Cricket Countdown....

Wednesday, February 9, 2011

என்னத்த தலைப்பு வெக்கறது இதுக்கு?

முஸ்கி: எப்போவோ, எங்கயோ படிச்சது.....

இரண்டு புலவர்கள் பேசிக்கறாங்க.....

புலவர் - 1: 
முக்காலை கையில் எடுத்து
மூவிரண்டு போகையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்
அழுந்த கடித்தது....

புலவர் - 2:

பத்து ரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி
தேய்!...

டிஸ்கி: யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க... விடையை நான் அப்புறம் சொல்லுறேன்

68 comments:

எஸ்.கே said...

அட! இது நான் ஸ்கூல்ல படிச்சதுங்க!

எஸ்.கே said...

//முக்காலை கையில் எடுத்து
மூவிரண்டு போகையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்
அழுந்த கடித்தது....
//

முக்காலை எடுத்து -ஊன்று கோல்
மூவிரண்டு போகையிலே - ஆற்றுக்குப் போகும்போது (அதாவது காலைக்கடனுக்காக)
ஐந்து தலை நாகம் : நெருஞ்சி முள்

குத்திருச்சு!

எஸ்.கே said...

//பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலை வாங்கித் தேய்///


பத்துரதன் - தசரதன்
புத்திரனின் - இராமனின்
மித்திரனின் - நண்பன் சுக்ரீவன்
சத்துருவின் - எதிரியின் (வாலி)
பத்தினியின் - தாரை
காலை வாங்கி - தாரையிலிருந்து கால் எடுத்தா தரை
தேய் - தேய்!!!!

அதாவது முள் குத்தினா தரையில காலை தேய்னு சொல்றாங்கோ!

எஸ்.கே said...

நானும் விடுகதை சொல்லப்போறேன்!

1. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன?

2. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

எஸ்.கே said...

3. கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்?

4. க‌ல்‌லிலு‌ம் முள்‌ளிலு‌ம் பாதுகா‌ப்பா‌ன், த‌ண்‌‌ணீ‌ரி‌ல் தவ‌றி‌விடுவா‌ன் அது என்ன?

5. பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன?

6. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?

7. பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்?

எஸ்.கே said...

8. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

9. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

10. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

எஸ்.கே said...

யாராவது பதில் கண்டுபுடிச்சா சொல்லுங்க!

karthikkumar said...

டிஸ்கி: யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க... விடையை நான் அப்புறம் சொல்லுறே////

என்னது விடையா? அப்போ இது கேள்வியா அண்ணே... ஹி ஹி நான் எதோ கவிதைன்னு நெனச்சேன் ....

சசிகுமார் said...

//2. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?//

பாட்டி சொல்லி கேட்டு இருக்கேன்.
விடை - தேன்கூடு

சசிகுமார் said...

//க‌ல்‌லிலு‌ம் முள்‌ளிலு‌ம் பாதுகா‌ப்பா‌ன், த‌ண்‌‌ணீ‌ரி‌ல் தவ‌றி‌விடுவா‌ன் அது என்ன?//

விடை- செருப்பு

சசிகுமார் said...

//7. பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்?//

விடை - பூசணிக்காயா?

எஸ்.கே said...

@ சசிக்குமார்
பூசணிக்காய் மட்டும் தப்பு மீதி ரைட்டு!

Anonymous said...

யோவ் ..,போன் பண்ணா எடுக்க மாட்டியா ???

ஜெயந்த் கிருஷ்ணா said...

//பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலை வாங்கித் தேய்///


பத்துரதன் - தசரதன்
புத்திரனின் - இராமனின்
மித்திரனின் - நண்பன் சுக்ரீவன்
சத்துருவின் - எதிரியின் (வாலி)
பத்தினியின் - தாரை
காலை வாங்கி - தாரையிலிருந்து கால் எடுத்தா தரை
தேய் - தேய்!!!!

அதாவது முள் குத்தினா தரையில காலை தேய்னு சொல்றாங்கோ!

சசிகுமார் said...

//எஸ்.கே said...//

கடைசியாக அனைத்திற்கும் விடை கூறுங்கள் அண்ணே பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

Chitra said...

ஆஹா... S.K. சார் விரிவான விடை சொல்லி அசத்திப்புட்டாரே....

சி.பி.செந்தில்குமார் said...

அருண்... என்னை மன்னிச்சிடுங்க.. இனிமே வித்தியாசமான பதிவு போடுங்கன்னு சொல்ல மாட்டேன்.. ஹி ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

முக்காலை கையில் எடுத்து= ஊன்றுகோலை கையிலெடுத்து
மூவிரண்டு போகையிலே= ஆற்றை கடக்கையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்= நெருஞ்சிமுள்
அழுந்த கடித்தது....= குத்தி விட்டது

பத்து ரதன் புத்திரனின்=தசரத்தன் மகனாகிய ராமனின்
மித்துருவின் சத்துருவின்=நண்பனான சுக்ரீவனின் எதிரியாகிய வாலியின்
பத்தினியின் கால் வாங்கி=மனைவி பெயர் தாரை, அதில் காலை எடுத்துவிட்டால் தரையில்
தேய்!...
எப்பூடி......

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏற்கனவே ஒரு பிளாக்கில் படித்து விடையளித்தும் இருக்கிறேன் http://thamizhagazhvan.blogspot.com/2010/12/blog-post_04.html

Arun Prasath said...

இந்தியா வந்து பதிவு போட மாட்டாருன்னு பாத்தா அடடா

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

இதத்தான் நாங்க அன்னிக்கே சொல்லிட்டோமே இங்க

கேள்விய நாகேட்டேன்.. பதில பெ.சோ.வி சொன்னாரு..

பொன் மாலை பொழுது said...

// அருண்....என்னை மன்னிச்சுடுங்க ...இனிமே வித்யாசமான பதிவு போடுங்கன்னு சொல்லமாட்டேன்..ஹி..ஹி. //

சி.பி. செந்தில் குமார் சொன்னது.

உண்மையில் இந்த பதிவு படிக்க ஜாலியாகவே இருந்தது. இருந்தாலும் சி.பி செந்திலின் கமெண்ட்ஸ் என்னை வெடித்து சிரிக்க வைத்தது.
எல்லா பின்னூட்டங்களும் கூட நல்லாத்தான் இருக்கு.

ஒகே..... ஒகே ...நீ அழுவாத" ப்ரட்டி பாய்" :))))

மாணவன் said...

யாராவது பதில் கண்டுபுடிச்சா சொல்லுங்க... :))

செல்வா said...

அண்ணன் பெரிய பெரிய கவிதை எல்லாம் எழுதுறாரு ?
எனக்கு பயமா இருக்கு .. நான் போறேன் ..

Anonymous said...

ஏஸ்.கே கலக்கி இருக்கார்....எல்லாமே படிச்ச மாதிரி இருக்கு ஆனா எதுவும் நினைவுக்கு வர்ல..ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு அர்த்தம் நீ பதிவே எழுத வேணாம்

சாதாரணமானவள் said...

இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்... இது என் தலைப்பு.... நீங்க வேணா விடுகதைனு வெச்சிருக்கலாமே.. நம்ம தமிழ் டைரக்டர்கள் பண்ற மாதிரி alteration மட்டும் பண்ணீட்டிங்களே நண்பா... சரி சரி... நம்ம ஊருக்கு வர்றதால வந்தாரை வாழ வைக்கறேன்... :-)

Unknown said...

mee present and escape..

வெங்கட் said...

அட.. இது சின்ன பசங்க விளையாடுற
எடமா..? பாத்துடா கண்ணுங்களா..
அடி படாம ஜாக்ரதையா விளையாடுங்க..!!

வெங்கட் said...

@ சி.பி.,

// அருண்... என்னை மன்னிச்சிடுங்க..
இனிமே வித்தியாசமான பதிவு
போடுங்கன்னு சொல்ல மாட்டேன்.. ஹி ஹி //

இவ்ளோ அப்பாவியா நீங்க..
உங்க பேச்சை எல்லாம் யார் கேப்பா..?!!

இந்த உதார் தானே வேணாங்கிறது..?
சீக்கிரம் போயி எதாவது மொக்கை படம்
ரிலீஸ் ஆயிருக்கான்னு பாருங்க..
போங்க.. போங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் வந்து பதில் சொல்றதுக்குள்ள எஸ்கேவே சொல்லிட்டாரு, அதுனால வந்ததுக்கு நான் ஒரு விடுகதை போட்டுட்டு போறேனே......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ.....?

பதில் சொல்பவர்களுக்கு ஒரு பரிசு இருக்கு, அது என்னான்னு உங்க எல்லாத்துகுமே தெரியும்.....

வைகை said...

8. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

9. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

10. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்///////////////


8, நிலா

9. மேகம்

10, வெங்காயம்

வைகை said...

பச்சைத் தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை. அத‌ற்கு‌ள் கடினமான எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம் வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன///

விளாம் பழம்

வைகை said...

கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்?/////

கோழி

வைகை said...

பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?/////


காப்பி கொட்டை

எஸ்.கே said...

@ வைகை

8, 9 தப்பு
10 சரி
5 தப்பு
3 சரி
6 கிட்டதட்ட சரி, கொஞ்சம் மாற்றி பாருங்க

அனு said...

ம்ம்.. பஸ்ல ஆன்ஸர் சொல்லியாச்சு.. :)

அனு said...

@SK
1. நூல் (தைக்கும் போது)
2. தேன்கூடு
3. சேவல்
4. செருப்பு
5. தேங்காய்
6. டீ (??)
7.
8. தபால்
9.
10. வெங்காயம்

எஸ்.கே said...

1,2,3,4,5,6,8,10 நீங்க சொன்ன எல்லாமே சரி! சூப்பர்!:-)

7, 9 கண்டுபுடிங்க!

அனு said...

9. வானம்??

எஸ்.கே said...

@ அனு

9. விடை அது இல்லை!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விடை எல்லோரும் சொல்லிட்டாங்க...
வேற கேள்வி கேளுங்க...

சுசி said...

குட்டிம்மா.. அப்பா தலைல ஒரு கொட்டு வைங்க :)

'பரிவை' சே.குமார் said...

இது எங்க அம்மா கூறும் விடுகதைகளில் ஒன்று. நான் கேள்விப்பட்டது.


இதே கதையை மோகன்ஜி அண்ணா தனது பதிவில் போட்டுள்ளார். இந்த லிங்கில் போய் பாருங்கள் (விளக்கத்துடன்)

http://vanavilmanithan.blogspot.com/2011/02/blog-post_09.html

ராஜி said...

இதே வெலையா போச்சு உங்களுக்கு.., புதிர் பொட்டி பொடுறதைதான் சொன்னேன்.., யொசிக்குறேன்.

ராஜி said...

எஸ்.கே said...

நானும் விடுகதை சொல்லப்போறேன்!

1. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்டே போகும் அது என்ன?

2. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?


//////////////////////
நாள்காட்டி (காலண்டர்)
2.தேன்கூடு
சரியா நண்பரே

ராஜி said...

3.சேவல்
4.செருப்பு
5. தேங்காய்
6.
7.மெத்தை இல்லனா தலையனை
8.தபால்
9. காற்று
10.வெங்காயம்

சரியா எஸ்.கேசார்

எஸ்.கே said...

@ ராஜி:

1. நாள்காட்டி (காலண்டர்) இல்லை ஊசி நூல்
2.தேன்கூடு -சரி
3.சேவல் -சரி
4.செருப்பு -சரி
5. தேங்காய் -சரி
6.
7.மெத்தை இல்லனா தலையனை -சரி தலையணைதான்:-)
8.தபால் -சரி
9. காற்று இது மட்டும் தவறு
10.வெங்காயம் -சரி

6. டீ என அனு சொல்லி விட்டார் 9 மட்டும் யாருமே சொல்லவில்லை!:-)

சும்மா பேசலாம் said...

எதாவது மொக்கை போட்டு இருப்பீங்க படிச்சுட்டு போகலாம்ன்னு வந்தா கேள்வி எல்லாம் கேக்குறீங்க...........ஆனா இதை எங்கயோ ஸ்கூல்ல படிச்ச ஞாபகம்...... அருமை.

எஸ்.கே சொன்னது சரின்னு நினைக்குறேன்.

அனு said...

9. நிலா??

எஸ்.கே said...

@ அனு
நிலா இல்லை

எஸ்.கே said...

9. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

அலைகிறான் - இதுதான் முக்கியம்:-)

அப்புறம் உலகமெங்கும்னா தொடர்ச்சியா இல்ல. ஆனா உலகம் முழுதும் அங்கங்க இருக்குன்னு அர்த்தம்:-)

அனு said...

அட போங்கப்பா.. நீங்களே சொல்லிடுங்க எஸ் கே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எஸ்கே, அது நதிதானே?

எஸ்.கே said...

9. கடல்-அலை

அனு said...

I got it.. Waves..
(nandri pannikutti)

எஸ்.கே said...

ராம் கிட்டதட்ட சரியா சொல்லிட்டார்:-)
பதில் கடல் அலை!

அனு said...

oh.. already sollitteengala.. hehe.. :)

எஸ்.கே said...

இது மாதிரி நிறைய விடுகதை இருக்குங்க! சமயம் வரும்போது சொல்றேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா.. ஒருவழியா முடிஞ்சுச்சு.....

அனு said...

எங்க பாட்டி சொன்ன விடுகதை ஒண்ணு இருக்கு.. ஆனா யாராலயும் கண்டுபிடிக்க முடியுமான்னு தெரியல.. எனக்கும் ஆன்ஸர் மறந்து போச்சு.. :(

எஸ்.கே said...

சொல்லுங்க அனு முயற்சித்து பார்க்கலாம்!

அனு said...

தோட்டத்தில விளையாடிட்டு இருக்க ஒரு பொண்ண பாத்து ஒருத்தர் சொல்றாரு
"எனக்கு மருமகளே.. என் பெண்டாட்டிக்கு மகளே.. உங்க அப்பா வந்தா சொல்லு.. அவன் புருஷன் வந்துட்டு போனான்னு"

இது எப்படி சாத்தியம்??

அனு said...

இதுக்கு ஆன்ஸர் ஒரு கதை.. அது என்ன கதைன்னு மறந்து போச்சு :( விளக்கம் கேக்க பாட்டியும் இப்போ இல்ல :(

Unknown said...

இந்தியா வந்துட்டீங்களா?.. உங்க ஊர்ல மழையெல்லாம் எப்படி?
பதிவ பாத்தா ரொம்ப வெய்யில் மாதிரி தெரியுதே?

Unknown said...

உங்க பதிவ சாக்கா வச்சு எஸ்.கே. பின்னூட்டத்திலேயே தனியா கல்லா கட்டிட்டாரு