உன் குறும்புகளால்
என்னை கோபப்படுத்துகிறாய் ...
என் கோபங்களை
நீ குறும்பாக பார்க்கிறாய்...
உன் முத்தங்களில்...
என்னை மகிழ்விக்கிறாய்...
என் மகிழ்ச்சியில்
நீ முத்தம் பெறுகின்றாய் ....
உன் அழுகையால்
என்னை சோகம் கொள்ளசெய்கிறாய்...
நான் சோகமானால்
உன் சிரிப்பால் அதை கரைக்கிறாய்...
விரலின் ஸ்பரிசம்,
எச்சில் முத்தம்,
சிறு நடை,
கொஞ்சம் அடம்,
நிறைய குறும்பு,
இவைகளை தினமும் எனக்கு தரும் நீ
இவைகளை தினமும் எனக்கு தரும் நீ
தேவதை தந்த வரமா?
இல்லை வரமாய் வந்த தேவதையா?
இன்பத்தையும் சோகத்தையும் சேர்த்து தரும்
நீ என்றுமே எனக்கு ஒரு
அழகான ராட்சசி!
ஒரு சிந்தனை:
9 comments:
அழகான ராட்சசி! அருமை
அருமையான kavithai பதிவு...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html
@ VELU.G, rk guru
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
@ rk guru
தமிலிஷ் ஓட்டு பட்டை இல்லையே
nice kavithai
கவிதை சூப்பருங்க.. ரொம்ப க்யூட்டா இருக்குது..
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்-னு திருவள்ளுவர் சும்மாவா சொன்னாரு.
அப்படியே shami போட்டோவையும் போட்டிருந்தா கலக்கலா இருந்திருக்கும் :)
@அனு,ரமெஷ்
கவிதைனு ஒத்துகிட்டதுக்கு நன்றிங்க.
Shami photo போட்டிருக்கலாம், Futureல செய்யலாங்க
// தேவதை தந்த வரமா?
இல்லை வரமாய் வந்த தேவதையா?
இன்பத்தையும் சோகத்தையும் சேர்த்து தரும்
நீ என்றுமே எனக்கு ஒரு
அழகான ராட்சசி! //
அருமையான வரிகள்..,
இதை படிக்கும் போது
எனக்கு இப்படி ஒரு அழகான ராட்சசி
இல்லையேன்னு Feeling-ஆ இருக்கு..
@ வெங்கட்
உங்களுக்கு தான் இரண்டு அழகான ராட்சசசர்கள் இருக்காங்க இல்ல. Enjoy பண்ணுங்க
கவிதையில் என் குழந்தை பார்த்தேன்
Post a Comment