அந்தோ!!
அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!
பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம்.
எல்லாக்கம்பிகளும்
வீணையின் அங்கமாவதில்லை.
தினமும் செதுக்கும் ஒரே சிற்பம்.
நிழலைக்காண
நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன.
உடுக்க நல்ல கச்சையின்றி தவிக்கும்
பிச்சைக்காரர்களைக் காணவோ நான்
இச்சையுடன் அமர்ந்தேன் ஜன்னலோரத்திலே!
ஒன்றாகவே இருந்த மூவரில்
ஏனோ இன்று கடையவன்
மூத்தவனை அழிக்கத்துவங்கினான். தாய் வீடு
பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்!
சகுனம்
வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ?
பரிசு
ஒவ்வொரு தந்தையும்
தன் மகனுக்கு தரும்
முதல் பரிசு -
முத்தம்
தாய்
நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...
என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
இந்த கவிதைலாம் சத்தியமா என்னுடையது இல்லைங்க.... (நான் தான் எழுதினேன்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க!)
இவை எல்லாம் சகோதரி சங்கீதா ஜெயபிரகாஷ் தன் புதிய வலைப்பூ
“சகியின் சங்கதிகள்” - ல்
எழுதியவை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே எழுதி இருக்காங்க. ஒரு எட்டு போய் பார்த்து உற்சாகபடுத்துங்க நண்பர்களே!
44 comments:
கவிதை எல்லாம் நல்லா எழுதுறாங்க போய் பார்த்து விடுகிறேன்...
சே ஜஸ்ட் மிஸ்
நல்லா எழுதியிருக்காங்க..
//அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்//
ஹா ஹா ஹா... செத்து போன தமிழ்ல படிக்கறது கூட சுகம் தன போல...
அவருக்கு வாழ்த்துக்கள்!
அப்பா கமெண்டு அங்கிட்டுதான்..
கவிதைகள் அனைத்தும் சூப்பர்!
கவிதைகள் அருமை.
நல்லாஇருக்கு.. பார்த்திடுறேன்...
//எழுதியவை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே எழுதி இருக்காங்க. ஒரு எட்டு போய் பார்த்து உற்சாகபடுத்துங்க நண்பர்களே!///
அப்பா இது நீங்க திருடியதா? என்ன அருண் சரக்கு தீந்து போச்சா? பதிலுக்கு பதில். ஹாஹா
//தாய் வீடு
பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்! //
இது கலக்கல்..
நல்லா இருக்கு.
நன்றி செளந்தர்
@ Arun Prasath
// சே ஜஸ்ட் மிஸ்//
வடை எடுக்கறதுல மும்முறமா இருக்கமாதிரி தெரியுது?!
நன்றி பதிவுலகில் பாபு
@ Arun Prasath
// //அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்//
ஹா ஹா ஹா... செத்து போன தமிழ்ல படிக்கறது கூட சுகம் தன போல...//
நீங்க காயத்திரிய தாக்கலையே # டவுட்டு
@ Madhavan
// அப்பா கமெண்டு அங்கிட்டுதான்..//
அப்போ இதுக்கு பேரு?
நன்றி எஸ் கே, நாகராஜ சோழன், சசிகுமார்
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//
//எழுதியவை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே எழுதி இருக்காங்க. ஒரு எட்டு போய் பார்த்து உற்சாகபடுத்துங்க நண்பர்களே!///
அப்பா இது நீங்க திருடியதா? என்ன அருண் சரக்கு தீந்து போச்சா? பதிலுக்கு பதில். ஹாஹா//
ஆகா என்னா சந்தோஷம்...
@ TERROR-PANDIYAN(VAS
// நல்லா இருக்கு.//
ஓகே சார்
//அந்தோ!!
அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!//
ஓஹ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட கடிதம் எழுதுறதா (திருமலையில தலைவர் எழுதுன கடுதாசி மாதிரி)
//ஆளுமை
பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம். //
சூப்பர்ப்...
//
பாக்கியம்
எல்லாக்கம்பிகளும்
வீணையின் அங்கமாவதில்லை.
//
எல்லா மலர்களும்
சந்தோஷ மாலைகளாவதில்லை
//கையெழுத்து
தினமும் செதுக்கும் ஒரே சிற்பம். //
கரீக்க்ட்டு செதுக்கி செதுக்கி கையெல்லாம் வலிக்குதுப்பா!’
//உணவு, உடை, இருப்பிடம்
ஒன்றாகவே இருந்த மூவரில்
ஏனோ இன்று கடையவன்
மூத்தவனை அழிக்கத்துவங்கினான். //
அருமைப்பா..
//சகுனம்
வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ? //
ஹஹஹா ம்ம் ஃபிஃப்த் சென்ஸ்
நல்ல அறிமுகம் மாம்ஸ்!
//ஆளுமை
பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம்.
//
கலக்கிட்டாங்க ., இது ரொம்ப நல்லா இருக்கு ..!!
எல்லாக்கவிதைமே நல்லா இருக்க அண்ணா ., ஒண்ணு ஒண்ணையும் தனித்தனியா சொல்லலாம் ., ஆனா தாய் கவிதை செம கலக்கல் ..!!
பிறந்த வீடு கவிதை ரொம்ப நல்லாருக்கு
அடடா ரொம்ப அருமையா இருக்கு! நல்ல கற்பனைத்திறன்!
///திரைப்பட வெளியீடு நிழலைக்காண நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன. ///
எனக்குப் பிடித்த கவிதை!
வாழ்த்துக்கும் வரவேற்பிற்கும் நன்றி!
நன்றி அருண்.
நல்ல பகிர்வு..மிகவும் ரசித்தேன்..நன்றி சங்கீதா ஜெயபிரகாஷ்,
நால்லாவே எழுதியிருக்காங்க...
// இந்த கவிதைலாம் சத்தியமா என்னுடையது
இல்லைங்க.... (நான் தான் எழுதினேன்னு
சொன்னா மட்டும் நம்பவா போறீங்க!) //
இந்த Blog-ல இருக்குற மத்த 69 பதிவும்
நீங்க எழுதினதுன்னு நாங்க நினைச்சிட்டு
இருக்கோம்னு நீங்க நினைக்கறீங்களா..??!!
ஹி., ஹி., ஹி..!!
எல்லாமே சுட்டதுன்னு எங்களுக்கு
தெரியும்லே..!!
@ Arun Prasath
// சே ஜஸ்ட் மிஸ்//
வடை எடுக்கறதுல மும்முறமா இருக்கமாதிரி தெரியுது?!
வேற என்ன வேலை? :)
@ Arun Prasath
// //அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்//
ஹா ஹா ஹா... செத்து போன தமிழ்ல படிக்கறது கூட சுகம் தன போல...//
நீங்க காயத்திரிய தாக்கலையே # டவுட்டு
ஐயோ அதெல்லாம் இல்ல.... நான் சும்மா தோன்றத சொன்னேன்.... நல்ல டவுட் வருது உங்களுக்கு
எல்லாக் கவிதைகளும் சூப்பர்... முதலும் கடைசியும் அதிகம் கவர்ந்தது...
//
அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்! //
செம நக்கல்...
//அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்//
Great
நல்லா எழுதியிருக்காங்க..
ரொம்ப அழகா இருக்கு கவிதைகள் எல்லாம்..நன்றி ப்ரோ..
அதென்ன
//
ஹா ஹா ஹா... செத்து போன தமிழ்ல படிக்கறது கூட சுகம் தன போல...//
நீங்க காயத்திரிய தாக்கலையே # டவுட்டு
//
என்ன ஏன் வந்புக்கு இழுக்குறீங்க??
தூங்கிகிட்டு இருக்குற சிங்கத்த சொரியாதீங்க...
புன்னாயிடும் !!
யாரான எனக்கு ஆதரவா குரல் குடுங்கப்பா
கவிதைகள் அருமை
தங்களின் நட்பு கரமும் அருமை நண்பரே
அருண் நான் அப்படியே ..ஷாக் ஆயிட்டேன் ......நீயும் கவிதை எழுதிற போறேன்னு தான் ........நல்ல வேளை பதுவுலகம் தப்பியது .......
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு மக்கா.........போய் பார்கிறேன்
கவிதை நல்லாயிருக்கும் போதே யோசிச்சேன், எதோ ப்ளாக் மாறி வந்துட்டோமோன்னு, பின் குறிப்பு பார்த்ததும் confirm ஆகிட்டு.. முதலும் கடைசியும் superb ..
ஹலோ... என்ன விளையாட்டு இது??
சரி விடுங்க.. கவிதை எழுதினவங்களுக்கே போய் கமெண்ட் போடுறேன்..!! :-))))
///வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ////
இது உண்மையில் செம செம... அருண்..!!! ROFL :-))
அதான பார்த்தேன் ????????????
//தாய் வீடு
பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்! //
எல்லாக்கவிதையுமே நல்லாயிருக்கு.
தங்கள்வருகைக்கும் பின்னூட்டம் மற்றும் தொடர்வதற்கும் நன்றி
:)
valthukkal anna..
ethu pola nalla mansu yarukku varum....
Post a Comment