மண்ணின் மைந்தர்கள்!
டைடன் கோப்பை, இந்தியா Vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 21 , 1996
இன்னும் 8 ஓவர்களில் 52 ரன்கள் தேவை!
அவளவு தான் முடிந்தது, மேட்ச் காலி என பெங்களூர் ரசிகர்கள் கிளம்ப எத்தனிக்கும் போது "சில்" என பறந்தது ஒரு சிக்ஸர், அடித்தது ஸ்ரீநாத். என்னட இந்த பௌலேர்கள் ஸ்ரீநாத்உம் கும்ப்ளேயும் என்ன செய்ய போகிறார்கள் என நின்று பார்த்தவர்களுக்கு விருந்து காத்திருந்தது....
1996 - ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் கிரிக்கெட்இல் ஆதிக்கம் செலுத்திய காலம். இந்த இரு அணிகளுடன் இந்தியா ஒரு முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் பங்கேற்றது. முதல் சுற்றில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை வென்று 4 புள்ளிகளுடன் முநிலை பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுகிடையான போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி பெறவேண்டிய கட்டாயம்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி தலைவர் மார்க் டைலர் பட்டிங் செய தீர்மானித்தார். ஒரு முனையில் மார்க் வாக் உம், ஸ்லைட்டர் உம் அடுத்து அடுத்து அவுட் ஆகினர், டைலர் உடன் ஜோடி சேர்த்த ஸ்டீவ் வாக் அணி எண்ணிகையை உயர்த்தி 41 ரன்களில் பேவில்லியன் திரும்பினார், பின் வந்த பேவனும் டைலர் உம் ஸ்கோர் ஐ 215/7 ஆகா நிர்ணயித்தனர். டைலர் அவுட் ஆகாமல் 105 ரன்கள் எடுத்தார். டைலர் அடித்த ஒரே சதம் இது தான். தன் 98 வது மேட்ச் இல் எடுத்தார்.
அடுத்து ஆடவந்த இந்தியா 47 ரன்களுக்குள் சோமசுந்தர், டிராவிட், அசார், கங்குலி என 4 விக்கெட்களை பறிகொடுத்தாலும் சச்சின் பொறுப்புடன் விளையாடினார். மறுமுனையில் ஜடேஜா, மோங்கியா, ஜோஷி அவுட் ஆக சச்சின் இன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 88 ரன்களில் வாக் கிடம் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 164/8.
ஸ்ரீநாத் - கும்ப்ளே = ரன் விருந்து:
அந்த சிக்ஸர்கு பிறகு பந்து அனைத்து பக்கமும் பறக்க 4, 2 என இருவரும் விளாசினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களால் கடைசி வரை இருவரையும் அவுட் ஆக்க முடியவில்லை. ஸ்ரீநாத் 23 பந்துகளில் 30 ரன்களையும், கும்ப்ளே 19 பந்துகளில் 16 ரன்களையும் குவித்து இந்தியாவை வெற்றி பெற செய்தனர்
உதிரிகள்:
அசார் LBW அவுட் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பிரச்னை செய்ததால் ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தபட்டது.
இந்த ஆட்டத்தில் மொத்தம் ஆறு கர்நாடக வீரர்கள் விளையாடினர். உண்மைலேயே மண்ணின் மைந்தர்கள் தானே?
ஸ்கோர் போர்டு:
No comments:
Post a Comment