Cricket Countdown....

Monday, June 7, 2010

திரும்ப கிடைக்குமா?



திரும்ப கிடைக்குமா?

யாரையும் அறியா கோவைக்கு உனக்காக நானும்
யாரையும் அறியா சென்னைக்கு எனக்காக நீயும் 
வந்திறங்கிய நாட்கள்....

பௌர்ணமி இரவில், கடற்கரை மணலில் 
கால் நனைத்த பொழுதுகள்...

திக்கு தெரியாமல், வழிகளும் அறியாமல்
ஒன்றாய் பைக்கில் சுற்றிய சாலைகள்...

மழைகாலம் என தெரிந்தும், கடற்கரை சென்று
ஒதுங்க இடம் இல்லாமல் நனைந்த மழை....

நான் அழைத்து போகும் திரைப்படம் எல்லாம்
அறுவையான படம் என்று கூறி உனக்கு வரும் கோபங்கள்...

நீ கோபப்படுவாய் என தெரிந்தும் உன் கோபத்தை ரசிக்கவே
நான் புக் செய்யும் அறுவை படங்கள்...

உனக்காக நானும் எனக்காக நீயும் புத்தாடை 
எடுபதற்காகவே வரும் பண்டிகைகள்...

அடுத்தவர் தூக்கம் கெடும் என்பதிற்காக
SMS - ல்லேயே நீளும் இரவுகள்...

நீ வீட்டில் இருந்து கிளம்பிவிட்டாய் என தெரிந்தும்
எந்த உடையில் நீ வருவாய் என காத்திருக்கும் நொடிகள்...

உடன் இருக்க வேண்டும் என்பதிற்காக 
பாண்டிச்சேரிகும், திண்டிவனத்திற்கும் சென்று
பேருந்திலேயே பொழுதை கழிக்கும் பயணங்கள்...

மனைவியாய் மாறிய காதலியே!
என் அலுவலகத்தின் வேலை பளுவிற்கும்,
உன் வீடு வேலையின் சுமைகளுக்கும்,
நம் குழந்தையின் பராமரிப்பிற்கும்,

இடையில், திரும்ப கிடைக்குமா?

 இ . வா. பேசும் படம்:

 பஸ் இல் புட் போர்டு தெரியும்! இதற்கு ஒரு பெயர் வையுங்களேன் !!


7 comments:

Anonymous said...

பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

அனு said...

ஆணி அதிகம்.. அதான், உங்க பதிவ கவனிக்கல..ஹிஹி..

நிறைய interesting-கான விஷயங்கள் இருக்கும் போல உங்க lifeல.. ஒரு ஒரு secretஆ இப்போதான் வெளில வருது..

//நீ கோபப்படுவாய் என தெரிந்தும் உன் கோபத்தை ரசிக்கவே
நான் புக் செய்யும் அறுவை படங்கள்.//

இதெல்லாம் டூ மச்-ங்க.. உங்களை பொறுத்துக்கொண்ட (கொண்டிருக்கும்) அந்த பாவப்பட்ட ஜீவன் வாழ்க...

அருண் பிரசாத் said...

@ அனு
பின்ன என்னங்க எந்த நல்ல படத்துக்கும் WEEKEND ல டிக்கெட் கிடைக்கமாட்டேன்குது, இப்படி சொல்லி தான் சமாளிக்கணும்.

வெங்கட் said...

திரும்ப கிடைக்குமா?

பௌர்ணமி இரவு., மழை.,
அறுவையான படம்., பண்டிகைகள்...
SMS., பாண்டிச்சேரி., திண்டிவனம்.,
பேருந்து...

இது எதுவுமே காணாம போகல..
திரும்ப கிடைக்க..
அது அங்கேயே தான் இருக்கு..
கொஞ்சம் மனசு வெச்சா போதும்..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்,

கருத்துக்கு நன்றி வெங்கட், ஆனா நாங்க ரொம்ப பிஸி. FARMVILLE விளையாடனும் BLOG எழுதணும் (??????) எவ்வளோ வேலை இருக்குது!
நல்ல வேலை WIFE உங்க கருத்த பார்க்கலை, பார்த்தால் நான் காலி ( கொடுத்த விருதுக்கு கரெக்டா வேலை செய்கிறீர்கள்)

எல் கே said...

மனதிருந்தால் மார்க்கமுண்டு

அருண் பிரசாத் said...

@ LK

ஆகா ஒன்னு கூடிடாங்கயா.

வருகைக்கும் கர்த்துக்கும் நன்றி LK