நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....
அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....
உடனே, சுமார் 20 டால்பின்கள் ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் “பாட்டில் மூக்கு” டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு.
அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)
கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?
அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.
3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).
திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
டால்பின் வீடியோ:உடனே, சுமார் 20 டால்பின்கள் ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் “பாட்டில் மூக்கு” டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு.
அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)
எரிமலைப்பாறை?! |
கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?
கேப்பிரியல் தீவு |
அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.
Phaethon lepturus |
3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).
நீச்சல் குளம் இல்லைங்க...கடல்தான். குளிப்பது நம்ம நண்பர் |
திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.
52 comments:
vadai
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///
நம்ம முடியலையே .....
டால்பின்ஸ் கலக்கல்!
vadai-2
பகிர்வுக்கு நன்றி
படங்களும் அழகான விளக்கங்களும் அருமை
Phaethon lepturus இது அழகாக உள்ளது!
நல்ல பகிர்வு நண்பரே.. செமையா என்ஜாய் பண்ணியிருப்பீங்க போல... ம்ம்ம் நடக்கட்டும்...
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///
நம்ம முடியலையே ...//
உண்மைகள் எப்பொதும் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
டால்பின் வீடியோ:
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க////
எந்த வீடியோவா இருந்தாலும் பார்க்க போறது இல்லை எப்படி இருந்தா என்ன
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)//
ஹி ஹி.... நம்பீடேன்
ஆமா தல உங்களுக்கு நீச்சல் தெரியுமா
செம சூப்பரான இடம் பாஸ்! நல்ல என்ஜாய் பண்ணியிருக்கீங்க :)
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///
நம்ம முடியலையே ....
அருண் நானும் போகலாமுன்னு இருக்கேன். செலவை ஏத்துக்கிறீங்களா?
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///
நம்பிட்டேன் விடுங்க விடுங்க ... :)
வேல்லைக்காரவுங்க எல்லாம் டால்பின்னையும் , அந்த பறவையையும் அதிசயமா பாத்தா மாதிரி உன்னையும் பாத்து இருப்பாங்களே ????? கடல் வாழ் உயிரினங்களுக்கு நடுவுல ஒரு காட்டு வாழ் ஜந்துன்னு .......
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///
அட எல்லாரும் இந்த லைனுக்கு கமன்ட் போட்டு இருக்காங்க ..... நாமளும் போட்ருவோம் ..இல்லைன்னா ஏதாவது தெய்வகுத்தம் ஆயிடப்போகுது ..........
நம்பிட்டோம்
////வேல்லைக்காரவுங்க எல்லாம் டால்பின்னையும் , அந்த பறவையையும் அதிசயமா பாத்தா மாதிரி உன்னையும் பாத்து இருப்பாங்களே ????? கடல் வாழ் உயிரினங்களுக்கு நடுவுல ஒரு காட்டு வாழ் ஜந்துன்னு ......////
உண்மையா...?
மக்கா தோல் உறிஞ்ச உடனே ..நீயும் வெள்ளை கறான் போல ஆகி இருப்பியே.....
உங்க எக்ஸ்பீரியன்ஸ் சூப்பர்... படங்களும், வீடியோவும் ரொம்ப நல்லா இருக்குங்க..
அருமையான அனுபவம்.. அருண்.. படங்களும், வீடியோவும் ரொம்ப நல்லாருக்கு... அந்தப் பறவை ரொம்ப அழகு..
மங்குனி அமைச்சர் said...
நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///
அட எல்லாரும் இந்த லைனுக்கு கமன்ட் போட்டு இருக்காங்க ..... நாமளும் போட்ருவோம் ..இல்லைன்னா ஏதாவது தெய்வகுத்தம் ஆயிடப்போகுது ..........
நம்பிட்டோம்//////////
அப்ப நானும்....
நம்பிட்டேன்!
நல்லாயிருங்க!(கர்புர்கர்புர்.....!!!!!)
//அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)/
ஹி ஹி ஹி .. நம்பிக்கிறேன் அண்ணா .!!
//மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).//
ஹி ஹி ஹி ...
அன்பின் அருண் பிரசாத்,
தங்கள் காணொளியை (video) ஒரு தொகுப்பில் (folder ல்) வைத்து குறுக்கி (compress) ifile.it எனும் வலைத் தளத்தில் மென்னேற்றினால் (upload) ஒரு தொடர்பு (link) கிடைக்கும்,
பின் அத்தொடர்பினை அனைவருக்கும் அளித்தால்,
தங்களின் காணொளியை படம் பிடித்தவாறே காண முடியும்,
இது வரை மேற் சொன்ன வழியில் நான் மிகுவடிவ (high memory) கோப்புகளை (files) மின்னேற்றியுள்ளேன், காணொளியை ஏற்றவில்லை,
நீங்கள் முயன்று பாருங்கள்,
அன்புடன்
மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com
good one
all stills r sema
yr explanation also
நல்லாருக்கப்பு..........!
/////நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///////
எல்லாரும் இதுக்கு கமென்ட் போடனுமாமே, அதுனால நானும் போட்டுடுறேன்....
நான் நம்புறேம்பா..... மட்டையாகுறது நமக்கு என்ன புதுசா? எப்பிடி ஆகுனா என்ன, மட்டையாகனும் அதான் முக்கியம்...!
/////உடனே, சுமார் 20 டால்பின்கள் ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன/////
கணக்குல புளிதாம்ல நீய்யி....!!!
////திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?/////
கல்யாணம்லாம் நல்லாத்தான் பண்றாய்ங்க.........!
////அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி./////
புதுச் செய்தி, அருண், அந்தத் தீவில் நம்ம ஓணான் போன்ற ஜந்துகள் ஏதாவது பார்க்க முடிந்ததா?
/////மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn)./////
பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கே?
நானும் அந்த இடத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்தது
படங்கள், வீடியோ அருமை!!!
தெளிவான விளக்கங்களுடன் படமும் அருமை நண்பரே
நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ம்ம்ம்ம்...
பகிர்வுக்கு நன்றி
//கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.//
வீடியோவை யூடூப்பில் தறவேற்றிவிட்டு அதன் லிங்கை கொடுத்துவிட்டால் தரம் குறையாமல் இருக்குமல்லவா...
ஊர் சுற்றி அருண்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)///////
எல்லாரும் இதுக்கு கமென்ட் போடனுமாமே, அதுனால நானும் போட்டுடுறேன்....
நான் நம்புறேம்பா..... மட்டையாகுறது நமக்கு என்ன புதுசா? எப்பிடி ஆகுனா என்ன, மட்டையாகனும் அதான் முக்கியம்...!//
Repeattu.....avvvv
நீங்க உங்க தங்கமணி கூட போயிருந்தா பீர் அடிக்க வாய்ப்பில்லை எனவே நம்பறேன். தீவை பற்றி இன்னும் மேலதிக தகவல்கள் உள்ளதா ??
தீவு., தீவுன்னு சொல்லிட்டு
கடைசிவரைக்கும் தீவு உள்ள
எப்படி இருந்ததுன்னு காட்டாம..
அதோ.................பாருங்கன்னு
தூரத்துல இருந்து காட்டினது
செல்லாது.. செல்லாது..
கேப்ரியல் தீவுக்கே பொய் வந்த மாதிரி இருக்கு. நல்ல டிராவலாக்
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் அங்கு அழைத்து, நீங்கள் ஆசைப்பட்டாலும், எங்கள் அனவருக்கும் ஊர்சுற்றி காட்டுவது என்பது இயலாத காரியம். ஆனால், உங்களின் கண்கள் வழியே மொரீசியசை பார்க்க வைத்ததற்கு நன்றி!
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் அங்கு அழைத்து, நீங்கள் ஆசைப்பட்டாலும், எங்கள் அனவருக்கும் ஊர்சுற்றி காட்டுவது என்பது இயலாத காரியம். ஆனால், உங்களின் கண்கள் வழியே மொரீசியசை பார்க்க வைத்ததற்கு நன்றி!
போட்டோக்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையா இருக்கு தல...
இனிமேல் யார் தோலையாவது உரிக்கணும்னா அந்த கடல்ல கொண்டு போய் விட்ரலாம் போல
Nice Experience Mams..
அனுபவங்கள் அதிசயிக்க வைத்தன... தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்...
//
இனிமேல் யார் தோலையாவது உரிக்கணும்னா அந்த கடல்ல கொண்டு போய் விட்ரலாம் போல
//
repeeeeeeeeeeeeatuuuuuuuuu!
மட்டையானத நம்பின அனைவருக்கும் தாங்க்ஸ்
(உஸ்... என்னா கொலவெறி எல்லாருக்கும்)
@ மார்கண்டேயன்
50 MB அப்போட் பண்ண குறந்தது 45 நிமிடம் ஆகலாம்.... ஆபிஸ்ல அலோ பண்ணமாட்டாங்க ;)
@ வெங்கட்
//அதோ.................பாருங்கன்னு
தூரத்துல இருந்து காட்டினது
செல்லாது.. செல்லாது..//
கேமரா தண்ணீர்ல நனைஞ்சிடும்னு பயந்து எடுத்துட்டு போகலைங்க.... படகுலயே நாங்க முழுசா நனைஞ்சாச்சு....கேமராவை அதுக்கு அப்புறம் தொடவே இல்லை.... போகும் போது எடுத்த போட்டொஸ் மட்டும்தான் இங்க இருப்பதை நோட் பண்ணுங்கப்பா...
படங்களும் அழகான விளக்கங்களும் அருமை
நல்ல பகிர்வு.
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.
உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
Post a Comment