Cricket Countdown....

Sunday, June 27, 2010

நன்றி

விளையாட்டாய் வலைப்பூவை ஆரம்பித்து, விளையாட்டை பற்றி எழுதி வந்த  என்னை, தன் நையாண்டி கலந்த எனர்ஜி பூஸ்டர் எழுத்துக்களால் கவர்ந்து என் எழுத்தை திசை திருப்பியவர் வெங்கட்.
என்னதான் அவருடைய பதிவுகளை நக்கல் அடித்தாலும், அதற்கு சரியான பதில் சொல்வதோடு என் எழுத்துப்பிழைகளை நாசுக்காக சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மெருகேற்றியவர்.

இன்று, Century போட்ட தன் வலைப்பூவுடன் 10 பதிவு போடவே பகிரதபிரயத்தனப்படும் என் வலைப்பூவையும் திரு.தேவா மூலம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை.

என்னுடைய எழுத்துக்களிலும் ஏதோ உள்ளதாக உணர்ந்து என்னை அறிமுகப்படுத்திய தேவாவிற்கும் என் எழுத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வலைச்சரத்திற்கும் நன்றிகள் பல...


நண்பர்கள் அனு, ரமெஷ், RK, Velu G, KRP, நியோ, தமிழ் சரியாக படிக்க தெரியவில்லையானாலும் பொறுமையாக படிக்கும் என் முதல் ரசிகையான என் மனைவி  போன்றோர் தரும் ஊக்கத்திற்கும் நன்றி.

இந்த வலைச்சர அறிமுகம் எனக்கு குருவி தலையில் வைத்த பனைப்பழம் போல தோன்றினாலும், தொடர்ந்து எழுதுவேன் உங்கள் ஆதரவுடன்.

டிஸ்கி:

இப்படி எழுதியதால் கழக கண்மணிகள் கவலைபட வேண்டாம் வெங்கடை கலாய்ப்பது நிறுத்தப்படமாட்டாது. VKS (வெங்கடை கலாய்ப்போர் சங்கம்) சங்க கொள்கையில் தீவிரமாக இருப்போம்.


12 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இப்படி எழுதியதால் கழக கண்மணிகள் கவலைபட வேண்டாம் வெங்கடை கலாய்ப்பது நிறுத்தப்படமாட்டாது. VKS (வெங்கடை கலாய்ப்போர் சங்கம்) சங்க கொள்கையில் தீவிரமாக இருப்போம்.//

இப்படிதான் அருண் நாம எப்பவுமே அலெர்ட்டா இருக்கணும். கடமைதான் நமக்கு முக்கியம். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். கலக்குங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ye naanthaan first aah????

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

கொள்கைல கரெக்கிட்டா இருக்கனும்.

நீங்கதான் பர்ஸ்டு. உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் அனுப்பி வெக்கிறேன்

வெங்கட் said...

ரொம்ப புகழ்ந்து இருக்கீங்க..!!

உங்க கட்சி தலைவி எதாவது
வயித்தெரிச்சல் Comment போட்டா
அதுக்கு அப்புறம் நான் போடலாம்னு
Wait பண்ணிட்டு இருந்தேன்..

ஆனா அவங்களை எங்கே காணோம்..??
ஒருவேளை கட்சியை கலைச்சிட்டு
சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களா..??

Anyway வாழ்த்துக்கள் அருண்..

அனு said...

ரொம்ப சந்தோஷம் அருண்...
இன்னும் நிறைய எழுதி, வலைச்சரத்தில் நீங்கள் மற்றவர்களை அறிமுக படுத்த வாழ்த்துக்கள்...

@வெங்கட்
கட்சிய கவுக்கறதுக்கு வேற ப்ளான் வச்சிருக்கேன்னு சொன்னீங்களே.. அது இது தானா?? ;)

Kayathri said...

@ Everyone

Whomever Arun has mentioned here gives nice inputs (apart from pulling each others legs). After reading Arun's post with difficulty, i always take effort to read your comments too... Some times after reading your comments, i have read his post again through your eyes, it shows a different view of the same post! It also point out what i missed to note!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..
சத்தியமா..நாந்தான் பட்டாபட்டி..நல்லவன்..ஹி..ஹி

அருண் பிரசாத் said...

நன்றி வெங்கட்

தலைவி கொடநாடுல ரெஸ்ட் எடுக்க போய் இருக்காங்க. Fresh ஆ திரும்பி வருவாங்க.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றிங்க அனு.

சொன்னேன்ல திரும்பி அம்பு மாதிரி வந்துட்டாங்க பாருங்க

அருண் பிரசாத் said...

பட்டா சார்,

வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்க அளவுக்கு எழுதலைனாலும் சுமாரா எழுதுவேன். தொடர்ந்து வாங்க

அனு said...
This comment has been removed by the author.
அனு said...

//திரும்பி அம்பு மாதிரி வந்துட்டாங்க பாருங்க//

கட்சிகாரங்களுக்கு ஒண்ணுன்னா விட்டுக்கொடுக்க முடியுமா?? அதான் ஓடோடி வந்துட்டேன் :)

ஆமா.. இந்த கொடநாடு கொடநாடுன்றாங்களே.. அங்க raincoat use பண்ண மாட்டாங்களா?