Cricket Countdown....

Sunday, June 20, 2010

அப்பாவுக்கு....


அப்பா....


முன்பே நான் பதிவு செய்த இடுகையை "தந்தையர்  தினத்திற்காக"   மீண்டும் பதிவு செய்கிறேன்.
ஒரு மெயில் இல் வந்த கவிதையை பகிரிந்து கொள்கிறேன்.... 

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

 
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா
செல்லம் என்று

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...




9 comments:

Unknown said...

அப்பாக்களைப் பற்றிய முதல் புரிதலே, நாம் அப்பாவாக ஆனபோதுதான் கிடைக்கிறது ..

இமிக்ரேசன் அனுபவங்களில் அதை மைய்யமாக வைத்து எழுதுவதால் அந்த நாடுகளைப் பற்றி போகிற போக்கில் சொல்ல வேண்டியிருக்கிறது.. நான் மோரியசில் இருந்த எட்டு நாட்களும் பரவசமான அனுபவங்கள், கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் சுற்றி இருக்கிறேன். அருமையான, பக்தி மிகுந்த மக்கள்..

உங்கள் பதிவில் நிறைய எழுதுங்கள்.. இப்போதும் அங்கு என் நண்பர்கள் இருக்கிறார்கள்..

எல் கே said...

nalla pagirvu

அ.முத்து பிரகாஷ் said...

// நேசத்தை
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்... //

யோசிக்க வைக்கிறது ...
நாளை அவரை அலைபேசியில் அழைக்க வேண்டும் !

நன்றி தோழர் !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

வெங்கட் said...

அப்பா பத்தின கவிதை அருமை..,

// நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை... //

எங்க வீட்ல இதுதான் நடக்குது..

ஒவ்வொரு வரியும்.,
ஒவ்வொரு வரியும்.,
ஏதோ ஒரு இனம் புரியாத
வலியை உண்டாக்குது..

Very Nice..

இப்படி கலக்கிட்டே இருந்தா
எப்படி..? எங்களுக்கு
கலாய்க்க சான்ஸ் குடுங்க பாஸ்..

அருண் பிரசாத் said...

@ கே ஆர் பி
//அப்பாக்களைப் பற்றிய முதல் புரிதலே, நாம் அப்பாவாக ஆனபோதுதான் கிடைக்கிறது ..//

உண்மை கே ஆர் பி

அருண் பிரசாத் said...

நன்றி L K

அருண் பிரசாத் said...

// யோசிக்க வைக்கிறது ...
நாளை அவரை அலைபேசியில் அழைக்க வேண்டும் //

நாளை என்ன நாளை, அழைப்பது என முடிவெடுத்துவிட்டால் இப்போழுதே அழையுங்கள் நியோ.

வருகைக்கு நன்றி நியோ

அருண் பிரசாத் said...

//எங்க வீட்ல இதுதான் நடக்குது..//

எல்லோருடைய வீட்டிலும் இதுதான் நடக்கிறது வெங்கட்.
// எங்களுக்கு
கலாய்க்க சான்ஸ் குடுங்க பாஸ்..//

வெச்சிக்கிட்டா தல வஞ்சன பண்ணுறேன். விரைவில் உங்க போதைக்கு ஊருகாய் போடுறேன்

முனியாண்டி பெ. said...

வார்த்தையில் உண்மை நிறையேவே இருக்கு. அப்பா குறித்த உண்மையான புரிதல் இருக்கு இந்த கவிதையில்