Cricket Countdown....

Thursday, November 4, 2010

தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்....

குழந்தைகளுக்கு எந்த பண்டிகை பிடிக்கும் என கேட்டு பாருங்கள்.... கண்டிப்பாய் அவர்கள் தீபாவளி என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால், எனக்கும் அந்த பண்டிகைதான் பிடிக்கும். ஹி ஹி ஹி...

சரி தீபாவளி கிப்ட் கொடுப்பதற்கு முன் ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாமா? சிறுவயதில் தீபாவளி சமயங்களில் என் பாட்டி வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். அவர் வேலூர் அருகில் உள்ள ஆரணியில் வசிக்கிறார். ஒவ்வொரு வருடமும் மே மாத விடுமுறைக்கும் அங்குதான் செல்வதால் எனக்கு என ஒரு நண்பர் பட்டாளம் இருந்தது.

தீபாவளி சமயங்களில் எங்கள் தெருவில் ஒரு வழக்கம் உண்டு. சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி அன்று விடியற்காலை நரகாசுரன் வதம் நிகழ்ச்சியை செய்வோம். இது பல காலமாக அங்கு நடந்து வரும் வழக்கம். அந்த வருடமும் அந்த நிகழ்ச்சியை செய்தோம். அந்த தெருவில் ஒரு ஓவியர் இருந்தார். அவர் ஒரு ஆளுயர அட்டையில்  கட்அவுட் வடிவத்தில் கிருஷ்ணர், நரகாசுரன் படங்களை வரைந்து தந்தார். நரகாசுரன் தலை தனியாக கழலும்படி அமைத்து இருந்தார்.


நாங்கள் எல்லாம் முந்தின நாள்  இரவு அவர் அவர்கள் வசதிக்கு தக்கபடி ஆளுக்கு கொஞ்சம் பட்டாசு எடுத்து வந்து ஒரு வீட்டில் கிருஷ்ணர் நரகாசுரன் படங்களுடன் சேர்த்து வைத்தோம். மறுநாள் காலை  மணி அடித்து கொண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டும் கிருஷ்ணர் படத்தை ஊர்வலமாக மூன்று தெரு சுற்றி வந்து எங்கள் தெருவின் மையத்தில் கிருஷ்ணரையும் நரகாசுரனையும் எதிர் எதிரில் சுமார் 5 மீட்டர் இடைவெளியில் வைத்தோம்.

நரகாசுரன் தலையில் இருந்து ஒரு நூல் கட்டி அதன் மறுமுனையை கிருஷ்ணர் கையில் கட்டினோம். அந்த நூலில், ரயில் வெடியை வைத்தோம். அது கொளுத்தியவுடன் வேகமாக சென்று நரகாசுரன் தலை இடித்து துண்டிக்குமாறு செட் செய்தோம்.

எல்லாம் திட்டமிட்ட படிதான் சென்றது. ஆனால், இந்த பாழாய் போன ரயில் வெடி சொதப்பிவிட்டது. சரியாக நூலில் சென்ற ரயில் வெடி நரகாசுரன் அருகில் சென்றவுடன் என்ன ஆனாததோ தெரியவில்லை உடனே வேகமாக ரிட்டன் ஆனாது. (பிறகுதான் சொன்னார்கள் அந்த வெடி அப்படித்தான் இரண்டு பக்கமும் சென்று வருமாம்) நேராக கிருஷ்ணர் கையை பதம்பார்த்து விரலை துண்டித்தது. சுதர்சணசக்கரத்துடன் கிருஷ்ணர் விரல் சில அடிகள் தள்ளி விழுந்தது. விடு சண்டைனா எதிரிமேல 10 அடி விழும்போது நம்ம மேல 1 அடி விழறது சகஜம்தான்னு கிருஷ்ணரை சமாதானம் செய்து விட்டு அடுத்த பிளான் B ஐ ஆரம்பித்தோம், அடுத்த அடி எங்கள் மீது விழப்போவது தெரியாமல்.

எங்கள் பிளான் B என்ன வென்றால், நரகாசுரன் தலையில் ராக்கெட்டை கட்டி பற்ற வைப்பது. அது தலையுடன் மேல சென்ற பிறகு மீதி நரகாசுரனை கொளுத்திவிடுவது. அந்த பிளான் சரி என தோணவே, அனைத்தையும் செட் செய்தோம். கிருஷ்ணர் தானே வதம் செய்ய வேண்டும்! எனவே, எங்களில் கிருஷ்ணா என பெயர் கொண்டவனை கூப்பிட்டோம் (என்ன ஒரு சிந்தனை, அப்போவே நான் இப்படிதான் ரொம்ப அறிவு) அவனை கன்வின்ஸ் செய்து கொளுத்த சொன்னோம்.

அடுத்த விபரீதம் நடந்தது. கொளுத்தியவுடன் நரகாசுரன் தலை ராக்கெட் பாரம் தாங்காமல் சரிய, ராக்கெட் மட்டும் தலையில் இருந்து பிடுங்கி கொண்டு நேராக அருகில் இருந்த குடிசை ஓலையில் தஞ்சம் அடைந்து வெடித்தது.  சிறியதாக தீப்பற்றவும் ஆரம்பித்தது. நாங்கள் போட்ட கூச்சலில் வீட்டில்  இருந்த அனைத்து பெரியவர்களும் ஒரு வழியாக ஓடிவந்து தீயை அனைத்தனர். 

அடுத்து இன்னொரு நண்பன் பிளான் C செய்யலாம்டா என சொல்ல, நாங்கள் அனைவரும் ஆணியே புடுங்க வேணாம் என்று சொல்லி நரகாசுரன் தலையை நாங்களே தூக்கி போட்டு விட்டு கிளம்பினோம். வீட்டுக்கு போன பின் எங்களுக்கு டமால் டிமீல் சரவெடியுடன் நிஜ தீபாவளி ஆரம்பித்தது....

டிஸ்கி: தயவுசெய்து, குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருங்கள். டீவி நிகழ்ச்சிகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். 

அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

ஓ! தீபாவளி கிப்ட் தரலைல. இந்த ஆடியோ கிளிப்பை கேளுங்கள்.




என் ஒன்றரை வயது மகள் ஷம்ஹித்தா உங்களுக்கு “Happy Deepavali” சொல்கிறாள்

ஆடியோ கிளிப் ஒர்க் ஆகவில்லை எனில் இங்கு கிளிக் செய்து கேட்கவும்.









36 comments:

பெசொவி said...

நல்ல கொசு "வத்தி"

Arun Prasath said...

அடடா வட போச்சே

karthikkumar said...

தீபாவளி வாழ்த்துக்கள் பங்காளி

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ .......ஹா...............
அருண் எல்லோருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள் ,மெயின் அ ஷம்ஹித்தா வுக்கு சொல்லிடு மக்கா

மங்குனி அமைச்சர் said...

ஆபிரேசன் d இருக்கு ஐடியா சொல்லவா ?

S.M said...

cho chweet shami kutty..

Arun Prasath said...

மொதல் டைம், இந்த பாப்பாக்கு ஒரு பாப்பா தீபாவளி விஷ் பண்ணிருக்கு.... ரொம்ப சந்தோசம் :)

Anonymous said...

சம்ஹிதா வுக்கும் அவங்க அப்பாவுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் அருண்..
குட்டி பாப்பாக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் :)

துளசி கோபால் said...

தீபாவளி வாழ்த்து(க்)கள்.

ஆமாம்...அந்த விரல் என்ன ஆச்சு?

போயே போயிந்தா? இல்லை மீண்டும் ஒட்ட வச்சாச்சா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் அருண்..

சௌந்தர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குட்டிக்கும் வாழ்த்துக்கள்...

கருடன் said...

@அருண்

நிறைய பிளாஷ்பேக் வச்சி இருக்க மச்சி!! (யார் டைரிய சுட்ட??) நல்லா இருக்கு.. ஹி ஹி ஹி... திபாவளி வாழ்த்துகள் மச்சி!! சகோ & ஷமி கிட்ட சொன்னேன் சொல்லிடு..

Mohamed Faaique said...

Happy deepawali...

சசிகுமார் said...

Nice

Gayathri said...

இவ்வளவு இனிமையான தீபாவளி
வாழ்ந்து சொன்னதுக்கு...
உங்க பொண்ணுக்கு நன்றி...ஹிஹி

தீபாவளி வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

அனுபவம் நன்றாகவே இருந்தது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

செல்வா said...

நான்வேணா பிளான் D சொல்லட்டுமா ..?

செல்வா said...

உங்களுக்கு அண்ணி மற்றும் குட்டிப் பாப்பாவுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!! சத்தம் இல்லாம பட்டாசு வெடிக்கணும்னா கோமாளியைத் தொடர்பு கொள்க .!!

Unknown said...

சம்ஹிதாவுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழத்துக்கள் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும், ஷம்ஹித்தாவிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அழகி said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அலைகள் பாலா said...

இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்...

அலைகள் பாலா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சுசி said...

கொசுவத்தி சூப்பர் அருண்.. குட்டிம்மாவ பாத்து கேக்க முடியல.. வீட்டுக்கு போய் பார்க்கறேன்..

போளூர் தயாநிதி said...

theepavali een kondata vendum?
polurdhayanithi

ப்ரியமுடன் வசந்த் said...

உங்களுக்கும் ஷம்ஹித்தா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் மாம்ஸ்!

ஹேப்பி தீபாவளி!

அன்பரசன் said...

தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.

சிவராம்குமார் said...

குழந்தைகளுக்கு தீபாவளி பிடிக்கும்.... உங்களுக்கு ஏன்??? ;-)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தீபாவளி வாழ்த்துக்கள் அருண்

Philosophy Prabhakaran said...

// கிருஷ்ணர் தானே வதம் செய்ய வேண்டும்! எனவே, எங்களில் கிருஷ்ணா என பெயர் கொண்டவனை கூப்பிட்டோம் //

மரண மொக்கை...

உங்களுக்கும் ஷிம்ஹித்தாவிற்கும் எங்களது தீபாவளி வாழ்த்துக்கள்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பேபி அ.ஷம்ஹிதாவுக்கும்
ஷம்ஹிதா அப்பாவிற்கும்
ஷம்ஹிதா அம்மாவிற்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

என்னது நானு யாரா? said...

உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது உங்க ஃப்ளாஷ்பேக். ரொம்ப ரசிச்சேன். அருமை அருமை! தீபாவளி மௌரிஷியஸில் எப்படி கொண்டாடுறாங்கன்னு அடுத்தப் பதிவு போடுங்களேன். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.

உங்களுக்கு தீபாவளி எப்படி போச்சுன்னும் சொல்லுங்க! நீங்க எல்லோரும் நல்லபடியா கொண்டாடினீங்களான்னு சொல்லுங்க அருண்! வாழ்த்துக்கள் நண்பா!

Unknown said...

நல்ல ஃப்ளாஷ்பேக் அருண்..

முன்னயே சொல்லமுடியல.. தீபாவளி வாழ்த்துக்கள்.. :-))