Cricket Countdown....

Wednesday, January 19, 2011

மொரீசியஸ் தைப்பூசக்காவடி...

முஸ்கி: நாளைக்கு தைப்பூசம்

மலைக்கோவில்
தேர்
மொரீசியஸ்ல தமிழ் ஆட்சிமொழினு ஒரு பதிவுல சொல்லி இருந்தேன். தமிழர்களும் அதிகம். தமிழ் கடவுள் முருகன் மேல அளவுகடந்த பக்தி உள்ளவர்கள். பெரும்பாலானவர்களுக்கு சிவனும், முருகனும் குலதெய்வமாக இருக்கிறார்கள். தைப்பூச காவடியும், மகாசிவராத்திரியும் இங்கு தமிழ் நாட்டை விட வெகு விமரிசையாக கொண்டாடுறாங்க. இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க.



வரும் நாளைக்கு (ஜன்வரி 20) இங்க தைபூச காவடி. சென்ற வருடம் நான் இங்க வந்த புதுசுல பார்த்து அசந்து போயிட்டேன். இங்க பல தமிழர் கோவில்கள் இருக்குது. முருகன், துர்கை, சிவன் தான் பிரதானம். கோவிலுக்கு தமிழ் பேசும் குருக்கள்களை இந்தியா, இலங்கை பகுதில இருந்து வர வைக்கறாங்க.

காவடி ஊர்வலம்

கட்டர்போன்ஸ் (Quatre Bornes) என்ற இடத்துல இருக்கற முருகன் மலை கோவில் கொஞ்சம் பிரசித்தி பெற்றது. போன வருஷம் காவடிக்கு அங்க போயிருந்தேன். நம்ம தமிழ் நாட்டு கோவில மாதிரியே கட்டிட அமைப்பு, மலை மேல முருகன், தமிழ் குருக்கள், பாலாபிஷேகம் என தமிழ் நாட்டுல இருந்த உணர்வு.
ஆணி செருப்பு


காவடியும் நம்ம ஊர் மாதிரியே பால் காவடி, பழக்காவடி, வேல் காவடி, புஷ்பகாவடினு அமர்களபடுத்தினாங்க. இதுக்காக 10 நாள் விரதம்லாம் இருப்பாங்கலாம். எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஆட்டம் பாட்டத்துடன் வந்தாங்க. பெண்கள், நம்ம ஊருல இப்போலாம் விஷேசநாட்கள்ல கூட பார்க்க முடியாத டிரெடிஷனல் தாவணி, பாவாடை சட்டைல வந்து இருந்தாங்க.

சுவாமி வீதியுலா


(இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது.  வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி  தொத்திக்கிச்சே... சே...)

டிஸ்கி: கமெண்ட்ல அரோகரா போட தடை விதிக்கப்படுகிறது.


63 comments:

Madhavan Srinivasagopalan said...

முருகனுக்கு காவடியாட்டமா ?..
அப்போ மொதோ 'பஞ்சாமிர்தம்' எனக்குத்தான்...

இம்சைஅரசன் பாபு.. said...

//இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது. வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி தொத்திக்கிச்சே... சே...)//

அப்போ ரமேஷ் மாதிரி உண்டக்கட்டி வாங்கி தின்ன போட்டோ போடலை ஏன் அருண் மக்கா ......

Madhavan Srinivasagopalan said...

// இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க. //

ஹி.. ஹி..
தமிழ் நாட்டுல சாமி / கோவில் கொண்டாட்டம்னாலே அரசு விடுமுறை கெடையாதுங்க..
காரணம் சொல்லத் தேவையில்லை..

அருண் பிரசாத் said...

@ Madhavan Srinivasagopal
// முருகனுக்கு காவடியாட்டமா ?..
அப்போ மொதோ 'பஞ்சாமிர்தம்' எனக்குத்தான்...//
வடைக்கு பதில் பஞ்சாமிர்தமா.... எடுத்துக்கோங்க எடுத்துக்கொங்க அப்படியே அல்கு குத்திகறீங்களா!

@ இம்சைஅரசன் பாபு..
// அப்போ ரமேஷ் மாதிரி உண்டக்கட்டி வாங்கி தின்ன போட்டோ போடலை ஏன் அருண் மக்கா ......//
இங்க உண்டகட்டி தரதில்ல மக்கா

சௌந்தர் said...

முருகனுக்கு அனைத்து இடத்திலும் மரியாதையை தான் இங்கயும் அரசு விடுமுறை விட சொல்வோம்...

அருண் பிரசாத் said...

@ Madhavan Srinivasagopalan
// // இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க. //

ஹி.. ஹி..
தமிழ் நாட்டுல சாமி / கோவில் கொண்டாட்டம்னாலே அரசு விடுமுறை கெடையாதுங்க..
காரணம் சொல்லத் தேவையில்லை..//

No politics...ஆனா ஓட்டு மட்டும் போட சொல்லுவோம் பதிவுக்கு.... போடீங்களா?

Madhavan Srinivasagopalan said...

// No politics.. //

நாட்டுல நடக்குறதச் சொன்னா.. அது அரசியலாமே.. அடி ஆத்தி..

//.ஆனா ஓட்டு மட்டும் போட சொல்லுவோம் பதிவுக்கு.... போடீங்களா? //

அதெல்லாம் சரியா போட்டுடுவோமில்லை.. சரியாப் போட்டோமான்னு பாத்துடுங்க ஒரு தடவை.. அது சரி.. தமிழ்மணத்துல எப்படி சரி பாக்குறது ?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

மொரீசியஸ் பற்றி புதிய தகவல்கள். நன்றி!

Unknown said...

முருகனுக்கு அரோகரா.... கந்தனுக்கு அரோகரா..
அரோகரா..அரோகரா..அரோகரா..அரோகரா..அரோகரா..அரோகரா.அரோகரா...அரோகரா..
இப்படிக்கு தடை விதித்தாலும் அரோகரா போடுவோர் சங்கம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி: கமெண்ட்ல அரோகரா போட தடை விதிக்கப்படுகிறது.///

அரோகரா அரோகரா அரோகரா(நான் அரோகரான்னு சொல்லலை.அரோகரா அரோகரா அரோகரா ன்னுதான் சொன்னேன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@அருண்

மொரீசியஸ் பற்றி புதிய தகவல்கள். நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்சைஅரசன் பாபு.. said...

//இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது. வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி தொத்திக்கிச்சே... சே...)//

அப்போ ரமேஷ் மாதிரி உண்டக்கட்டி வாங்கி தின்ன போட்டோ போடலை ஏன் அருண் மக்கா ......//

நம்ம ரெண்டுபேரும் நம்ம ஊர் கோவில்ல சாப்பிட்ட போட்டோ இருக்கு. போடவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோவில்ல ஒரு பிகர் கூட இல்லையா? ஐயோ

Unknown said...

இங்கேயும் தைப்பூச விழா களைக்கட்ட துவங்கிவிட்டது, பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்க்கடவுளுக்கு திருவிழா... நம் சார்பிலும் பிரார்த்தனைகளை சொல்லி வைப்போம்...

Unknown said...

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வு மொரிஷியஸில் உள்ளவர்களுக்கும் இருக்கும் என்பது உண்மை தானே..
பதிவிலுள்ள படங்கள் அருமை

மங்குனி அமைச்சர் said...

(இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது. வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி தொத்திக்கிச்சே... சே...)///

ஹி.ஹி.ஹி................... அவ்ளோ தூரத்துல இருக்க அப்படின்னாலும் உனக்கும் வந்துடுச்சே ........... ரொம்ப மோசமான தொத்து வியாதியா இருக்கும் போல ?

'பரிவை' சே.குமார் said...

கந்தனுக்கு அரோகரா...
கடம்பனுக்கு அரோகரா...
முருகனுக்கு அரோகரா...
குமரனுக்கு அரோகரா...

அரோகரா மட்டும்தான் சொல்லக்கூடாதுன்னு உங்க சட்டம்... இப்படி சொல்லலாமுல்ல... நாங்கள்லாம் யாரு...

நல்ல பகிர்வு நண்பரே.

ஆர்வா said...

இருந்த இடத்துல இருந்தே கடவுளை தரிசிக்க வெச்சிட்டீங்க..

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

எஸ்.கே said...

சாமி! எல்லோரையும் காப்பாத்து!

எஸ்.கே said...

அழகான படங்கள்!

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோவில்ல ஒரு பிகர் கூட இல்லையா? ஐயோ//

உம்மாச்சி, கண்ணை குத்திடும்! அப்படி பேசாதீங்க!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//கோவில்ல ஒரு பிகர் கூட இல்லையா? ஐயோ//

கீழ் இருந்து 5வது போட்டோ கிளிக் பண்ணி சூம் பண்ணி பாரு மச்சி. இடது பக்கம் இருந்து மூனாவத ஒரு பிகர் நிக்குது ... :)

எண்டா ரமேசு இப்படி பொறுக்கியா இருக்க.. :)

Chitra said...

(இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது. வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி தொத்திக்கிச்சே... சே...)


...... Contagious!!!!!!! ha,ha,ha,ha...

ராஜி said...

வீரவேல் வெற்றிவேல்

கந்தவேல் இருக்க எந்த வேலுக்கும் பயப்படத்தேவையில்லை. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நல்லா இருக்கனும்னு வேண்டிக்கிட்டு அப்படியே எங்க‌ளுக்கும் சேர்த்து நாளைக்கு தமிழ் கடவுளாம் முருகக் கடவுளிடம்வேண்டிக்கோங்க.

ராஜி said...

தமிழ்கடவுளும், தமிழக நெறிமுறைகளும் கடல் கடந்தும் கடைபிடிப்பதற்காக நீங்கள் தாராளமாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள் தமிழனென்று (பிளைட் ஏறி தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும்வரை)

சி.பி.செந்தில்குமார் said...

>>>
டிஸ்கி: கமெண்ட்ல அரோகரா போட தடை விதிக்கப்படுகிறது.

haa haa haa sema

kiruba said...

அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!!

kiruba said...
This comment has been removed by the author.
Unknown said...

கந்தனுக்கு அரோகரா!
கதிர் வேலனுக்கு அரோகரா!
வேலனுக்கு அரோகரா!
வெற்றி வேலுக்குமே அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
குமரனுக்கு அரோகரா!

மாணவன் said...

தைப்பூசத் திருவிழா இங்க சிங்கையிலயும் சிறப்புதான் நண்பரே

மலேசியாவில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறையே உண்டு சிங்கையில விடுமுறை இல்லையென்றாலும் நீங்கள் சொலவதுபோல் காவடியும் நம்ம ஊர் மாதிரியே பால் காவடி, பழக்காவடி, வேல் காவடி, புஷ்பகாவடினு அமர்களபடுத்தினாங்க. இதுக்காக 10 நாள் விரதம்லாம் இருப்பாங்கலாம். எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஆட்டம் என்று சிறப்பாகவே இருக்கும்

மாணவன் said...

தைப்பூச திருவிழா பக்தி பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

vinu said...

மச்சி என்ன பொங்கலு விருந்து ஓவரோ; இம்புட்டு லேட்டா போஸ்ட் வருது

sathishsangkavi.blogspot.com said...

படமும் சொன்ன விதமும் அருமை...

முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

Unknown said...

படங்கள் சூப்பர், பகிவுக்கு நன்றி பாஸ்

சசிகுமார் said...

திருவிழாவை நேரில் கொண்டு வந்த அருணுக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//கோவில்ல ஒரு பிகர் கூட இல்லையா? ஐயோ//

கீழ் இருந்து 5வது போட்டோ கிளிக் பண்ணி சூம் பண்ணி பாரு மச்சி. இடது பக்கம் இருந்து மூனாவத ஒரு பிகர் நிக்குது ... :)

எண்டா ரமேசு இப்படி பொறுக்கியா இருக்க.. :)//


அது கிழவி மச்சி. நான் பாக்கலை

Sivakumar said...

எங்க குலதெய்வம் முருகன் பற்றி படம் மற்றும் தகவல் தந்ததற்கு நன்றி அருண்!!

வெங்கட் said...

// பெண்கள், நம்ம ஊருல இப்போலாம்
விஷேசநாட்கள்ல கூட பார்க்க முடியாத
டிரெடிஷனல் தாவணி, பாவாடை சட்டைல
வந்து இருந்தாங்க. //

தாவணி, பாவாடை சட்டை
எல்லாம் இங்கே தான் பாக்க முடியலைன்னா..
மொரீசியஸ்லயாச்சும் பாக்கலாம்னு
ஆசையா வந்தா.. புஸ்ஸ்..

ஒரு போட்டோல கூட தாவணி,
பாவாடை சட்டை காணோமே..
என்னய்யா போட்டோ எடுத்த நீ..?!!

சாந்தி மாரியப்பன் said...

நல்ல தரிசனம்..

அருண் பிரசாத் said...

[im]http://lh6.ggpht.com/_jqqK4mGdQuA/TTax_KyrH3I/AAAAAAAAAP4/rhXCH696eGo/s144/venkat%20ilaignan.jpg[/im]

dheva said...

மொரிசியஸ்ல கூட இப்டி கொண்டாடுறது கண்டிப்பா புதிய தகவல்தான் (எனக்கு)....! தமிழ் மக்கள் எவ்ளோ நாளா அங்க இருக்காங்க.. நம்முடைய ரூட்ஸ்.. எப்டி அங்க வந்துச்சுனும் ஏதாவச்சு டீட்டெய்ல்ஸ் இருந்த போடுப்பா...

காவடி படங்கள்ள வீடு அமைப்புகளும் தெருக்களும் கூட நம்ம ஊர் மாதிரியே இருக்கு தம்பி.. ( வேற ஏதாச்சும் சோசியல் லைஃப் பற்றி இருக்குற போட்டோஸ் இருந்த ஷேர் பண்ணிக்கப்பா..!)

இன்ஃபர்மேட்டிவ்...!

மாதேவி said...

மொரிசியஸ் தைப்பூச விழா நன்றாக இருக்கிறது.

வெங்கட் said...

இல்ல தெரியாம தான் கேக்குறேன்..

" ஏன் இந்த கொலைவெறி..? "

தினேஷ்குமார் said...

நம்ம முருகன் எங்கயும் நான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கிறார்

அறிந்து கொண்டேன் நண்பரே

செல்வா said...

//இங்கு தமிழ் நாட்டை விட வெகு விமரிசையாக கொண்டாடுறாங்க. இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க/

நம்ம ஊர்ல கூட விடுமுறை இல்லையே அண்ணா ?

செல்வா said...

// நம்ம ஊருல இப்போலாம் விஷேசநாட்கள்ல கூட பார்க்க முடியாத டிரெடிஷனல் தாவணி, பாவாடை சட்டைல வந்து இருந்தாங்க///

அடடா ... படங்கள் எல்லாமே நல்லா இருக்கு அண்ணா

செல்வா said...

//ஒரு போட்டோல கூட தாவணி,
பாவாடை சட்டை காணோமே..
என்னய்யா போட்டோ எடுத்த நீ..?!!

///

ஹா ஹா , சூப்பர் தல.. இனிமேல் அருண் படம் போட்டு பதிவு போடமாட்டார் ..

middleclassmadhavi said...

ராகரோஅ ராகரோஅ (நீ..ல.வானம் பாட்டு பாணியில்):))

குறையொன்றுமில்லை. said...

படங்களும் தகவல்களும் சூப்பரா இருக்கு.

அனு said...

Home away from home??

btw, அரோகரா-ன்னு தானே சொல்லக்கூடாது.. அப்போ, அரைகொற-னு சொல்லலாமா?? #டவுட்டு :)

அனு said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்கோ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா... எங்கெல்லாம் தமிழ் கலாச்சாரம் பரவி நிற்கிறது......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கேட்கவே ரொம்ப நல்லாருக்கு அருண்.... குட் போஸ்ட்....!

Anonymous said...

யோவ் ...,இந்த மாசம் மொரிஷியஸ் ல இருந்து சென்னைக்கு ப்ளைட் இருக்குதா இல்லையா ?? என் மெயில் id க்கு சொல்லு ..,பிளான் பண்ணனும் ..,

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!! அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!! அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!! அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!! அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!! அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா..!!

சுசி said...

பகிர்வுக்கு நன்றி அருண்.

முருகனுக்கு..

Unknown said...

முருகா முருகா....!

Unknown said...

உங்களுக்கு இனிய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்...