Cricket Countdown....

Wednesday, November 10, 2010

பூமியை பாதுகாப்போம்....

உங்களிடம் நல்ல முறையில் ஓடும் பழைய வாட்ச்கள் உள்ளதா?

படித்து முடித்த பல புத்தகங்கள் தூக்கிபோட மனமின்றி பரணை நிரப்புகிறதா?

பழைய மிக்ஸி, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகி ஆனால் ரிப்பேர் செய்யும் வழி இருந்து செய்யாமல் விட்டது வீட்டில் சேர்ந்து இருக்கிறதா?


இப்படி பல உபயோகித்த பொருட்கள், தூக்கி எறிய மனது வராத பொருட்கள், பிறருக்கு உதவும் என நீங்கள் நினைக்கும் பொருட்கள் போன்றவற்றை தேவைபடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு தளம் உள்ளது.

http://www.freecycle.org/

இது முழுதும் வியாபார நோக்கிலாமல் செயல்படும் ஒரு அமைப்பு. இவர்கள் நோக்கம் பூமியில் தேவையில்லாமல் தேங்கும் உபயோகமுள்ள பொருட்களை மறுசுழற்சியாக மற்றவர்கள் உபயோகிக்க உதவுவதுதான். 

ஏறக்குறைய உலகம் முழுதும் 7 மில்லியன் மக்கள் இந்த அமைப்பில் இணைந்து உள்ளனர். இவர்கள் செயல்படும் விதம் ரொம்ப சிம்பிள். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருநகரங்கள் வாரியாக பிரிவுகள் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு குரூப் மெயில் வைத்து உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் அல்லது பெற விரும்பும் பொருளின் Detailsஐ தங்கள் முகவரிஅனுப்புவர். தேவைபடுவோர்  அவர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.


இந்த அமைப்பு தமிழ்நாட்டில் சென்னையிலும் கோவையிலும் உள்ளது.  கோவையில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை என்றாலும், சென்னையில் 450+ உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. இதில் உறுப்பினர் ஆவதால் அவர்கள் தரும் பொருளை நீங்கள் வாங்கிதான் ஆக வேண்டும் என்றோ, இல்லை, நீங்க குறிப்பிட்டவருக்கு தான் பொருள் தர வேண்டும் என்றோ அவசியம் இல்லை. இது முற்றிலும் உங்கள் சுய விருப்பத்தை பொருத்ததே....

இதில் உறுப்பினராக ஆகித்தான் பார்ப்போமே... யாருக்கு தெரியும் நீங்கள் வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கும் ஒரு புத்தகமோ, பொருளோ உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கலாம்...

வீணாக்குவதை தவிர்ப்போம்....
பூமியை பாதுகாப்போம்...



46 comments:

எல் கே said...

நல்ல உபயோகமான தகவல்

கருடன் said...

@அருண்

// யாருக்கு தெரியும் நீங்கள் வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கும் ஒரு புத்தகமோ, பொருளோ உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கலாம்...//

நான் ரொம்ப நாள நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு மூளை தேடிட்டு இருக்கேன் அது மட்டும் கிடச்சா நான் இம்சை பாபுவை நடந்தே ஜூப்பிட்டர் கிரகத்துகு போக சொல்றேன்...

கருடன் said...

@அருண்

அட 100 Followers!! வாழ்த்துகள் மச்சி!!

குரல் எங்க இருந்து வருது தெரியலையா?? மச்சி கொஞ்சம் கீழ குனிஞ்சி பாரு... யோ உன் கால புடிச்சி கேக்கறேன் தயவு செஞ்சி இதுக்கு ஒரு போஸ்டு போடாத.... :)))

Unknown said...

நல்ல விசயங்க..

karthikkumar said...

நன்று அந்த லிங்கில் பார்க்கிறேன்

எஸ்.கே said...

நல்ல விசயம்தான்! சேரலாமே! இதுபோல் மறு உபயோகம் செய்தல் பூமிக்கு நல்லதுதான்!

அருண் பிரசாத் said...

நன்றி எல் கே, பாபு

@ TERROR-PANDIYAN(VAS)
// அட 100 Followers!! வாழ்த்துகள் மச்சி!!
குரல் எங்க இருந்து வருது தெரியலையா?? மச்சி கொஞ்சம் கீழ குனிஞ்சி பாரு... யோ உன் கால புடிச்சி கேக்கறேன் தயவு செஞ்சி இதுக்கு ஒரு போஸ்டு போடாத.... :)))//
சத்தியமா போடமாட்டேன் மச்சி கவலை படாத....

ஒரு முடிவு எடுத்து இருக்கேன் இனி 100 வது போஸ்ட், 200 followers, Birthday Wish, 1,000,000 Hits இப்படிலாம் போட்டு ஒரு பதிவை வீணாக்கபோறது இல்லை

ஹரிஸ் Harish said...

பயனுள்ள தகவல்..தொடருங்கள்..

கருடன் said...

@அருண்

//ஒரு முடிவு எடுத்து இருக்கேன் இனி 100 வது போஸ்ட், 200 followers, Birthday Wish, 1,000,000 Hits இப்படிலாம் போட்டு ஒரு பதிவை வீணாக்கபோறது இல்லை//

மச்சி கலக்கிட்ட!! பதிவுலக விடிவெள்ளி அருண் வாழ்க!! :)) இதுக்கு நன்றி தெரிவிச்சி ரமேஷ் அடுத்து என்ன போஸ்ட்டு போட்டாலும் கலாய்க்கரோம்...

Anonymous said...

மிக பயனுள்ள தகவல் அருண்.. :)
கீப் இட் அப்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா, சிரிப்பு போலீசு அம்புட்டு செலவு பண்ணி சிங்கப்பூரு போயிருக்க மாட்டாரே?

Arun Prasath said...

நல்ல தகவல்... எனக்கு ஒரு லேப்டாப் வேணும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தக் காலத்துல பேரிச்சம்பழத்துக்கு போட்டுக்கிட்டு இருந்தோம், இப்போ கம்ப்யூட்டர் காலத்துல அதுக்கும் வெப்சைட்டு வெச்சிட்டாஙக!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
நன்றி எல் கே, பாபு

@ TERROR-PANDIYAN(VAS)
// அட 100 Followers!! வாழ்த்துகள் மச்சி!!
குரல் எங்க இருந்து வருது தெரியலையா?? மச்சி கொஞ்சம் கீழ குனிஞ்சி பாரு... யோ உன் கால புடிச்சி கேக்கறேன் தயவு செஞ்சி இதுக்கு ஒரு போஸ்டு போடாத.... :)))//
சத்தியமா போடமாட்டேன் மச்சி கவலை படாத....

ஒரு முடிவு எடுத்து இருக்கேன் இனி 100 வது போஸ்ட், 200 followers, Birthday Wish, 1,000,000 Hits இப்படிலாம் போட்டு ஒரு பதிவை வீணாக்கபோறது இல்லை////

அடடா அவசரப்பட்டுட்டீங்களே?

Chitra said...

ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு குரூப் மெயில் வைத்து உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் அல்லது பெற விரும்பும் பொருளின் Detailsஐ தங்கள் முகவரிஅனுப்புவர். தேவைபடுவோர் அவர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.


..... Thats a good idea! Reduce, Reuse and Recycle!!!

100 followers - Congratulations!!!!

Anonymous said...

உபயோகமான பதிவு.
வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

உடனே சேர்ந்திட வேண்டியது தான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்.

Anonymous said...

ஓட்டு போட்டாச்சி பயனுள்ள,அருமையான,சிறப்பான பதிவுங்கோ

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல் .
தொடருங்கள் ...
வாழ்த்துகள் .

Anonymous said...

குரல் எங்க இருந்து வருது தெரியலையா?? மச்சி கொஞ்சம் கீழ குனிஞ்சி பாரு... யோ உன் கால புடிச்சி கேக்கறேன் தயவு செஞ்சி இதுக்கு ஒரு போஸ்டு போடாத.//
சூப்பரு

Anonymous said...

அவ்வ்..இனிமே...விளம்பர பதிவு போட்டா செமயா காலை வாரிடுவாங்க போல இருக்கே

Unknown said...

அக்கறையான பதிவு ...

சௌந்தர் said...

நல்ல பயனுள்ள பதிவு

Ramesh said...

செம யூஸ்ஃபுல் பதிவு... மெம்பராயிடுவோம்..

செல்வா said...

உண்மைலேயே ரொம்ப கலக்கலான அவசியமான பதிவு அண்ணா .,
நானும் இப்பொழுதே இணைந்து விடுகிறேன் ..!

சுசி said...

நல்ல பகிர்வு அருண்.. முயன்று தான் பார்ப்போமே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

உபயோகமான தகவல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said... 2

@அருண்

// யாருக்கு தெரியும் நீங்கள் வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கும் ஒரு புத்தகமோ, பொருளோ உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கலாம்...//

நான் ரொம்ப நாள நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு மூளை தேடிட்டு இருக்கேன் அது மட்டும் கிடச்சா நான் இம்சை பாபுவை நடந்தே ஜூப்பிட்டர் கிரகத்துகு போக சொல்றேன்...
///

naan ready. terar readyaa?

nice post machi

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் ரொம்ப நாள நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு மூளை தேடிட்டு இருக்கேன் அது மட்டும் கிடச்சா நான் இம்சை பாபுவை நடந்தே ஜூப்பிட்டர் கிரகத்துகு போக சொல்றேன்... //
ஆமா டெர்ரர் தன டிரைவர் ஜுபிட்டர் கிரகத்துக்கு போக வா மக்கா போவோம் ......அங்க போய் நாம ரெண்டு பெரும் பூமிய நோக்கி குதிப்போம் .........அப்படியே செத்து செத்து......விளையாடுவோம .............

இம்சைஅரசன் பாபு.. said...

//@ TERROR-PANDIYAN(VAS)
// அட 100 Followers!! வாழ்த்துகள் மச்சி!!
குரல் எங்க இருந்து வருது தெரியலையா?? மச்சி கொஞ்சம் கீழ குனிஞ்சி பாரு... யோ உன் கால புடிச்சி கேக்கறேன் தயவு செஞ்சி இதுக்கு ஒரு போஸ்டு போடாத.... :)))//
சத்தியமா போடமாட்டேன் மச்சி கவலை படாத....

ஒரு முடிவு எடுத்து இருக்கேன் இனி 100 வது போஸ்ட், 200 followers, Birthday Wish, 1,000,000 Hits இப்படிலாம் போட்டு ஒரு பதிவை வீணாக்கபோறது இல்லை //

மக்கா அருண் டெர்ரர் வயறு எரிஞ்சி சொல்லுறன் ......அதே கேட்டு நீயும் அவசர பட்டுடியே .....அவன் ஒரு நாளும் பதிவு போடா போறது இல்லை அதான் அவனுக்கு அந்த கொடுப்பின இல்ல ........நீங்க போடுங்க மக்கா.வாழ்த்து சொல்ல ஒரு மனசு வேண்டும் .இந்த டெர்ரர் பொறமை பிடிச்சவனா இருக்கான் ........

கருடன் said...

@இம்சை

//மக்கா அருண் டெர்ரர் வயறு எரிஞ்சி சொல்லுறன் ......அதே கேட்டு நீயும் அவசர பட்டுடியே .....//

ஆமாம்.. இங்க தினம் ஒரு பதிவு போட்டா நோபல் பரிசு தராங்க. 100 ஃப்லோயர்ஸ் இருந்தா IIT சர்ட்டிப்பிகேட், 50 ஓட்டு வாங்கினா ஐ.பி.எஸ் ரேங்க்... 500 Followers இருந்த ஜனாதிபதி

//நீங்க போடுங்க மக்கா.வாழ்த்து சொல்ல ஒரு மனசு வேண்டும் .//

இப்படி வாழ்த்தி வாழ்த்தி நல்ல பதிவர் எல்லாம் மொக்க பதிவர் ஆக்கிடிங்க.... :))) . நிங்க வாழ்த்தி ஒரு பதிவு போடுங்க. அதுக்கு நன்றி தெரிவிச்சி அருண் ஒரு பதிவு போடுவான் நீங்க ”அட பரவாயில்லை விடுங்க” அப்படினு ஒரு பதிவு போடுங்க... “இருக்கட்டும் வைங்க” அப்படினு ரமேஷ் ஒரு பதிவு.... :))))

மச்சி அருண் இது எல்லாம் சத்திய சோதனை மனச தளரவிடாத... :))

Madhavan Srinivasagopalan said...

நல்ல மேச்செஜு.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Unknown said...

பயனுள்ள தகவல்.
பூமியைப் பாதுகாக்கும் அக்கறைக்கு நன்றிகள்..

வெங்கட் said...

// ஒரு முடிவு எடுத்து இருக்கேன்
இனி 100 வது போஸ்ட், 200 followers,
Birthday Wish, 1,000,000 Hits இப்படிலாம் போட்டு
ஒரு பதிவை வீணாக்கபோறது இல்லை //

( Mind Voice.. )
ஒரு வேளை நம்மள தான்
குத்திகாட்டறாங்களோ..?!!

சே.. சே.. இருக்காது..!!

நம்மள போயி இப்படி எல்லாம்
குத்திகாட்ட மாட்டாங்கப்ப..

அதான் நேரடியாவே திட்டுவாங்களே..

வெங்கட் said...

// ஒரு முடிவு எடுத்து இருக்கேன்
இனி 100 வது போஸ்ட், 200 followers,
Birthday Wish, 1,000,000 Hits இப்படிலாம் போட்டு
ஒரு பதிவை வீணாக்கபோறது இல்லை //

( Mind Voice.. )
ஒரு வேளை நம்மள தான்
குத்திகாட்டறாங்களோ..?!!

சே.. சே.. இருக்காது..!!

நம்மள போயி இப்படி எல்லாம்
குத்திகாட்ட மாட்டாங்கப்ப..

அதான் நேரடியாவே திட்டுவாங்களே..

Philosophy Prabhakaran said...

உபயோகமான தகவல்... இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் செம ஹிட் போல... நானும் என் பங்குக்கு குத்திட்டு போறேன்...

அருண் பிரசாத் said...

பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

Madhavan Srinivasagopalan said...

//Venkat said "நம்மள போயி இப்படி எல்லாம் குத்திகாட்ட மாட்டாங்கப்ப. அதான் நேரடியாவே திட்டுவாங்களே.//

அட திட்டினாலும் உங்களுக்கு புரியாதுன்னு நெனைச்சேன்.. புரிஞ்சிடிச்சா..

சிவராம்குமார் said...

உபயோகமான பதிவு!!!

அன்பரசன் said...

//வீணாக்குவதை தவிர்ப்போம்....
பூமியை பாதுகாப்போம்... //

ரொம்ப உபயோகமான தகவல்..

ப்ரியமுடன் வசந்த் said...

பகிர்வுக்கு நன்றி மாம்சு!

அந்த அமைப்பை பற்றி படித்து பார்க்கிறேன்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பயனுள்ள தகவல் தொடருங்கள்..வாழ்த்துக்கள்

ஜெயந்தி said...

இப்படியெல்லாம்கூட இருக்கா?

Unknown said...

present sir....

சாமக்கோடங்கி said...

மிகவும் உபயோகமான தகவல்..

கோயம்புத்தூரில் இருக்கிறதா...? சரி பார்க்கிறேன்..