Cricket Countdown....

Friday, January 7, 2011

2010 - சில நினைவுகள்நண்பர் பாலாஜி சரவணா, 2010ல் என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை எழுதுமாறு ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். உண்மையிலேயே 2010 என் வாழ்வில் மிகச்சிறந்த ஆண்டாகவே இருந்துச்சி. ஒரு செண்டிமெண்ட் காரணமாக நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டுடேன், அதனால எல்லா விஷயங்களையும் சொல்ல முடியுமானு தெரியலை. முடிஞ்ச அளவு நினைவுக்கு வரும் விஷயங்களை சொல்லுறேன்.

ஆண்டு தொடக்கமே என் வாழ்க்கையின் நீண்ட நாள் கனவான வெளிநாட்டு பயணம் + வேலையில் தான் ஆரம்பிச்சுச்சு. ஆமாங்க, மொரீசியஸ் வேலைக்கு சேர்ந்தது ஜனவரி 5 ல தான். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைனு எல்லோரையும் பிரிஞ்சி மொரீசியஸ் வந்து சேர்ந்தேன். சொந்த மண் மற்றும் சொந்தங்களை பிரியரனேன்னு  ஒரு வருத்தம் இருந்தாலும் ஒரு புதிய அனுபவம் கிடைச்சி இருக்கேனு ஒரு மகிழ்ச்சியும் இருக்கத்தான் செஞ்சிச்சி.


எனக்கு கல்யாணம் ஆன பின்னாடி என் மனைவிய பிரிஞ்சிருந்த 18 மாச பிரிவு முடிவுக்கு வந்துச்சி. வேலை விஷயமா ஹைதராபாத், விசாகபட்டினம்னு ஆந்திரா முழுசா சுத்தி வாராவாரம் சென்னைக்கு வந்துட்டு போயிட்டு (கிட்டதட்ட வாரத்துக்கு 4 நாள் தலா 700 கிமீ பயணம்) இருந்தது முடிவுக்கு வர, மார்ச் மாசம் மனைவியும் என் குழந்தையும் என் கூடவே இருக்க மொரீசியஸ் வந்ததாங்க. இதுதான் என் ஒட்டு மொத்த வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான நிகழ்வு.


அலைஞ்சி திரிஞ்ச வேலை நின்று, ஒரே இடத்தில் வேலை செய்யும் சூழலும் உருவாச்சி. என் இத்தனை வருட தொழில் அனுபவத்துக்கு அங்கிகாரம் கிடைச்சதும், என் திறமைகளை காண்பிக்க ஒரு நல்ல இடமும் அமைஞ்சதும் இந்த வருடம்தான்.


சும்மா இருந்தவனை சொறிஞ்விட்ட மாதிரி... சும்மா நெட்டுல மேஞ்சிட்டு இருந்தப்போ பிளாக் பத்தி தெரிஞ்சி அதை ஆரம்பிச்சி உங்களை எல்லாம் டார்சர் பண்ண ஆரம்பிச்சதும் 2010ல தான். ஆனா, இந்த பிளாக் தயவால கிடைச்ச நண்பர்கள் பட்டாளம் உலகம் முழுக்க இருக்குது. இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க.


அவ்வளவுதாங்க நினைவுக்கு வருது.... ஆங்...கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிகறேனே பிளிஸ். இதையும் கேட்டுருங்க ப்ளீஸ். என்னது மாட்டீங்களா, நான் பல்பு வாங்கறது பத்திங்க. ஓ அப்போ கேகறீங்களா? என்னா வில்லத்தனம்! என் பொண்ணு கையால நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பல்பு வாங்கிட்டு இருக்கறேன். இனியும் வாங்குவேன், சும்மாவா எத்தனை பேருக்கு பல்பு கொடுத்து இருக்கேன். பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.....


இது தொடர்பதிவாமே, யாரையாவது மாட்டிவிடலைனா பதிவுலக தொழில் தர்மம் ஆகாது அதனால யார்கிட்டலாம் 2010 ல வாங்கி கட்டிகிட்டேன்னு சொல்லவராங்க,


அருண்பிரசாத் (ஜூனியர்)
தலைவர் எஸ் கே
பாசமலர் சுபத்ரா
மச்சான் டெரர் பாண்டியன்

81 comments:

Arun Prasath said...

ai vadai vadai

Arun Prasath said...

என் திறமைகளை காண்பிக்க ஒரு நல்ல இடமும் அமைஞ்சதும் இந்த வருடம்தான்.//

அருண் அண்ணே நெறைய பொய் சொல்றாரு.. அவருக்கு பாவ மன்னிப்பு குடுங்க ஆண்டவா

Madhavan Srinivasagopalan said...

படிச்சிட்டு வரேன்..

தமிழ்மணம் சப்மிட் பண்ணலியா ?

Ramesh said...

ரொம்ப நல்ல விசயமாத்தான் எல்லாம் நடந்திருக்கு.. இந்த வருசம் அதை விட சந்தோசமான நிகழ்வுகளுடன் அமைய வாழ்த்துக்கள் நண்பா..

தினேஷ்குமார் said...

பல்பு வாண்டுங்க கிட்ட வாங்கற சுகமே தனி தான் தலைவரே

Madhavan Srinivasagopalan said...

படிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்..
நல்ல விஷயம்தான்.. நீங்கள் குடும்பத்தோட அதிக நேரத்தை பங்கு போடலாம்..
'பல்பு வாங்குவது பற்றி'
அதெல்லாம் சகஜமப்பா..

எஸ்.கே said...

வாழ்வின் தருணங்களில் இனிமையான மாற்றங்களையும் அழகான உறவுகளை இன்பமான தருணங்களை சிறப்பான நினைவலைகளை அள்ளித்தெளித்த காலத்தின் சிறகுகளில் பயணித்த தங்களின் எண்ணவோட்டங்களின் தொகுப்பு மேன்மை தங்கி இருந்தது!

இம்சைஅரசன் பாபு.. said...

// என் பொண்ணு கையால நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பல்பு வாங்கிட்டு இருக்கறேன். இனியும் வாங்குவேன், சும்மாவா எத்தனை பேருக்கு பல்பு கொடுத்து இருக்கேன். பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.....//


பல்பு வாங்குன விஷயம் போய் இப்ப அடிவாங்குற நிலைமைக்கு நான் வந்தாச்சு ...அந்த நிலைமை 2011 ல உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் மக்கா .....

எஸ்.கே said...

ஏன் ஏன் ஏன்?????

மாறுவார்களா இவர்கள்?

Arun Prasath said...

கடை ஓனர் இங்கே இல்லாத காரணத்தினால்... நான் வெளி நடப்பு செய்கிறேன்

சேலம் தேவா said...

மேலும் பல பல்புகள் பாப்பாகிட்ட வாங்கறதுக்கு வாழ்த்துகள்..!! :-))

THOPPITHOPPI said...

ரொம்ப சுருக்கமா முடிச்சிட்டிங்க

சக்தி கல்வி மையம் said...

2011 வருசம் அதை விட சந்தோசமான நிகழ்வுகளுடன் அமைய வாழ்த்துக்கள் நண்பா..

http://www.sakthistudycentre.blogspot.com/

சௌந்தர் said...

ஓஹ இது ரொம்ப சின்ன நினைவா இருக்கே மனதில் பல்பு வாங்கியது மட்டும் தான் நினைவு இருக்கு போல...

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் அருண்............ அழகா சொல்லி இருக்கீங்க ..........

Anonymous said...

நினைவுகள் அழகா சொல்லிட்டீங்க பாஸ்! இந்த வருடமும் சிறப்பாய், ஷமியிடம் பல்புகள் நிறைய வாங்க வாழ்த்துக்கள் ;)

dheva said...

என்னடா திரும்பி பாக்குறேன்னு முன்னால் ரோட்ட காட்றானேன்னு கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்.........முன்னாடி இருக்குற கண்ணாடி வழியா பின்னாடி பாக்குறியா?

dheva said...

2010 ல சிறப்புனு பார்த்த உனக்கு ஷமி கொடுத்த பல்புகள்தான்...........! உண்மைய ஒத்துகிட்டதுகு நன்றிகள் ஹி ஹி ஹி!

dheva said...

யெஸ்......தம்பி........! செட்டிலிங் இன் லைஃப் ......ஒரு பெரிய விசயம்தான்.அதுதான் தலையாயதாய் இருக்கும் நமது நினைவில்..........

வாழ்த்துக்கள் தம்பி!

karthikkumar said...

பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.///
ஆமாங்க :)

karthikkumar said...

இது தொடர்பதிவாமே, யாரையாவது மாட்டிவிடலைனா பதிவுலக தொழில் தர்மம் ஆகாது அதனால யார்கிட்டலாம் 2010 ல வாங்கி கட்டிகிட்டேன்னு சொல்லவராங்க,


அருண்பிரசாத் (ஜூனியர்)//
அருண் மச்சி இதுதான் சரியான நேரம் நீ 2010 ல எந்த எந்த பொண்ணுகிட்ட அடி வாங்கின எந்த எந்த பொண்ணுக காரி துப்பினாங்க இத பத்தி எழுது...:)

Arun Prasath said...

என்னடா இன்னும் பாசக்கார பங்காளியா காணோமேன்னு பாத்தேன்... எழுதலாம் தான்... அதுல நீ அடி வாங்கின சீன் எல்லாம் வருமே பரவால்லையா? ஏன்னா நாம ஒன்னுக்குள்ள ஒன்னு இல்லையா

Chitra said...

மகளிடம் பல்பு வாங்கியதை பற்றி எழுதும் பதிவுகள் எல்லாமே, cho chweet!

Anonymous said...

என்ன பல்புனு சொல்லிருந்தா நாங்க கொஞ்சம் சந்தோசப்பட்ருப்போம்ல..

Anonymous said...

தினமும் உங்க மகள் பல்பு குடுக்குறதுனால குறிப்பிட்டு எழுத முடிலயா??? ரைட்டு விடுங்க.
தொடர்ந்து பல்பு வாங்க வாழ்த்துக்கள்.

karthikkumar said...

Arun Prasath said...
என்னடா இன்னும் பாசக்கார பங்காளியா காணோமேன்னு பாத்தேன்... எழுதலாம் தான்... அதுல நீ அடி வாங்கின சீன் எல்லாம் வருமே பரவால்லையா? ஏன்னா நாம ஒன்னுக்குள்ள ஒன்னு இல்லையா///

ஒன்னுக்குள்ள எப்படி ஒன்னு இருக்க முடியும்... விளக்கவும் இங்க இல்லை என்றால் மெயிலில் விளக்கவும்...

Arun Prasath said...

ஒன்னுக்குள்ள எப்படி ஒன்னு இருக்க முடியும்... விளக்கவும் இங்க இல்லை என்றால் மெயிலில் விளக்கவும்...//

தம்பி நி கேள்வி மேல் கேள்வி கேட்டதால் ஆட்டத்தில் இருந்து விலக்கபடுகிறீர்கள்

சசிகுமார் said...

2011 வருசம் அதை விட சந்தோசமான நிகழ்வுகளுடன் அமைய வாழ்த்துக்கள் நண்பா

Unknown said...

இந்த ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்ங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவு எழுதினா சொல்லி அனுப்பவும். வந்து கமெண்ட் போடுறேன்

குறையொன்றுமில்லை. said...

2011- ஆண்டும் தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

வைகை said...

சிங்கை வந்தா சொல்லவும் நாங்களும் கொஞ்சம் அடிச்சுக்கிறோம்!!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவு எழுதினா சொல்லி அனுப்பவும். வந்து கமெண்ட் போடுறே///////////


பதிவு போட்டாச்சாம்! வந்து கமென்ட் போடவும்! இல்லைனா ஒங்கள போட்ருவாராம்!!!

வினோ said...

நெகிழ்வான தருணங்கள்... என்றும் மலரும் மனதில்... வாழ்த்துக்கள் அருண் சார்... இன்னும் நிறைய கிடைக்க வேண்டிக் கொள்ளகிறேன்...

வெங்கட் said...

// ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். //

இந்த தொடர்பதிவுக்கு எல்லாம்
யாராவது ஒரு தடை ஆணை வாங்க மாட்டீங்களா..?

முடியல...

vinu said...

yyyyyyyyyyyy? only 3 perai maati vittu irrukeenga

செல்வா said...

//(கிட்டதட்ட வாரத்துக்கு 4 நாள் தலா 700 கிமீ பயணம்) /

ஐயோ ..!! அவ்ளோ தூரமா ..?

செல்வா said...

// உலகம் முழுக்க இருக்குது. இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க./

ஹி ஹி ஹி ,, நானும் தயாரா இருக்கேன்

அருண் பிரசாத் said...

@ Arun Prasath
// ai vadai vadai//
வாடா அம்பி... திருப்தியா சாப்புடு... அப்படியே ஓட்டு போட்டுட்டு போ

// அருண் அண்ணே நெறைய பொய் சொல்றாரு.. அவருக்கு பாவ மன்னிப்பு குடுங்க ஆண்டவா//

ரட்சித்தேன் மானிடா

@ Madhavan Srinivasagopalan
// படிச்சிட்டு வரேன்..

தமிழ்மணம் சப்மிட் பண்ணலியா ?//
நான் முதல் ரேங்க் வந்துடுவனோனு தமிழ் மண்ம் சைட்டையே மூடிட்டாங்க (யார்ரா அவன் சிரிக்கறது...சூ... பேசிட்டு இருகோம்ல)

சுபத்ரா said...

மறுபடியும் என்னை மாட்டிவிட்டுட்டீங்களா? அது சரி, அதென்ன நீங்க பல்ப் வாங்குனா எங்க முகமெல்லாம் பிரகாசம் ஆகுது?#டவுட்டு

2010 மிக முக்கியமான ஆண்டாக அமைந்ததுக்கு வாழ்த்துக்கள்! 2011 பல மகிழ்வூட்டும் தருணங்களை அளிக்கட்டும் எனக் கடவுளை வேண்டுகிறேன்..

அழைப்பிற்கு அகெய்ன் ஒரு நன்றி! :-)

(ஏற்கனவே பாலா வேற கூப்பிட்டிருக்கார்)

அருண் பிரசாத் said...

@ பிரியமுடன் ரமேஷ்
// ரொம்ப நல்ல விசயமாத்தான் எல்லாம் நடந்திருக்கு.. இந்த வருசம் அதை விட சந்தோசமான நிகழ்வுகளுடன் அமைய வாழ்த்துக்கள் நண்பா..//
ந்ன்றி ரமேஷ் (ஸ்பெல்லிங் கரெக்ட்டா போட்டுட்டேன்) note this point your honour

@ dineshkumar
// பல்பு வாண்டுங்க கிட்ட வாங்கற சுகமே தனி தான் தலைவரே//

ஆமாம் ரத்தத்தின் ரத்தமே (தலைவரேனு சொன்னது ம்கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டேன்)

@ Madhavan Srinivasagopalan
// படிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்..
நல்ல விஷயம்தான்.. நீங்கள் குடும்பத்தோட அதிக நேரத்தை பங்கு போடலாம்..
'பல்பு வாங்குவது பற்றி'
அதெல்லாம் சகஜமப்பா..//
வீட்டுக்கு வீடு வாசப்படி

அருண் பிரசாத் said...

@ எஸ்.கே
// வாழ்வின் தருணங்களில் இனிமையான மாற்றங்களையும் அழகான உறவுகளை இன்பமான தருணங்களை சிறப்பான நினைவலைகளை அள்ளித்தெளித்த காலத்தின் சிறகுகளில் பயணித்த தங்களின் எண்ணவோட்டங்களின் தொகுப்பு மேன்மை தங்கி இருந்தது!//
இதுக்குதான் தேவா கூட சேராதீங்கனு சொன்னேன்... கேட்டீங்களா... எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க

@ இம்சைஅரசன் பாபு..
// பல்பு வாங்குன விஷயம் போய் இப்ப அடிவாங்குற நிலைமைக்கு நான் வந்தாச்சு ...அந்த நிலைமை 2011 ல உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் மக்கா .....//
என்ன ஒரு நல்ல எண்ணம்...என்ன ஒரு முன்னேற்றம்

@ எஸ்.கே
// ஏன் ஏன் ஏன்?????

மாறுவார்களா இவர்கள்?//
ஏன்? ஏன்? ஏன்? என்னாச்சு உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

good post. u r sharing the family attachments of your feelings, well set

Unknown said...

ஆஹா பரவாயில்லையே. 2010 ல் தீவிரமாய் பதிவெழுத ஆரம்பிச்சு, ஒரு கொள்ள சாரி கொள்கை கூட்டத்திற்கே தலைவராயிட்டீங்களே.

மொரீசியஸ் வாழ்க்கையும் 2010 ல் தான் தொடக்கமா?
அருமை. ஏனோ இந்த பதிவு படிக்கும் போது சந்தோஷமாக இருக்கு..

இந்த வருடமும் உங்களுக்கு சிறப்பான வருடமான இருக்க வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

@ Arun Prasath
// கடை ஓனர் இங்கே இல்லாத காரணத்தினால்... நான் வெளி நடப்பு செய்கிறேன்//
டாட்டா.. பை... பை...

@ சேலம் தேவா
// மேலும் பல பல்புகள் பாப்பாகிட்ட வாங்கறதுக்கு வாழ்த்துகள்..!! :-))//
என்னா சந்தோஷம் உங்களுக்கு

@ THOPPITHOPPI
// ரொம்ப சுருக்கமா முடிச்சிட்டிங்க//
இதையே படிக்காம கமெண்ட் போடுறாங்க...நீங்க வேற

@ sakthistudycentre.blogspot.com
// 2011 வருசம் அதை விட சந்தோசமான நிகழ்வுகளுடன் அமைய வாழ்த்துக்கள் நண்பா..//
நன்றிங்கோ

@ சௌந்தர்
// ஓஹ இது ரொம்ப சின்ன நினைவா இருக்கே மனதில் பல்பு வாங்கியது மட்டும் தான் நினைவு இருக்கு போல...//
பல்பு எல்லாமே பெரிய பெரிய பல்பு இல்ல

அருண் பிரசாத் said...

@ மங்குனி அமைச்சர்
// வாழ்த்துக்கள் அருண்............ அழகா சொல்லி இருக்கீங்க ..........//
நன்றி மங்குனி

@ Balaji saravana
// நினைவுகள் அழகா சொல்லிட்டீங்க பாஸ்! இந்த வருடமும் சிறப்பாய், ஷமியிடம் பல்புகள் நிறைய வாங்க வாழ்த்துக்கள் ;)//
ரைட்டு பாலாஜி

@ dheva
// என்னடா திரும்பி பாக்குறேன்னு முன்னால் ரோட்ட காட்றானேன்னு கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்.........முன்னாடி இருக்குற கண்ணாடி வழியா பின்னாடி பாக்குறியா?//
அண்ணனுக்கு என்னா அறிவு!

//2010 ல சிறப்புனு பார்த்த உனக்கு ஷமி கொடுத்த பல்புகள்தான்...........! உண்மைய ஒத்துகிட்டதுகு நன்றிகள் ஹி ஹி ஹி! //
சும்மாவா அண்ணே ஒரு பல்பு பேக்ட்டரியே இல்ல இருக்கு

//யெஸ்......தம்பி........! செட்டிலிங் இன் லைஃப் ......ஒரு பெரிய விசயம்தான்.அதுதான் தலையாயதாய் இருக்கும் நமது நினைவில்..........
வாழ்த்துக்கள் தம்பி! //
நன்றி அண்ணே, ஆனாலும் இன்னும் செட்டில்டுனு சொல்ல முடியலையே

அருண் பிரசாத் said...

@ karthikkumar
// பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.///
ஆமாங்க :)//
சரிங்க

@ Chitra
// மகளிடம் பல்பு வாங்கியதை பற்றி எழுதும் பதிவுகள் எல்லாமே, cho chweet!//
இனிமையான நேரங்கள் அவை சித்ரா...பகிர்ந்துக்கவும்

@ இந்திரா
// என்ன பல்புனு சொல்லிருந்தா நாங்க கொஞ்சம் சந்தோசப்பட்ருப்போம்ல..//
அட என்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க அதான் 4 பதிவு போட்டு இருக்கேன்ல

இங்க போய் பாருங்க....

அருண் பிரசாத் said...

@ சசிகுமார்
// 2011 வருசம் அதை விட சந்தோசமான நிகழ்வுகளுடன் அமைய வாழ்த்துக்கள் நண்பா//
நன்றி சசி

@ பதிவுலகில் பாபு
// இந்த ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்ங்க..//
நன்றி பாபு

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// பதிவு எழுதினா சொல்லி அனுப்பவும். வந்து கமெண்ட் போடுறேன்/
நீ ஆணியே புடுங்க வேணாம்... இதெல்லாம் ஒரு கமெண்ட்டா... இதுக்கு உன் போட்டோ பதிவே பரவாயில்லை

@ Lakshmi
// 2011- ஆண்டும் தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.//
நன்றி மேடம்

அருண் பிரசாத் said...

@ வைகை
// சிங்கை வந்தா சொல்லவும் நாங்களும் கொஞ்சம் அடிச்சுக்கிறோம்!!//
நான் இப்போ சிங்கைலதான் இருக்கேன்னு
சொல்லமாட்டேனே...
சொல்லமாட்டேனே...
சொல்லமாட்டேனே...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவு எழுதினா சொல்லி அனுப்பவும். வந்து கமெண்ட் போடுறே///////////


பதிவு போட்டாச்சாம்! வந்து கமென்ட் போடவும்! இல்லைனா ஒங்கள போட்ருவாராம்!!!//
இதுக்கு வேணா கூப்பிடுங்க 10 பேரை சேர்த்து கூட்டியாறேன்

@ வினோ
// நெகிழ்வான தருணங்கள்... என்றும் மலரும் மனதில்... வாழ்த்துக்கள் அருண் சார்... இன்னும் நிறைய கிடைக்க வேண்டிக் கொள்ளகிறேன்...//
என்ன சார், மோட்னுட்டு... பேர் சொல்லியே கூப்பிடுங்க பாஸ்

ஜெயந்த் கிருஷ்ணா said...

லேட்டா வந்தாலே இது தான தொல்லை.. நான் போட வேண்டிய கமெண்ட் எல்லாரும் போட்டிருக்காங்க...

வந்ததுக்கு ஏதாவது சொல்லனுமா... கண்டிப்பா சொல்லனுமா..

மச்சி நீ ரொம்ப அழகா இருக்கே....

செல்வா said...

வடை போச்சே!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
// // ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். //
இந்த தொடர்பதிவுக்கு எல்லாம்
யாராவது ஒரு தடை ஆணை வாங்க மாட்டீங்களா..?
முடியல...//
என்ன பண்ண எங்களாலயும் முடியலைதான்.... அன்புக்கு தலை வணங்கி எழுதறோம்...உங்கள மாதிரி ஓட முடியலையே

@ vinu
// yyyyyyyyyyyy? only 3 perai maati vittu irrukeenga//
4 பேரா மாத்திட்டேன்... இப்படி ஒரு சந்தோஷமா வினு உங்களுக்கு!

@ கோமாளி செல்வா
// //(கிட்டதட்ட வாரத்துக்கு 4 நாள் தலா 700 கிமீ பயணம்) /
ஐயோ ..!! அவ்ளோ தூரமா ..?//
ஆமாம்பா... திருப்பூர்ல இருந்து சென்னை வந்து மறுபடியும் வேலூர் போகலாம்

// // உலகம் முழுக்க இருக்குது. இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க./
ஹி ஹி ஹி ,, நானும் தயாரா இருக்கேன் //
ஆகா..உளறிட்டேனா... ஆமாம், நீ யாரு... சரி நான் யாரு????

அருண் பிரசாத் said...

@ சுபத்ரா
// மறுபடியும் என்னை மாட்டிவிட்டுட்டீங்களா? அது சரி, அதென்ன நீங்க பல்ப் வாங்குனா எங்க முகமெல்லாம் பிரகாசம் ஆகுது?#டவுட்டு//
அது நம்ம மூதாதையர் பழக்கம்... அப்படியே வருது

@ சி.பி.செந்தில்குமார்
// good post. u r sharing the family attachments of your feelings, well set//
i english... dont know english

@ பாரத்... பாரதி..
// ஆஹா பரவாயில்லையே. 2010 ல் தீவிரமாய் பதிவெழுத ஆரம்பிச்சு, ஒரு கொள்ள சாரி கொள்கை கூட்டத்திற்கே தலைவராயிட்டீங்களே.//
நான் மேட்டுபாளையம் பக்கம் வரமாட்டேன்..மாட்டேன்...டேன்..

// மொரீசியஸ் வாழ்க்கையும் 2010 ல் தான் தொடக்கமா?
அருமை. ஏனோ இந்த பதிவு படிக்கும் போது சந்தோஷமாக இருக்கு..//
அது பல்பை பார்த்து இருக்குமோ!
// இந்த வருடமும் உங்களுக்கு சிறப்பான வருடமான இருக்க வாழ்த்துக்கள்.//
நன்றிங்கோ

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// லேட்டா வந்தாலே இது தான தொல்லை.. நான் போட வேண்டிய கமெண்ட் எல்லாரும் போட்டிருக்காங்க...//
எங்கய்யா இருந்த இவ்வளோ நேரம்... கரெக்ட்ட 50க்கு வந்துட்ட...

// வந்ததுக்கு ஏதாவது சொல்லனுமா... கண்டிப்பா சொல்லனுமா..

மச்சி நீ ரொம்ப அழகா இருக்கே....//
தாங்க்ஸ் மச்சி... எனக்கு வெக்கமா இருக்கு ரொம்ப புகழாத

@ கோமாளி செல்வா
// வடை போச்சே!//
உனக்கும் என் பிளாக்குக்கும் ராசி இல்லை செல்வா... வடை கிடைகறதே இல்லை

சுசி said...

இந்த வருடம் இன்னும் மகிழ்வாக அமையட்டும் அருண்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஒரு செண்டிமெண்ட் காரணமாக நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டுடேன்//

போன வருஷம் எவனும் ஓசி டைரி கொடுக்கல சொல்லு... டைரி வாங்க காசு இல்லாத விஷயத்த எப்படி எல்லாம் சமாளிக்கிறான்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//நீண்ட நாள் கனவான //

ஆபீஸ்ல நாள் கணக்கா தூங்குவான் போல.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஒரே இடத்தில் வேலை செய்யும் சூழலும் உருவாச்சி.//

ப்ளாக் எழுதறது?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//என் திறமைகளை காண்பிக்க ஒரு நல்ல இடமும் அமைஞ்சதும் இந்த வருடம்தான்.//

ஒரு பிரண்டு வீட்டுக்கு போய் நான் ஸ்டாப்ப நாலு மணி நேரம் சாப்டியே அதை சொல்றியா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க.//

ஆனா துபாய்ல & சென்னைல (உன்னை மறப்பனா ரமேசு..) மட்டும் தான் நீ ஓசி சோறு வாங்கி தருவ சொல்லி பாசத்தோட காத்து இருக்கோம்... :)

இவரு World Famousam... உலகம்பூர இவரு ப்ளாக்க படிக்கிறாங்களாம்... Country Fellow... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

ஏன் மச்சி! தொடர் பதிவு எழுத வெறும் கேவலமான ரொம்ப கேவலமான ஜென்மங்களா கூப்பிட்டு இருக்க... :)

samhitha said...

//நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க//

ஹா ஹா ஹா !!! அவ்ளோ நல்லவரா நீங்க???

உங்க பொண்ணு கிட்ட வாங்குன பல்பு எல்லாமே சூப்பர்

சோ ச்வீட் ஒப் ஹர்

பாப்பா முகத்தை காண்பிக்கலையே !!!

samhitha said...

//வெறும் கேவலமான ரொம்ப கேவலமான ஜென்மங்களா கூப்பிட்டு இருக்க... //

உங்க நேம் இல்லையே
அப்புறம் எப்டி இப்டி சொல்றீங்க ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@samhitha

//உங்க நேம் இல்லையே
அப்புறம் எப்டி இப்டி சொல்றீங்க ;) //

வெளங்கிடும். பதிவ படிக்காம கமெண்ட் போடற பார்ட்டியா நீங்க. ரைட்டு... அங்க நாலாவது ஒரு பேரு இருக்கு பாருங்க (ரொம்ப கேவலமான ஜென்மம்) அது நான் தான்.. :)

samhitha said...

sry mr terror
i didnt c ur name there
machaan pottu irundhadha? so vera yaaro nu nenachiten

hmm ur comment s applicable now!!!!!

:)

samhitha said...

//வெளங்கிடும். பதிவ படிக்காம கமெண்ட் போடற பார்ட்டியா நீங்க//

யார பார்த்து இந்த வார்த்தைய சொல்லிடீங்க?? :X

Unknown said...

ஒரு இனிய நினைவு என்னை அழைத்துச்செல்லும் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said... 56

@அருண்

//ஒரு செண்டிமெண்ட் காரணமாக நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டுடேன்//

போன வருஷம் எவனும் ஓசி டைரி கொடுக்கல சொல்லு... டைரி வாங்க காசு இல்லாத விஷயத்த எப்படி எல்லாம் சமாளிக்கிறான்... :)//

@ அருண் இதுக்கு நீங்க நாண்டுகிட்டு .....

NaSo said...

இந்த புது வருடம் உங்களுக்கு சந்தோசமாய் அமைய வாழ்த்துக்கள்!!!

உண்மைத்தமிழன் said...

மொரீஷியஸ்லயா இருக்கீங்க.. வாழ்க வளமுடன்..

அந்த நாட்டைப் பற்றியும் கொஞ்சம் தொடர் கட்டுரை எழுதலாமே..? முயற்சி செய்யுங்கள்..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க//

ஹா ஹா ஹா... சூப்பர்... வித்தியாசமா யோசிக்கறீங்க...

Philosophy Prabhakaran said...

பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.....

Philosophy Prabhakaran said...

சுருக்கமா சொன்னா கடந்த ஆண்டுதான் நீங்க செட்டில் ஆனா ஆண்டு... கரெக்ட்டா...

ரசிகன் said...

முன்னாடி இருக்கற பின்னாடி பாக்குற கண்ணாடில‌
கடந்து வந்த பாதையை பார்க்குற மாதிரி படம் சூப்பர்..
ஆனா 2010 அந்த கண்ணாடியில இருந்திருக்கலாம்.
ஏன்னா முன்னாடி இருக்கற பாதை 2011 ஆச்சே.. Nicely Shared Blissful Moments.
Wishing u More Successes in Brand New 2011..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//முன்னாடி இருக்கற பின்னாடி பாக்குற கண்ணாடில‌ கடந்து வந்த பாதையை பார்க்குற மாதிரி படம் சூப்பர்..//


தப்பு. அது பின்னாடி இருக்கற முன்னாடி பாக்கற கண்ணாடி. அவரு கடந்து வந்த பாதைய கண்ணாடில பாக்கல திரும்பி பாக்கறாரு.

//ஆனா 2010 அந்த கண்ணாடியில இருந்திருக்கலாம்.
ஏன்னா முன்னாடி இருக்கற பாதை 2011 ஆச்சே.. //

கண்ணாடில 2011 தான் வரனும். என்னா அது பின்னாடி இருக்கற முன்னாடி பாக்கற கன்ணாடி. படத்த நல்லா பாருங்க. படம் Blur Effectல இருக்கு. நாம வண்டி ஓட்டுற சமயத்துல முன்னடி இருக்க விஷயம் தெளிவா இருக்கும் தாண்டி வர பதை தான் தெளிவில்லாம இருக்கும். அதுவும் இல்லாம 2010 முன்னாடி குறுகி இருக்கு பாருங்க தாண்டி வந்தா தான் அப்படி இருக்கும். அப்போ ஏன் அங்க Rear View Mirror கேக்காதிங்க. அது Front View Mirror பின்னாடி திரும்பி பாக்கற அப்போ முன்னாடி வர வண்டி இடிச்சிடாம இருக்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

யார் அங்க அருண் பதிவுல தப்பு கண்டு பிடிக்கிறது. பிச்சிடுவேன் பிச்சி... :)

(படத்த பாத்து போடுடா வெண்ணை. எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு. முடியலை... :)) )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுவும் தொடர்பதிவா.... அய்யோ ஆண்டவா இந்தத் தொடர்பதிவுல இருந்து 2011-ஐயாவது காப்பாத்து....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடந்த வருடம் நல்லா இருந்தமாதிரி, இந்த வருடமும் நல்லா போக வாழ்த்துக்கள்..... (வேற என்ன சொல்றதுன்னே தெரியல......!)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹாய் அருண்.. உங்க குடும்பத்தோட.. ஒரு இடமா வேலை அமைஞ்சு.. இருக்கறது சந்தோசம் தாங்க..
இந்த வருடமும், இனி வரும் வருடங்களும்... எல்லாம் நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்..!!

அப்புறம் பொண்ணு கிட்ட பல்பு, வாங்கறதுக்கே.. குடுத்து வச்சிருக்கணும்.. நல்ல கலர் கலரா வாங்குங்க.. :D :D
பொங்கல் வாழ்த்துக்கள்.. ! :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.