரிசாகஇருக்க வேண்டும்
3. இல்லையெனில், வெட்டியாய் இதை போல எழுதியும், பேசியும் மட்டுமே வாழ்நாளை முடிக்க வேண்டும்.///
எங்க இந்தியாவை பத்தி தப்பு தப்பா பேசின மொரிசியஸ் அருணை வன்மையா கண்டிக்கிறோம்.
நல்லா இருந்தது. தொடர் பதிவு எழுதியதற்கு மிக்க நன்றி அருண்.
நல்லா எழுதி இருக்கீங்க.. கடைசி டிப்ஸ் சூப்பர்.. அதிலும் மூணாவது :))))
rk guru
Thanks, Come again
@ பெ.சொ.வி
ஹி ஹி ஹி யாம் பெற்ற இன்பம் (துன்பம்), பெருக இவ்வையகம்
@ ரமெஷ்
//எங்க இந்தியாவை பத்தி தப்பு தப்பா பேசின மொரிசியஸ் அருணை வன்மையா கண்டிக்கிறோம்//
ஆமாம்பா, இதை மறந்துட்டேன். டிப்ஸ்ல 4வது பாய்ண்ட், எல்லாவற்றையும் வன்மையாக கண்டித்துவிட்டு சொந்த வேலையை பார்க்க போய்விடுவது
@ சுசி
நன்றி சுசி, தொடர்ந்து வாங்க
//நல்லா பெயர் வெச்சாங்கையா, ஆட்டோனு ஒரே ஆட்டோ ஆட்டுனு ஆட்டி எடுத்துட்டான்//
ஹாஹாஹா.. சூப்பரப்பு...
வர வர உங்க எழுத்து நடை நல்ல இம்ப்ரூவ் ஆகிட்டே போகுது.. keep it up..
காமெடியா சொன்னாலும் உண்மைய நச்-ன்னு சொல்லிட்டீங்க.. அரசியல்ல எல்லாம் இறங்கிட்டீங்க!! கலக்குங்க..
(வர வர என் பேர் எல்லா இடத்திலயும் அடி வாங்குது.. ஒரு வேளை நானும் famous ஆகிட்டேனோ?? :-P)
நன்றி அனு, காமெடியாதான் ஆரம்பிச்சேன் ஆனா போக போக பதிவு சீரியஸ் ஆகிடுச்சு. ஆனா, தவிர்க முடியலை.
இன்னும் பிளாக் ஆரம்பிச்சிங்கனா, சூப்பர் Famous ஆகிடுவீங்க
நல்லா இருக்குங்க....
Nice Post :-) Disci - tippsukkum seththaa ?
nallaarukku thala. kalakkungka.
ஹேய் பதிவு பட்டாசு....
கல்க்குறேள் போங்கோ....
அருமையா இருக்கு.என்ன இருந்தாலும் நம்ம நாடு மதிரி வேற ஒரு இடம் இந்த பூமியில் கன்டிப்பா இல்லை.அத்தனை கோடி மக்கள், எத்தனை அழகான இயற்க்கை வளம்.
குத்தம் குறை இல்லம எதுதான் இருக்கு.கூடிய விரைவில் இந்தியா நல்ல மற்றங்களை சந்தித்து முன்னேற்றம் அடைய நம்மால் முடிந்ததை செய்ய சக இந்தியர்களை வேண்டி கேட்டுக்கொள்கிரேன்.
பதிவு நல்லாருக்குங்க. ஆனா டிப்ஸில் உடன்பாடில்லை. மன்மோகன் சிங் வெளிநாட்டவரா... அவர் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சி கணக்கற்றது.
அரசியலில் வாரிசு என்பதால் மட்டுமே வந்து நிலைத்து விட முடியாது. நிர்வாகத் திறமை வேண்டும்.
@ கலாநேசன், Jey
நன்றி, தொடர்ந்து வாங்க
@ Karthick Chidambaram
நன்றி, டிப்ஸ் நம்ம மூளைல இருந்துவந்தது.
ஒரு டவுட், உங்களுக்கும் ப.சிதம்பரத்திற்கும் சம்மந்தம் இல்லையே
@ வஸந்த்
வாங்கோ, நன்றி பிள்ளைவால்
@ Gayathri
கண்டிப்பாக அருமையான நாடுதான். உங்கள் விருப்பப்படி இந்தியா முன்னேற்றம் அடையும். எனக்கும் நம்பிக்கை உண்டு
@ விக்னேஷ்வரி
முதல் வருகைக்கு நன்றிங்க.
// டிப்ஸில் உடன்பாடில்லை. மன்மோகன் சிங் வெளிநாட்டவரா... அவர் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சி கணக்கற்றது. //
மன்மோகன்சிங் தலைமையில், நல்ல முன்னேற்றம்தான். ஆனால், அந்த பதவியை வெளிநாட்டில் இருந்து வந்த
ஒருவர் " வேண்டாம் " என்று மறுத்ததால் தான் அது மன்மோகன் சிங்கிற்கு வந்தது.. இதை மறுக்க முடியாதே..!!
// அரசியலில் வாரிசு என்பதால் மட்டுமே வந்து நிலைத்து விட முடியாது. நிர்வாகத் திறமை வேண்டும். //
அரசியலில் வாரிசுகளால் உண்மையிலேயே திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைகாமல் போய்விடுகிறது
@ அருண்.,
// மன்மோகன்சிங் தலைமையில், நல்ல முன்னேற்றம்தான். ஆனால், அந்த பதவியை வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் " வேண்டாம் " என்று மறுத்ததால் தான் அது மன்மோகன் சிங்கிற்கு வந்தது.. இதை மறுக்க முடியாதே..!! //
ஆமாம்.. உண்மைதான்.. மறுக்க முடியவில்லை..!!
வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிங்க வெங்கட்
Post a Comment