Cricket Countdown....

Friday, June 25, 2010

காதல் வலி




உன் பிறந்த நாளில்
நான் தந்த பூங்கொத்து 

நீ ஜெயிக்க வேண்டுமென்றே ஊருக்கு
நான் வைத்த கோலப்போட்டி

திருவிழாவில் உன் அம்மாவிற்கு தெரியாமல்
நான் வாங்கித்தந்த வளையல்கள்

நீ கவிதை போட்டியில் பரிசுபெற
நான் எழுதி தந்த கவிதைகள்

பலமுறை அழைத்தும் நீ வராததால்
நான் பார்க்காமலே போன திரைப்படங்கள்

உன்னை எடுக்க சொல்லி
கோவில் நந்திமேல் நான் வைத்த பூச்சரங்கள்

எனக்கு தருவதாய் சொல்லி
பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்கு நீ தந்த முத்தங்கள்


அடி காதலியே!
என்னைத்தான் மறந்துவிட்டாய்
இவைகளையாவது நினைவில் இருக்கிறதா!!

18 comments:

VELU.G said...

ஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கும் ஆனா முழுசா அப்படி ஒன்னும் தெரியல.

ஹ ஹ ஹ ஹ ஹா

அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

arumai இந்த பொண்ணுங்களே இப்படிதான் எஜமான்

அன்புடன் நான் said...

பெண்களை குறை சொல்லாதிங்க.
உங்களின் முழுக்கவிதையின் உயிரோட்டத்தையும்... கடைசி மூன்று வரிகள் முடக்கிவிடுகிறது.....

இது என் கருத்தாக மட்டும் கொள்க.

மற்றப்படி கவிதை மிக அருமை.

அனு said...

எல்லாம் சரிதான்.. இந்த விஷயம் எல்லாம் உங்க மனைவிக்கு தெரியுமா??

அருண் பிரசாத் said...

@ வேலு

வருகைக்கு நன்றி வேலு

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

கருத்துக்கு நன்றி ரமெஷ். உங்கள் நையாண்டிக்கும் தான்

அருண் பிரசாத் said...

@ கருணாகரசு

தங்கள் கருத்துக்கு நன்றி. இதை ஒரு கவிதையாக மட்டும் பார்க்கவும், நான் பெண்களை குறை கூறவில்லை.காதலில் வெற்றி பெற்றவர்களில் நானும் ஒருவன்.

வரிகள் காயப்படுத்தி இருந்தால் மண்ணிக்கவும்

அருண் பிரசாத் said...

@ அனு,

கவிதைனா அனுபவிக்கனும், ஆராய கூடாது. இது என் எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே.

இந்த கவிதை 'நிஜம் அல்ல, கதை'

Srinivasan M said...

Srinivasan M - oooooooorrrrrrrrrrrrre feelinguuuuuuuuuuuuuuuuuuuuuuuuu!!!!!!!!!!!!!!!!

ama,
pota kolatha paka bogi anniki kathangatium kolatha parthadhu--
vacha poova edukaralo illiyo nu pathu pathe neram ponathu-
ava varra andha nimishthukaga arai mani neram bus stand laye kathu kedakarathu--
avaluku kalyanam aydichanu avala terijavanagakitayellam kekarathu--
kadal kdandhu vandhaa kooda-ava partha andha sila nodigal innumum fresh aa irukarathu-
ava anna partha apdiye U turn potu escape avarathu--
ava appa partha orruku pudhusa vandhavan madhiri bey bey muzhukarathu---
avala partha mattum vaila vartha varama
thevar magan revathu madhiri kathu varrathu--
ellathaum maraka avalala mudiymo mudiyadthu ava kettaa ava kitta soolla lam-
illana yarkita solrathu???

வெங்கட் said...

கவிதை அருமை..
இதை படிக்கும் போது
எனக்கு இன்னொரு கவிதை
ஞாபகம் வருது... இதோ அந்த கவிதை...



இப்போது
இல்லையென்றாகிவிட்டது
எந்த உறவும்...,

சிலந்தி வலைபின்னிய
பாழடைந்த வீடாய்
சிதைந்து கிடக்கிறது
பழகித் திரிந்த
பழைய நாட்கள்...,

எந்த விஷத்தாலும்
கொல்ல முடியவில்லை
ஞாபகங்களை..

இல்லையென்றாலும்
நகர்கிறது வாழ்க்கை
இருப்பதான கனவோடு..,

ஆம் கண்ணே..!
எப்படியும் அவிக்க
முடியாததாய் இருக்கிறது
உனக்கும் எனக்குமான
பழைய முடிச்சு..

- குகை மா. புகழேந்தி


Then..,
உங்க கவிதையில் இழையோடும்
மெல்லிய சோகம்.., நீங்க Choose
பண்ணியிருக்கிற Picture-ல இருக்கிற
மாதிரி தெரியல..
ரொம்ப வன்முறையா இருக்கிற
மாதிரி எனக்கு படுது,.
முடிஞ்சா மாத்திடுங்க.. -

இது என் கருத்து. முடிவு உங்களுது..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

படம் மாற்றியாச்சிங்க,இப்ப எப்படி இருக்குனு சொல்லுங்க?

நீங்கள் கொடுத்த கவிதை மிக மிக அருமை.

வெங்கட் said...

@ அருண்.,

// படம் மாற்றியாச்சிங்க,
இப்ப எப்படி இருக்குனு சொல்லுங்க? //

நான் சொன்ன பேச்சை அப்படியே
கேட்டுடீங்களே..

நீங்க என் ஆளுன்னு
உங்க வாயாலயே எப்படி
வரவழைச்சேன் பார்த்தீங்களா..??

ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்
யுவர் ஆனர்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்
யுவர் ஆனர்..!!//
@ வெங்கட் இதுக்கு பேரு வயசானவங்களுக்ககா விட்டு கொடுக்குறது...

cheena (சீனா) said...

அன்பின் அருண் பிரசாத்

கவிதை - சிந்தனை செல்லும் திசை - அருமை - காதலி மறந்து விட்டாள் என்றாலே நிகழ்வுகள் அனைத்தும் மறக்கப்பட்டன என்று தான் பொருள்.

நல்ல கவிதை. காதலன் செய்வதெல்லாம் இயல்பான செயல்களாகக் கூறப்பட்டிருப்பது நன்று

நல்வாழ்த்துகள் அருண்பிரசாத்
நட்புடன் சீனா

அருண் பிரசாத் said...
This comment has been removed by the author.
அருண் பிரசாத் said...

@ வெங்கட்

மற்றவர்களை திருப்தி படுத்துவதும் ஒரு சுகம்தானுங்க.

@ ரமெஷ்

இப்படி வெளிப்படையாக பேசும் உங்கள் நேர்மை என்னக்கு பிடிச்சிருக்கு

@ சீனா சார்

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

முனியாண்டி பெ. said...

வலி அல்லது வடு...நிச்சயம் ஒன்றாய் மாறியிருக்கும் அங்கும்

Anonymous said...

Hey, I am checking this blog using the phone and this appears to be kind of odd. Thought you'd wish to know. This is a great write-up nevertheless, did not mess that up.

- David