Cricket Countdown....

Thursday, April 7, 2011

ஊழலுக்கு எதிரான முதல் அடி - அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே. 

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 வயது அண்ணா ஹசாரே தில்லியில் இன்று 3 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.


யார் இந்த அண்ணா ஹசாரே?
மகாராஷ்டிரத்தில் ஜூன் 15, 1938ல் பிறந்த கிசான் பாபு அசாரே (எ) அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர். இவர் சமூக சேவையை பாராட்டி இந்தியா பத்மபூசன் விருதை 1992 ல் இவருக்கு வழங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டவரைவினை விட வலுவானதாக உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றகோரி இவருடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். நாடு முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஊழலுக்கெதிரான இந்தியா:
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.

இந்த சட்ட வரையறை மூலம்,
1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
3. ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
4. இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
5. சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
6. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

ஒரு தனி மனிதனாக இருந்து மாபெரும் சமூக போராட்டத்தை தூண்டியிருக்கும் அண்ணா ஹசாரேவிற்கு தோள் கொடுப்போம். நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் புற்றுநோயை களைய சரியான சமயம் இதை விட்டால் வேறு கிடைக்காது.

உலககோப்பை வெற்றிக்காக தெருவிற்கு வந்து கொண்டாடும் நாம், ஏன் இது போன்ற நல்லவிஷயத்துக்காக வீதியில் இறங்ககூடாது.

குறைந்தபட்சம் பதிவுகள் மூலமாகவாவது நம் ஆதரவை தெரிவிக்கலாமே.....

facebook மூலம் ஆதரவு தர இங்கே சொடுக்குங்கள்

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரிப்பவர்கள் கிழே தமிழ்மணத்தில் +ve ஓட்டு போட்டு இந்த பதிவு பலரை சென்று அடைய உதவுங்கள் (இது ஹிட்ஸ் வேண்டி அல்ல, இந்த பதிவு பலரை சென்று அடைய மட்டுமே)


33 comments:

Madhavan Srinivasagopalan said...

ஊழலற்ற இந்தியாவிற்கு வழி வகுப்போம்..
நானும் எனது தற்போதைய பதிவில் முதல் பத்தியாக (சுருக்கமாக) இதத்தான் சொல்லியுள்ளேன்.

சேலம் தேவா said...

நிச்சயம் ஆதரவளிக்க வேண்டும்.நானும் என் தளத்தில் அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

Anonymous said...

உங்கள் எழுத்து நடை அருமை

சௌந்தர் said...

நிச்சயம் இதை பற்றியெல்லாம் பதிவு எழுதி இருக்க வேண்டும் நிச்சயம் நானும் பதிவு எழுதுகிறேன்

செல்வா said...

நானும் இவரைப்பற்றிப் படித்தேன் அண்ணா .. இப்போ தெளிவாக அறிந்து கொண்டேன். கண்டிப்பா இவருக்கு நமது ஆதரவு தரவேண்டும் .. ஊழலற்ற இந்தியா வேண்டும் என்று நினைப்பதுடன் இதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் ..

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல பதிவு ...அருண் மக்கா ...

பொன் மாலை பொழுது said...

Very good
carry on every one.

Gayathri said...

நல்லது நடந்த நல்லாத்தான் இருக்கும்..இதுகுள்ளையும் அரசியல் புகுந்து அவரை ஏதும் இம்சை செய்யாமல் இருந்தால் நல்லது...

நம்மால் ஏதும் செய்ய முடயுமானால் சொல்லுங்கள் செய்வோம்

Kousalya Raj said...

உங்களின் இந்த பதிவின் லிங்கை ஊழல் பற்றிய நேற்றைய பதிவில் இணைத்துள்ளேன்...அனுமதிகாகவே இங்கே குறிப்பிட்டுள்ளேன். நன்றி.

middleclassmadhavi said...

தோள் கொடுப்போம்!

Anonymous said...

நல்ல பதிவு அருண்!

சசிகுமார் said...

பாவம் சாகும் வயதிலும் ஒரு போராட்ட குணம் இவரின் முயற்சி வெற்றி அடைந்தால் வளர்ச்சியில் உலகத்தில் நாம் தான் முதலிடம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பதிவு அருண்!

வெங்கட் said...

நல்ல பதிவு அருண்.
நிச்சயம் ஆதரவளிக்க வேண்டும்.

Richard said...

சூப்பர்

வைகை said...

மச்சி.. உண்மைலே இன்று காலைதான் இந்த செய்தியே எனக்கு தெரிந்தது! நல்ல ஆரம்பம்... முடிவு நம் கைகளில்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i too join with you

Mohamed Faaique said...

ஒவ்வொரு நாட்டுக்கும் இவர் போல் ஒருத்தர் தேவைப் படுகிறார்

ராஜ நடராஜன் said...

அண்ணா ஹசர்ரேவுக்கு ஆதரவு தருவோம்.

Chitra said...

Voted positively. :-)

Anonymous said...

வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

Jey said...

I salute Anna and I support his campaign.

வெட்டிப்பேச்சு said...

We are and we should be with Anna Hazare..

பார்க்க:
ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…
http://vettipaechchu.blogspot.com/2011/04/blog-post.html

Sivakumar said...

இந்தியாவின் இரண்டாம் சுதந்திர போராட்டம். முன்னின்று நடத்தும் அன்னா அவர்களுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப்பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு எழுந்துள்ளது. வெற்றி பெறட்டும் இப்போராட்டம்!!

சாமக்கோடங்கி said...

கண்டிப்பாக நமது குறிக்கோள் ஊழலை அடியோடு ஒழிக்கும் விதமாக இருக்க வேண்டும். ஆனால் அதே தருணத்தில் மக்களும் கொஞ்சம் மனம் மாற வேண்டும்..

ராஜி said...

அண்ணா ஹசர்ரேவுக்கு ஆதரவு தருவோம்.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

krishanthraj said...

பாரதி மாத்திரம் இன்று இருந்திருந்தால் ஊழலை பற்றி கொட்டி தீர்த்திருப்பார்


200 ஆவது நபராக துணை வருவதை இட்டு பெருமை அடைகிறேன்

அருண் பிரசாத் said...

@ krishanthraj
//பாரதி மாத்திரம் இன்று இருந்திருந்தால் ஊழலை பற்றி கொட்டி தீர்த்திருப்பார்
200 ஆவது நபராக துணை வருவதை இட்டு பெருமை அடைகிறேன்//

200th Follower ஆக சேர்ந்ததுக்கு நன்றிங்க

படிக்காதீங்க.. (இந்திரா) said...
This comment has been removed by the author.
Krishna said...

நல்ல பதிவு... இவரது முயற்சி வெற்றியடைய கைகோர்ப்போம்....

Krishna said...

நல்ல பதிவு... இவரது முயற்சி வெற்றியடைய கைகோர்ப்போம்....