பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் 2009 முதல் ஜனவரி 2010 வரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் சென்றது . 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு ட்வென்டி ட்வென்டி என அனைத்திலும் தோல்வி. மருந்திற்கு கூட ஒரு வெற்றி இல்லை. டாஸ்மானியா உடன் நடந்த ப்ராக்டிஸ் மேட்ச் கூட டிரா வில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக யூனுஸ் மற்றும் யூசுப் க்கு வாழ்நாள் தடையும், ரானா மற்றும் மாலிக் க்கு ஓராண்டு தடையும் விதித்தது.
T20 உலக கோப்பை அரை இறுதியில், அந்த தொடரிலேயே அதிகபட்ச ஸ்கோர்களில் ஒன்றான 191 ஐ ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்தது. ஆஸ்திரேலியா வும் பாகிஸ்தானின் சுழல் பந்து வீச்சில் திணறித்தான் போனது. கைக்கு ஏறியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல மைக்கல் ஹுசே கடைசி ஓவரில் விஸ்வருபம் எடுத்து வெற்றியை பாகிஸ்தான்னிடம் இருந்து பறித்தார் என்பதைவிட பிடுங்கினார் என்றே சொல்லவேண்டும்
பாகிஸ்தான் அரசாங்கம் தற்போது FACE BOOK, YOUTUBE ஆகிய தளங்களை தடை செய்து உள்ளது. அவர்கள் சொல்லும் காரணம்: OBJECTIONAL CONTENT. இன்டர்நெட்டில் பல தேவையிலாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. தடை என்பது தீர்வு இல்லை. அந்த தலத்தில் உள்ள URL மட்டும் தடை செய்தால் போதும். மேலும் அந்த இரு தலத்தில் மட்டும் OBJECTIONAL கன்டென்ட் இல்லை இன்டர்நெட் முழுதும் கொட்டி கிடக்கிறது. இண்டர்நேடையே தடை செய்யவேண்டியது தானே.
ஒன்றுமட்டும் நிச்சயம் குரங்குகையில் கிடைத்த பூமாலை போல தேவை இல்லாதவர்கள் கையில் கிரிக்கெட்டும் இண்டர்நெட்டும் சிக்கிஉளது. இன்னும் எனென தடைகள் வரும் மோ பாகிஸ்தான்னுக்கு.
பாகிஸ்தான் னுக்கு அதிர்ஷ்டமும் இல்லை, முளை உள்ள தலைவர்களும் இல்லை.
அணைத்து நாடுகளும் முன்னோக்கி சென்றால் பாகிஸ்தான் பின்னோக்கி கற்காலத்திற்கு செல்கிறது...
பிரேக்கிங் நியூஸ்:
எல்லாம் சரி எப்போது தீவிரவாதத்தை தடை செய்யும் பாகிஸ்தான்!
டையில் பிட்:
சென்னையை கலந்கடிதாள் லைலா (புயல்) -
No comments:
Post a Comment