Cricket Countdown....

Monday, November 22, 2010

(பதிவு) உலக பொது மறை

பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்

புனைவெழுதி திட்டு பிரபலமாவாரே ஆவர்
பதிவெழுதி பிரபலமாக தெரியாதவர்

மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு

அனானியாய் கமெண்டுபவர ஒறுத்தல் அவர்நாண
திட்டி புதுபதிவு போட்டுவிடல்

ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு

கும்மி அடித்து 100 க்மெண்ட் வாங்கியபின்
சொல்க நான் “பிரபலபதிவர்”

குழப்ப பதிவு கிலர்க்கு எளிய அரியவாம்
படித்து புரிந்து கொளல்

புதுபதிவு போட சரக்கு இல்லாத் போது
சிலசமயம் மெயிலும் பதிவாகும்

மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று

கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்

டிஸ்கி: எந்த எந்த குறள் யார்யாருக்கு பொருந்தும் என்பதை ரசிகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்


57 comments:

எல் கே said...

ஹஹஅஹா, புது வள்ளுவரே வாழ்க

பெசொவி said...

குறள் இனிது வெண்பா இனிது என்பர் அருணின்
மறைகழன்ற பதிவு காணாதவர்

Arun Prasath said...

ஐயோ ஐயோ... தாங்கல தாங்கல.... ரூம் போட்டு யோசிப்பாங்களோ

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன கொடும ஸார் இது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு///

English kural rejected.

பெசொவி said...

http://ulagamahauthamar.blogspot.com/2010/07/134.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கும்மியடித்து வாழ்வோரே வாழ்வார், மற்றவர்
எல்லாம் பம்மியே சாவார்

Madhavan Srinivasagopalan said...

எலேய்.. எலேய்.. என்னலேய் சொல்லுற
களாய் எனக் கலக்கவா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு///

English kural rejected.////

இதுவும் ரிஜக்டட்....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

திருவள்ளுவர் எழுதிய பதிவுகளுக்கு எதிர் பதிவு எழுதிய அருண்பிரசாத் ஒழிக...

செல்வா said...

இன்னிக்கும் வடை போச்சே .,

//மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு////

இது எனக்கு ..!!

செல்வா said...

//கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்///

இதுவும் எனக்கு ..!!

செல்வா said...

//மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று/

நான் மாதி யோசித்து பதிவு போட்டாத்தான் எல்லோரும் திட்டுறீங்களே .,
அப்புறம் எங்க மாத்தி யோசிக்கறது .!

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு///

English kural rejected.////

இதுவும் ரிஜக்டட்....!

இதை நான் வழிமொழிகிறேன்

கருடன் said...

@அருண்

//மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று//

என் நண்பன் ரமேஷ நீ எப்படி இப்படி திட்டலாம்???

Unknown said...

இளைய திருவள்ளுவர் வாழ்க .

தினேஷ்குமார் said...

""பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்""

எங்கயோ வகையா மாட்டீருக்கீங்க போலிருக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

//ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு
//



இது தான் சூப்பர் மக்கா

Anonymous said...

சூப்பர் அருண்..
"அதிகாரம் : பதிவுலகம் "
கலக்கு நீ :)

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said... 11
இன்னிக்கும் வடை போச்சே .,

//மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு////

இது எனக்கு ..!////

வடை கேட்டு வருபவனை வடையால் உதைத்து என்ன பயன்

Madhavan Srinivasagopalan said...

//ப.செல்வக்குமார் said... 13
//மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று/

நான் மாதி யோசித்து பதிவு போட்டாத்தான் எல்லோரும் திட்டுறீங்களே .,
அப்புறம் எங்க மாத்தி யோசிக்கறது .!//

எலேய்.. சொன்ன ரெண்டுல நீ ஒன்ன மட்டுமே செய்யுற.. யோசிக்குரதிலை.. அதான்..

Ramesh said...

ஏன்.. நல்லாத்தான்யா இருந்தீங்க.. ஏன் எல்லாரும் திடீர்னு இப்படி ஆயிட்டீங்க..

அருண் பிரசாத் said...

@ LK
// ஹஹஅஹா, புது வள்ளுவரே வாழ்க//
நன்றி நன்றி

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
// குறள் இனிது வெண்பா இனிது என்பர் அருணின்
மறைகழன்ற பதிவு காணாதவர்//
சே.. சேம் சைட் கோல்...

@ Arun Prasath
// ஐயோ ஐயோ... தாங்கல தாங்கல.... ரூம் போட்டு யோசிப்பாங்களோ//
ஹி ஹி ஹி

@ செல்வக்குமார்
//
//கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்///

இதுவும் எனக்கு ..!!//

ஆனாலும் வட போச்சே

அருண் பிரசாத் said...

@ dineshkumar
//
""பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்""

எங்கயோ வகையா மாட்டீருக்கீங்க போலிருக்கு//
வேற எங்க நம்ம பாரத் பாரதிகிட்டதான்

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள் நண்பா.

எஸ்.கே said...

செம சூப்பருங்க!

அலைகள் பாலா said...

kanyakumari la silai vainga pa

Unknown said...

வள்ளுவன் செத்தான் ...

Anonymous said...

நல்ல வேளை.. வள்ளுவர் உயிரோட இல்ல.. இருந்திருந்தா எழுத்தாணிய வச்சு குத்தியே உங்கள கொன்றுப்பாரு

karthikkumar said...

பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்///
தலைவரே இது எனக்கு பொருந்தும் போல ஹி ஹி உங்களோட தொடர் பதிவ நானும் continue பண்ணிருக்கேன்.

Anonymous said...

மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று//
கலக்கிட்ட மச்சி

Anonymous said...

எல்லாமே கண்ல ஒத்திக்கிற மாதிரி...

Anonymous said...

இனிமேல் இப்படி பதிவு வராதுல்ல..சாவடிக்கிறாய்ங்கய்யா

வெங்கட் said...

ஆஹா.. ஆத்திச்சூடிக்கு அப்புறம்
திருக்குறள் எழுதலாம்னு இருந்தேனே..
இவர் முந்திக்கிட்டாரே..

சரி விடு.. நமக்கு என்ன மேட்டரா இல்ல..?

அதானே.. நாம இந்த கம்பராமாயணம்.,
நாலடியார், புறநானூறு, அகநானூறு,
குண்டலகேசி இப்படி எதையாவது
Remix பண்ண Try பண்ணுவோம்..!!

NaSo said...
This comment has been removed by the author.
NaSo said...

// 1. வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
2. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
//

வெண்பாவின் இலக்கணப் படி உங்கள் குறள்களில் நிறைய சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளன.

Gayathri said...

hahaha samayaa irukku,

ini neengal pudhuyuga valluvar endru azhaikka paduveer pulavare

சுசி said...

பதிவுலக பொய்யாமொழியார் அருண் வாழ்க வாழ்க :))))

ஜெயந்தி said...

வள்ளுவர் வாழ்க வாழ்க. குறளெல்லாம் உண்மையிலேயே சூப்பர்.

Unknown said...

/மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு//

ஆகா...

Unknown said...

ஐயனே...

தொடர் பதிவுகளின் நாயகனே...

நீரே தொடர் பதிவின் முதலும், முடிவும் ஆகுக...

Unknown said...

//அதானே.. நாம இந்த கம்பராமாயணம்.,
நாலடியார், புறநானூறு, அகநானூறு,
குண்டலகேசி இப்படி எதையாவது
Remix பண்ண Try பண்ணுவோம்..!! //

எம் அப்துல் காதர் said...

அகர முதல் பதிவெல்லாம் ஆதியில் பீதிய கிளப்புமோ!! சூப்பர் பாஸ் கலக்கிடீங்க!!

THOPPITHOPPI said...

திருக்குறள் மாதிரி நிறைய அர்த்தம் இருக்குது(உண்மைய போட்டு உடைச்சி இருக்கீங்க)

Madhavan Srinivasagopalan said...

அது 'உலகப் பொது மறை' அப்படீனா..
அருணுகிட்டேருந்து 'மறைச்சு வை' னு அர்த்தம்..

மோகன்ஜி said...

பதிவுலக அய்யன் அருண் அவர்களே! இன்னமும் சிரிச்சிகிட்டிருக்கேன்! தொடர்ந்து தாக்குங்க!

Philosophy Prabhakaran said...

கேபிளென்பார் ஜாக்கியென்பார் அருண்பிரசாத்தின் மொக்கை
பதிவுகளை படிக்கா தவர்...

Unknown said...

நல்ல ட்ரைங்க அருண்..

திருவள்ளுவர்கூட இப்படித்தான் மொக்கையா ட்ரை பண்ணி ஹிட்டாயிருக்கும்னு நினைக்கறேன்..

:-)

Chitra said...

குழப்ப பதிவு கிலர்க்கு எளிய அரியவாம்
படித்து புரிந்து கொளல்


..... ha,ha,ha,ha,....

ராஜி said...

50 வது வடை எனக்கே

ராஜி said...

ரொம்ப யோசிப்பிங்களோ..., ஆனாலும் யோசித்த விதம் அருமை

மங்குனி அமைச்சர் said...

சூப்பரு அருண் , ,,, தமிழ்மணத்திலும் இணை

தமிழ்க்காதலன் said...

அருண் சிரிக்க முடியல... அம்மாடிடிடி...... எப்பா... எழுத ஒன்னும் இல்லன்னா இப்படி ஒக்காந்து யோசிப்பீங்களோ..? அருமை. அருமை. பதிவுலகின் நிச முகத்தை கிழித்து விட்டீர். எல்லா உண்மைகளையும் அப்படியே போட்டு உடைத்து விட்டீர். ஒன்றை கவனித்தீரா.... திருவள்ளுவர மாதிரி முயற்சி பண்ணாக் கூட "உண்மைகளா" வந்து விழுது. பொய்யா மொக்க பதிவு போடாத "பொய்யாமொழியே" நீவிர் வாழ்க.

Mathi said...

lovely poems...

Mathi said...

lovely poems...

Mathi said...

lovely poems...

Vaitheki said...

மிகவும் சுவாரசியமாய் உள்ளது. வாழ்த்துக்கள் !