Cricket Countdown....

Monday, November 1, 2010

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்

இன்றுடன் எந்திரன் திரைக்கு வந்து சரியாக ஒரு மாதம் முடிந்துவிட்டது. ரஜினியின் மாஸ்சாலும் சன் டீவியின் அதித விளம்பரத்தாலும் இந்த படத்தை 90% பேர் பார்த்துவிட்டனர். சில ஆகா ஓகோ விமர்சனங்களும், பல எதிர் மறை விமர்சனங்கள் வந்து ஓய்ந்தது.
ஆனால், இந்த படம் ஒரு டிபிக்கல் ரஜினி ரசிகனுக்கு திருப்தி அளித்ததா? மற்ற ரஜினி படங்களின் வரிசையில் இந்த படம் எந்த இடத்தில் உள்ளது என தெரிந்துகொள்ள விருப்பப்பட்டேன்.

இதோ என் பார்வையில் ரஜினி யின் டாப் 10 திரைப்படங்கள்.


10. அருணாசலம்
சாதாரணமாக தொடங்கும் இந்த படம், 30 நாளில் 30 கோடி செலவழிக்க வேண்டும் என்றவுடன் பரபரப்பாக மாறும். என்னை போன்ற ரசிகர்களின் கனவான அரசியல்வாதி ரஜினியைகாட்டிய ஒரே படம்

9. எந்திரன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் சுட்டி டிவி பார்ப்பதை போல இருந்தது என விமர்சிக்கப்பட்ட படம். சராசரி ரஜினி ரசிகனை திருப்திபடுத்த தவறிய படம். எவ்வளவு பிரம்மாண்டம் இருந்தாலும் ரஜினியை பார்க்க முடியாத ரஜினி படம்

8. சந்திரமுகி
பாபா பட படுதோல்விக்கு பிறகு வந்து ரஜினி இமேஜை தூக்கி நிறுத்தியபடம். ரசிகனின் எதிர்பார்ப்பை எல்லா வகையிலும் நிறைவேற்றி ஒரு வருடம் ஓடிய சாதனை திரைப்படம்

7. அண்ணாமலை
“மல டா, அண்ணாமலைடா”  ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் டிரெண்டை தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய படம். காமெடி, ஸ்டைல், பஞ்ச் டயலாக் என கலக்கி இருப்பார்

6. முள்ளும் மலரும்
தன்னாலும் குணசித்திர பாத்திரங்களில் நடிக்க முடியும் என ரஜினி நிரூபித்தபடம். மகேந்திரன், இளையராஜா, ரஜினி கூட்டணியில் கலக்கியபடம். ரஜினி படங்களில் ஒரு மகுடம் இது.



5. சிவாஜி
ஷங்கர் டைரக்‌ஷனில் ரஜினி - ரசிகர்களை அதிரவைத்த படம். வயதான ரஜினியை இளைஞராக காட்டிய படம். பஞ்ச் டயலாக், சண்டைகாட்சிகள், வெள்ளைதோல் ரஜினி என படம் முழுக்க பரபர விறுவிறுப்பு படம்.



4. தில்லுமுல்லு
ரஜினியின் முழுநீள நகைச்சுவை திரைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். தேங்காய் சீனிவாசனும் ரஜினியும் போட்டி போட்டு காமெடி செய்து இருப்பர்



3. படையப்பா
நடிகர்திலகத்துடன் ரஜினி நடித்த கடைசிபடம். ரம்யாகிருஷ்ணனா, ரஜினியா என கடைசிவரை போட்டியாகவே செல்லும் படம். “மின்சாரகண்ணா, இந்த வயசுலயும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகலை” என்ற நீலாம்பரி டயலாக்கை நிருபித்தபடி ரஜினியின் நடிப்பு இருக்கும்



2. தளபதி
நட்புக்கு இலக்கணம் கர்ணனை நினைவு படுத்தும் கதாபாத்திரம். இளையராஜாவின் இசை கூடுதல் பலம். பாசம், நட்பு, காதல், கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்தி ஜெயித்து இருப்பார் ரஜினி. ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் பெவரைட்டில் கண்டிப்பாய் இந்த படம் இருக்கும்



1. பாட்ஷா
பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் நெ 1 ரஜினி படம். ஸ்டைல், நடிப்பு, பஞ்ச் டயலாக், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.


ஆக, என் பார்வையில் “எந்திரன்” 9வது இடத்தைதான் பெற்று உள்ளது. இதை ஒரு தொடர்பதிவாக மாற்றி மற்றவர் நிலையையும் பார்க்க விருப்பம்.

எனவே, நான் இந்த பதிவை தொடர அழைப்பது.,

1. சிரிப்பு போலிஸ் ரமெஷ்
2. அமீரக அரிமா தேவா
3. ரஜினி ரசிகர் நண்பர்  எல் கே

ரஜினி நடித்த 154 படங்களின் பெயர் பட்டியலும் இங்கு இருக்கிறது.




57 comments:

கருடன் said...

@அருண்

ரைட்டு சார் ஓட்டு போட்டாச்சி. கமெண்டா?? அப்பொ இதுக்கு பேரு என்ன??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாட்சா படத்தின் முதல் பைட்டை சரியாகப் போட்டிருக்கிங்க, குட் செலக்சன்! அந்த பைட்டுக்காக படத்த பலதடவ பாத்திருக்கேன். உங்க லிஸ்ட்ல உள்ள மத்த எல்லாப் படத்துககும் இது ஒண்ணே ஈக்வல்!

மங்குனி அமைச்சர் said...

4,6,8,3,1 ok

சௌந்தர் said...

என்னுடைய முதல் இடமும் பாட்ஷா தான்...நானும் தில்லு முல்லு இப்போ போட்டாலும் பார்ப்பேன்

Chitra said...

சூப்பர்!!! சூப்பர்!!! சூப்பர்!!!

Arun Prasath said...

பாட்சா படத்தின் CD வாங்கி அது ஓட்ட ஆகற வரைக்கும் பாத்திருக்கேன். அந்த படத்துக்கு மொதல் இடம்... great minds think alike. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பேர் வேற. ஒரே மாறி தான யோசிப்போம்....

Unknown said...

present sir..

Unknown said...

பாட்சா படத்தின் முதல் பைட்டை சரியாகப் போட்டிருக்கிங்க--repeatu..

என்னது நானு யாரா? said...

சரியான வரிசைத்தான். ஆனால் முள்ளும் மலரும் படத்திற்கு இன்னமும் கூடுதல் ரேங்க் கொடுக்கலாம் என்பது என் எண்ணம்.

Arun Prasath said...

பாட்சா படத்தின் CD வாங்கி அது ஓட்ட ஆகற வரைக்கும் பாத்திருக்கேன். அந்த படத்துக்கு மொதல் இடம்... great minds think alike. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பேர் வேற.ஒரே மாறி தான யோசிப்போம்....

Unknown said...

எனக்குப் பிடித்தவை..

ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, நினைத்தாலே இனிக்கும், தளபதி, தில்லு முல்லு...

Gayathri said...

super top 10 vazhtukkal

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படையப்பா மறக்க முடியாத படம். எங்க HOD கூட படத்துக்கு போயிட்டு மறுநாள் அவர் கிட்டே திட்டு வாங்கின படம்

Ramesh said...

இதுல சிவாஜி தவிர மத்ததெல்லாம் பக்கா..


ரமேஷ் கல்யாண ரிசப்சன் வந்து பாருங்க..
http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_31.html

Anonymous said...

இதுல எந்திரன் பத்தின தகவல்ல எனக்கு உடன்பாடு இல்ல..மூன்று விதமான ரஜினி இருந்தாலும் சிட்டி ரஜினி எனக்கு பிடிச்ச கேரக்டர்...ரஜினியின் புதிய பரிணாமம் என்பேன்..

Anonymous said...

பாட்ஷா மற்றும் எந்திரனை இன்னும் 50 வருடங்களுக்கு நிலைக்கும் படங்கள் என ரஜினியே சொல்லி இருக்கிறார்

Anonymous said...

அடுத்த தொடர் பதிவா? ரைட் ரைட்.. :)

dheva said...

அமீரக அரிமாவா......???!!!!!

அடே தம்பி.. இந்த பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லப்ப்பு....! உன்னுடைய தொகுப்பு கலக்கல்..உன் ரேஞ்சுக்கு இல்லேன்னாலும் ஓரளவுக்கு ட்ரை பண்றேன்.... !

சசிகுமார் said...

பாட்சா தான் எப்பவுமே சூப்பர்

இம்சைஅரசன் பாபு.. said...

எனக்கு அண்ணாமலை ,பாட்ஷா ,தளபதி ,தில்லு முல்லு,வேலைக்காரன் ,தம்பிக்கு எந்த ஊரு,சிவாஜி ,படையப்பா ,முள்ளும் மலரும் ,தர்மதுரை ,ராஜாதி ராஜா

அருண் இந்த லிஸ்ட் ல என்திரன் இல்லை மக்கா..............(என்ன செய்ய புடிக்கல படம் ஸ்டைல் இல்லை பஞ்ச் டயலாக் இல்லை .......மெயின் அ போட்டி இல்லை ...........படம் வெற்றி என்று கூறுபவர்கள் .எதை வைத்து வெற்றி என்கிறார்கள் எனக்கு தெரியவில்லை .....ஒருவன் ஓட்ட பந்தயத்தில் ஓடுகிறான் என்றால் அவன் கூட ஒருவனாவது ஓட வேண்டும் அப்ப தன முதல் யாரு ரெண்டாவது யாரு என்று கூற முடியும் ...
இங்கு எத்தனையோ படம் ரெடியாகி கூட ......அதை வெளி இட முடியாமல் தடுத்து வைத்திருகிறார்கள் ....ரஜினி ரசிகன் என்ற முறையில் இதை வெளியே கூற முடியாமல் எத்தனையோ ரசிகர்கள் silent ஆக இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து )

எஸ்.கே said...

என்னதான் ஸ்டைலாக பல ரஜினி படங்கள் இருந்தாலும், எனக்கு பிடித்த ரசினி படம் ஆறிலிருந்து அறுபது வரைதான்!

ஆனா தில்லுமுல்லு எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.

அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி said...

மிக சரியான Top 10..,
நீங்க குடுத்த URL Work ஆகலையே..

ரஜினி அரசியலுக்கு வருவாரா..?
அவர் ஜாதகம் என்ன சொல்கிறது..!
தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

வெங்கட் said...

இந்த லிஸ்ட்ல " சிவாஜி " & " அருணாசலம் "
ரெண்டும் என் சாய்ஸ் இல்ல..,

" நல்லவனுக்கு நல்லவன் "
அப்புறம்..........

இன்னும் நிறைய நல்ல படம் இருக்கே..
ஆமா என்ன லிங்க் Work
ஆகலை.. ஆனா பார்த்து
ஒரு படம் சொல்லலாம்..!!

அன்பரசன் said...

8, 7, 4, 3, 2, 1..

எனக்கும் மிகப்பிடித்தவை...

Madhavan Srinivasagopalan said...

'குரு-சிஷ்யன்', 'வேலைக்காரன்' -- நல்ல காமேடியாச்சே.
'நல்லவனுக்கு நல்லவன்', 'தர்மதுரை' - கருத்துள்ள படங்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

"தம்பிக்கு எந்த ஊரு" படத்த விட்டுட்டியே தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாட்சா படத்த மட்டும் மறக்க முடியாது.. மொத மோதா ஸ்கூல் கட் அடிச்சு பாத்த படம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் ஒரு முக்கியமான படத்த மிஸ் பண்றீங்க, அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்?

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
// ரைட்டு சார் ஓட்டு போட்டாச்சி. கமெண்டா?? அப்பொ இதுக்கு பேரு என்ன??//
நீ ஆணியே புடுங்க வேணாம்

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பாட்சா படத்தின் முதல் பைட்டை சரியாகப் போட்டிருக்கிங்க, குட் செலக்சன்! அந்த பைட்டுக்காக படத்த பலதடவ பாத்திருக்கேன். உங்க லிஸ்ட்ல உள்ள மத்த எல்லாப் படத்துககும் இது ஒண்ணே ஈக்வல்!//
செம படமாச்சே

@ மங்குனி அமைசர்
// 4,6,8,3,1 ok//
ரைட்டு

@ சௌந்தர்
// என்னுடைய முதல் இடமும் பாட்ஷா தான்...நானும் தில்லு முல்லு இப்போ போட்டாலும் பார்ப்பேன்//
எல்லா ரஜினி ரசிகர்களின் முதல் இடமும் அந்த படத்துக்குதான

@ Chitra
// சூப்பர்!!! சூப்பர்!!! சூப்பர்!!!//
ஓகே! ஓகே!! ஓகே!!!

@ Arun Prasath
// பாட்சா படத்தின் CD வாங்கி அது ஓட்ட ஆகற வரைக்கும் பாத்திருக்கேன். அந்த படத்துக்கு மொதல் இடம்... great minds think alike. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பேர் வேற. ஒரே மாறி தான யோசிப்போம்....//
எல்லா ரஜினி ரசிகரும் great minds தான்

செல்வா said...

நான் ரஜினி ரசிகர் இல்லாத போதும் எனக்கு பிடித்த ரஜினி படங்கள் :
பாட்ஷா ,
படையப்பா ,
இந்த இரண்டு படமும் எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காது ..!
அப்புறம் அண்ணாமலை , அருணாசலம் இதெல்லாம் சில தடவ பார்க்கலாம் .

செல்வா said...

//1. சிரிப்பு போலிஸ் ரமெஷ்
2. அமீரக அரிமா தேவா
3. ரஜினி ரசிகர் நண்பர் எல் கே//

அப்போ நானும் கமல் படங்களப் பத்தி எழுதி தொடர் பதிவுக்குக் கூப்பிடுவேன் ..
ஆல் கமல் ரசிகர்ஸ் வாங்க ...!!

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் ஒரு முக்கியமான படத்த மிஸ் பண்றீங்க, அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்?

/

தசாவதாரம் ..!!

அருண் பிரசாத் said...

@ கே.ஆர்.பி.செந்தில் said...
// எனக்குப் பிடித்தவை..
ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, நினைத்தாலே இனிக்கும், தளபதி, தில்லு முல்லு...//
ஆறிலிருந்து அறுபதுவரை, நினைத்தாலே இனிக்கும் - இரண்டுமே சூப்பர் படம்தான் அண்னே

@ siva
// பாட்சா படத்தின் முதல் பைட்டை சரியாகப் போட்டிருக்கிங்க--repeatu..//
:)

@ என்னது நானு யாரா?
// சரியான வரிசைத்தான். ஆனால் முள்ளும் மலரும் படத்திற்கு இன்னமும் கூடுதல் ரேங்க் கொடுக்கலாம் என்பது என் எண்ணம்.//
சரிதான் வசந்த், ஆனா இது என் டேஸ்ட்... உங்கள் தொடர்பதிவில் நீங்கள் கூடுதல் ரேங்க் கொடுக்கலாம்

@ Gayathri
// super top 10 vazhtukkal//
nandri

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// படையப்பா மறக்க முடியாத படம். எங்க HOD கூட படத்துக்கு போயிட்டு மறுநாள் அவர் கிட்டே திட்டு வாங்கின படம்//
அதான் அடிவாங்கினது உலகத்துக்கே தெரியுமே

@ பிரியமுடன் ரமேஷ்
// இதுல சிவாஜி தவிர மத்ததெல்லாம் பக்கா..//
சிவாஜி ரேங்க் ஏத்தனுமா இரக்கனுமா?

@ ஆர்.கே.சதீஷ்குமார்
// இதுல எந்திரன் பத்தின தகவல்ல எனக்கு உடன்பாடு இல்ல..மூன்று விதமான ரஜினி இருந்தாலும் சிட்டி ரஜினி எனக்கு பிடிச்ச கேரக்டர்...ரஜினியின் புதிய பரிணாமம் என்பேன்..//
என்னது நானு யாராவிற்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்... இது என் பார்வையில் பட்டியலிட்டது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா யாரும் அந்த முக்கியமான படத்து பேர சொல்ல மாட்டேங்க்கிறீங்க? என்ன கட ஓனரு, நானே சொல்லிடவா?

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
// அடுத்த தொடர் பதிவா? ரைட் ரைட்.. :)//
கிளம்பியாச்சுல

@ இம்சைஅரசன் பாபு..
உங்க லிஸ்டை தொடர்பதிவு வரும் போது போடுங்க மக்கா

@ எஸ்.கே
// என்னதான் ஸ்டைலாக பல ரஜினி படங்கள் இருந்தாலும், எனக்கு பிடித்த ரசினி படம் ஆறிலிருந்து அறுபது வரைதான்!//
முள்ளும் பலரும் போல அதுவும் ஒரு கிளாசிக் மூவி

@ Dhayanithi Sriram ( Astro )
// மிக சரியான Top 10..,
நீங்க குடுத்த URL Work ஆகலையே..//
சரி பண்ணியாச்சு பாஸ்

@ dheva
// அமீரக அரிமாவா......???!!!!!

அடே தம்பி.. இந்த பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லப்ப்பு....! உன்னுடைய தொகுப்பு கலக்கல்..உன் ரேஞ்சுக்கு இல்லேன்னாலும் ஓரளவுக்கு ட்ரை பண்றேன்.... !//
அண்ணே ஆடுக்கு மாலை போடுறது வெட்டதான்... அது மாதிரிதான் இதுவும்

@ சசிகுமார்
// பாட்சா தான் எப்பவுமே சூப்பர்//
உண்மை சசி

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
// இந்த லிஸ்ட்ல " சிவாஜி " & " அருணாசலம் "
ரெண்டும் என் சாய்ஸ் இல்ல..,

" நல்லவனுக்கு நல்லவன் "
அப்புறம்..........//
எல்லாம் சரி. இந்த தொடர்பதிவையாவது எழுத்றீங்களானு பார்கிறேன்

@ அன்பரசன் said...
//
8, 7, 4, 3, 2, 1..

எனக்கும் மிகப்பிடித்தவை...//
நன்றி அன்பு

@ Madhavan
// 'குரு-சிஷ்யன்', 'வேலைக்காரன்' -- நல்ல காமேடியாச்சே.
'நல்லவனுக்கு நல்லவன்', 'தர்மதுரை' - கருத்துள்ள படங்கள்//
உண்மை ஆனா அதுலாம் இந்த 10 படத்துக்கு அப்புறம்தான் என் வரிசைல வருது

@ வெறும்பய
// "தம்பிக்கு எந்த ஊரு" படத்த விட்டுட்டியே தலைவா...//
// பாட்சா படத்த மட்டும் மறக்க முடியாது.. மொத மோதா ஸ்கூல் கட் அடிச்சு பாத்த படம்...//

அதுவும் ந்ல்ல படம் தான்...
பாட்சா பாத்துட்டு தான வீட்டுல அடிவாங்கினது?

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// எல்லாரும் ஒரு முக்கியமான படத்த மிஸ் பண்றீங்க, அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்?//
மகனே! குசேலன்னு காமெடி பண்ணே கொன்னேபூடுவேன்

அருண் பிரசாத் said...

@ செல்வா
பாட்ஷா எல்லா ரசிகர்களாலயும் விரும்பப்பட்ட படம்

கமல் தொடர்பதிவு ஆரம்பி நான் எழுதரேன்.. குணா முதல் இடம்னு

@ பன்னிகுட்டி
155 படத்துல எதையா சொல்லுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///@ பன்னிக்குட்டி ராம்சாமி
// எல்லாரும் ஒரு முக்கியமான படத்த மிஸ் பண்றீங்க, அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்?//
மகனே! குசேலன்னு காமெடி பண்ணே கொன்னேபூடுவேன்///

இல்ல அது உண்மைலேயே அல்டிமேட் படம்!

செல்வா said...

//@ பன்னிகுட்டி
155 படத்துல எதையா சொல்லுற

//

தசாவதாரம் , தெனாலி , வசூல்ராஜா , பம்மல் கே சம்பந்தம் , பஞ்சதந்திரம் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் பேரு......
.
.
.
.
.
.

.
.
.
.
.
.

மூன்று முகம்........

அலேக்ஸ் பாண்டியன் டிஎஸ்பிய எப்பிடியா மறந்தீங்க எல்லாரும்? தொலச்சிபுடுவேன் தொலச்சி!

அருண் பிரசாத் said...

//ப.செல்வக்குமார் said...

//@ பன்னிகுட்டி
155 படத்துல எதையா சொல்லுற

//

தசாவதாரம் , தெனாலி , வசூல்ராஜா , பம்மல் கே சம்பந்தம் , பஞ்சதந்திரம் ..!!//
அட இது வேற கலவரபூமில காமெடி பண்ணிட்டு தள்ளி நில்லு, பயந்துட போற

@ பன்னிகுட்டி
மூன்றுமுகம், நல்லவனுக்கு நல்லவன், எஜமான், நான் சிகப்பு மனிதன், வேலைகாரன், ராகவேந்திரா, தர்மத்தின் தலைவன், தர்மதுரை, ராஜாதிராஜா... இப்படி பட்டியல் பெருசா போய்டே இருக்கும்... அதுலாம் 11 ஆவது இடத்துல இருந்து ஆரம்பிக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் ஒரு முக்கியமான படத்த மிஸ் பண்றீங்க, அது என்னன்னு சொல்லுங்க பாப்போம்?

/

தசாவதாரம் ..!!///

பார்ட்டி ராங்க் ரூட்ல போவுதே, நம்ம கருந்தேள் அண்ணன் கடைக்கு அனுப்பி வைய்யி...தெளிஞ்ச்சி வரட்டும்!

செல்வா said...

//அட இது வேற கலவரபூமில காமெடி பண்ணிட்டு தள்ளி நில்லு, பயந்துட போற//

எங்க கமல் பயங்கர காமெடி பண்ணுவாரு தெரியும்களா .?

அருண் பிரசாத் said...

@ ப.செல்வக்குமார்
// எங்க கமல் பயங்கர காமெடி பண்ணுவாரு தெரியும்களா .?//
தெரியுமே அவர் காமெடி பீசுனு

செல்வா said...

//@ ப.செல்வக்குமார்
// எங்க கமல் பயங்கர காமெடி பண்ணுவாரு தெரியும்களா .?//
தெரியுமே அவர் காமெடி பீசுனு

//

காமெடி இல்லைனா வாழ்க்கையே இல்ல ..!! ஹி ஹி ஹி ..

ஜெயந்தி said...

நானும் தொடருவேன். என்ன செய்வீங்க?

சுசி said...

எனக்கு சந்திரமுகி, தளபதி ரொம்ப பிடிக்கும்.

எல் கே said...

நலல் தேர்வுகள் அருண். நாளைக்கே இந்தப் போட்டு விட்டுத்தான் அடுத்த பதிவு

சிவராம்குமார் said...

என்னோட லிஸ்ட்ல தளபதிதான் முதல்!!!

Philosophy Prabhakaran said...

நீங்கள் எழுதிய படங்களில் முள்ளும் மலரும் மற்றும் தில்லு முள்ளு ஆகிய இரண்டு படங்களை எனக்கும் மிகவும் பிடிக்கும்... ஆறிலிருந்து அறுபது வரை படத்தை லிஸ்டில் சேர்க்காதது ஆச்சர்யம்...

R.Gopi said...

தலைவா....

உங்க லிஸ்ட் சூப்பர்....

நானும் இது போல் ஒரு லிஸ்ட் போட முயற்சித்து, அதில் 25 படங்களுக்கு மேல் வந்ததால், சுருக்கி 20 ஆக்கி 3 பாகங்களாக பதிவிட்டேன்...

நேரமிருப்பின் வந்து பார்க்கவும்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)
http://jokkiri.blogspot.com/2010/02/2020.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)
http://jokkiri.blogspot.com/2010/02/2020_09.html

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html

THOPPITHOPPI said...

"எனக்குப் பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 - தொடர் பதிவு"
**********************************


6 முதல் 60 வரை ?

அருண் பிரசாத் said...

@ ஜெயந்தி
// நானும் தொடருவேன். என்ன செய்வீங்க?//
தாராளமா தொடருங்கள்.. வந்து பார்கிறேன்

@ சுசி
// எனக்கு சந்திரமுகி, தளபதி ரொம்ப பிடிக்கும//
அப்போ பாட்ஷா?

@ LK
// நலல் தேர்வுகள் அருண். நாளைக்கே இந்தப் போட்டு விட்டுத்தான் அடுத்த பதிவு//
நன்றி எல் கே

@ சிவா
// என்னோட லிஸ்ட்ல தளபதிதான் முதல்!!!//
ஓ... அதுவும் சூப்பர் படம்தான்

அருண் பிரசாத் said...

@ philosophy prabhakaran
// நீங்கள் எழுதிய படங்களில் முள்ளும் மலரும் மற்றும் தில்லு முள்ளு ஆகிய இரண்டு படங்களை எனக்கும் மிகவும் பிடிக்கும்... ஆறிலிருந்து அறுபது வரை படத்தை லிஸ்டில் சேர்க்காதது ஆச்சர்யம்...//
அந்த படம் 11 ஆவது அல்லது 12 வது இடத்தை பிடிக்கிறது என் விருப்பத்தில்

@ R.Gopi
// நானும் இது போல் ஒரு லிஸ்ட் போட முயற்சித்து, அதில் 25 படங்களுக்கு மேல் வந்ததால், சுருக்கி 20 ஆக்கி 3 பாகங்களாக பதிவிட்டேன்...//
கண்டிப்பாய் வந்து பார்கிறேன் பாஸ்

Riyas said...

நல்ல தொகுப்பு அருன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க.. :-))

Happy Diwali to you..!!

Anonymous said...

ரஜினியின் அண்ணாமலை எனக்கு ரொம்ப பிடிச்ச படம்..அருமையான விமர்சனம்