அப்பாடி ஒரு வழியா ஊரை எல்லாம் சுத்தி முடிச்சிட்டு திரும்ப மொரீசியஸ் வந்து சேர்ந்தாச்சு. சரி ரொம்ப நாளா பதிவுலகம் பக்கமே வரலையேனு ஒவ்வொரு பிளாக்கா போய் பார்த்தா...... நம்ம சிரிப்பு போலீஸை சென்னைல சந்திச்சப்போ என்னமோ அவர் தான் சாப்பாட்டுக்கு பில் பே பண்ணதா பதிவுலாம் போட்டு இருக்காரு.
இந்த உலகம் இதையும் நம்பிடுச்சோனு ஒரு சந்தேகம்.... அதனால, அந்த பதிவர் சந்திப்பின் Behind the Scenes இதோ....
அவரோட இந்த பதிவுல சொன்னது 90% உண்மைதான். நான், பட்டிக்காட்டன் ஜெய், ஆயிரத்தில் ஒருவன் மணி, பனங்காட்டு நரி, தான் பிரபல பதிவருனு சொல்லிக்கற சிரிப்பு போலீஸ் ரமேஷ் - எல்லோரும் சந்திச்சி, எல்லோரையும் கலாய்ச்சி, போதாத குறைக்கு போன் பண்ணி கோகுலத்தில் சூரியன் வெங்கட்டையும் டெரர் பாண்டியனையும் கலாய்ச்ச பிறகு அந்த களைப்பு போக நல்லா சாப்பிட்டோம்.....
நானும் ஜெய்யும் ஏற்கனவே பேசி ரமேஷைதான் பில் கட்ட வைக்கறதுனு ஒரு பிளானே பண்ணி இருந்தோம். ஆனா அசருவாரா நம்ம போலீஸ், ஒத்த பைசா வெளில எடுக்கலையே.
என்னா பேசியும் பிரியோஜனம் இல்லைனு சொல்லி நம்ம ஜெய்யும் நானும் பிளான் B யை ஆரம்பிச்சோம். ரமேஷை நல்லா சாப்பிட சொன்னோம். ஓசி சோறச்சே விடுவாரா போலீஸ். செம கட்டு கட்டினாரு.
வெக்கற ஆப்பு தெரியாம இப்படி வேடிக்கை பார்க்குதே போலீசு |
மெதுவா பேச்சு கொடுத்தோம் அவர்கிட்ட. ரமேஷ் நீங்க எந்த கிரெடிட் கார்டு உபயோகிக்கறீங்கனு கேட்டப்போ, உண்ட மயக்கத்துல இருந்த சிங்கம் (அதாங்க ரமேஷ்) தன்னோட கிரெடிட்கார்ட்டை கொடுத்துடுச்சு. உடனே ஜெய் அந்த கிரெடிட்கார்டு வெச்சி பே பண்ணிட்டாரு. எப்பூடி.....
இந்த டெக்னிக் வெச்சி இனி யாரும் ரமேஷை ஏமாற்றக்கூடாது. All Rights Reserved Only to Arun and Jey
டிஸ்கி 1: என்னை பார்க்க ஏர்போர்ட்டு வந்த ஆயிரத்தில் ஒருவன் மணிக்கும், என்னை வீட்டிற்கே வந்து பார்த்த காணாமல் போன கனவுகள் ராஜிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.
டிஸ்கி 2: முக்கியமான விஷயம், அந்த ஓசி சோறுக்கு டிப்ஸ் (சுளையா 20 ரூபாய்) நான் தான் கொடுத்தேன் யுவர் ஆனர்.
இந்த படத்தை பார்த்து ரமேஷ்தான், தானே விரும்பி பில் பே பண்ணாரு சொன்னா யாராவது இனியும் நம்புவீங்க? |
39 comments:
வந்துட்டேன்
அண்ணன் சிரிப்பு போலிஸ் ஒரே புன்னகையோடு இருக்காரு
இன்னும் அவர் அந்த கிரெடிட் கார்ட்டுக்கு பணம் கட்டவில்லை என தகவல்
// (சுளையா 20 ரூபாய்) //
(பலாச்) சுளையை டிப்ஸா கொடுத்தா வங்கிக்கராங்களா ?
என்னடு சிரிப்பு போலீசு கிரெடிட் கார்டு வெச்சிருந்தாரா? இத நாங்க நம்பனுமா? உங்களுக்காக மாவாட்டுனாருன்னு சொல்லுங்க நம்புறோம்.........!
அருண் சென்னை வந்திட்டு பாக்காம போய்ட்டீங்களே!!!
20 ரூபாயா சுளையா குடுத்துடு அடக்கம்மா இருக்குரீங்க பாஸ். சி. போலீஸ் வெறும் கார்ட்’ஐ குடுத்துட்டு பந்தா காட்டுரது ரொம்ப ஓவருல்ல....
waiter தன் பக்கமா வரக்கூடாதுன்னு பின்னாடி உட்கார்துடீங்க.... அப்டிதானே! நாம் எத்தனை முறை இந்த வேலை பாஅத்திருப்போம்.
Welcome back! கலகலப்பான சந்திப்பு....
இங்கேயும் கூட்டணி குழப்பமா?
எப்படியோ போலீஸ பில் பே பண்ண வச்சதுல ரொம்ப சந்தோஷம்... :))
சிரிப்பு போலிஸ்
//இத நாங்க நம்பனுமா? உங்களுக்காக மாவாட்டுனாருன்னு சொல்லுங்க நம்புறோம்.........!//
சிரிப்புதிலகம் சிரிப்பு போலிசை அவமானப்படுத்திய இந்த பதிவை வன்மையாக..ஹி..ஹி.. பாராட்டுகிறேன்!
ok..good
என்னோட நண்பன் சிரிப்பு போலீஸ் ஐ ..பில் pay பண்ண சொல்லி அவமான படுத்தியதால் நான் வெளிநடப்பு செய்கிறேன் ..ஹி ..ஹி...கோவமா வெளியே போறேங்க ...
நல்ல சந்திப்பு!
(ரமேஷ்க்குள்ளே ஒரு மாமனிதர் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று!)
ஆனால் அடுத்த முறை ரமேஷ் உஷாராக இருப்பார்!
இனிமே அருண் எனக்கு போன் செய்தால் subscriber பணம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளார் என்ற மெசேஜ் வரும் என்பதை கொலைவெறியுடன் கூறிக் கொள்கிறேன்
ஒரு கலக்கல் டூர் முடிஞ்சுதா இனிமே பதிவு தொடர்ந்து வருமா
டேமேஜரை இப்படியா டேமேஜ் பண்றது..
நரிப்பயபுள்ள, பிச்சை எடுத்த காசை நமக்கு பிரிச்சி குடுக்காம கம்பி நீட்டிட்டானே அதையும் சேத்துச் சொல்லிடுப்பா, நம்ம மக்களுக்கு அதுவும் தெரியனுமில்ல...
// சௌந்தர் said...
இன்னும் அவர் அந்த கிரெடிட் கார்ட்டுக்கு பணம் கட்டவில்லை என தகவல்
//
அது ஒன்னும் பிரச்சினை இல்ல நாலு நாள் , நரியோட வடப்ழனி கொவில்/பஸ்டாண்டுன்னு வசூல் பண்ணா தேத்திடலாம்...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னடு சிரிப்பு போலீசு கிரெடிட் கார்டு வெச்சிருந்தாரா? இத நாங்க நம்பனுமா? உங்களுக்காக மாவாட்டுனாருன்னு சொல்லுங்க நம்புறோம்.........! //
எப்படி பன்னி கரெக்ட்டா கண்டு பிடிக்கிறே...?, இருந்தாலும் உன்னோட மோப்ப சக்தி அபாரம் பன்னி...:)
சி.போ...@ இனிமே யாரயாச்சும் போய் பாப்ப....? அப்டியே பாத்தாலும் ஓசி சோறு கேப்ப....?
அருண்..@ நல்ல மெத்தட்.. தம்பி.........அடுத்தடுத்து போறவங்க இதே மெத்தட ஃபாலோ பண்ணிக்கிறோம்.. ஹா ஹா..ஹா!
Its nice!
அப்பா....ஒரு பதிவுல எவ்வளவு விஷயம் வெளிவருது
இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்
Sereppu police a
Serious police aketeka. . . . By www.kingraja.co.nr
இந்த கடைசீ போட்டோவில் , கோடு போட்ட( பட்டாபட்டி ஸ்டைலில்) பனியன் போட்டிருப்பவரை சிங்கை போலீஸ் தேடுகிறது..
முகத்துக்கு மரு வைத்து, வெளியே உலாவச்சொல்லவும்..
அவசரத்தந்தி by பட்டாபட்டி
பட்டாபட்டி.... said... 30
இந்த கடைசீ போட்டோவில் , கோடு போட்ட( பட்டாபட்டி ஸ்டைலில்) பனியன் போட்டிருப்பவரை சிங்கை போலீஸ் தேடுகிறது..
முகத்துக்கு மரு வைத்து, வெளியே உலாவச்சொல்லவும்..
அவசரத்தந்தி by பட்டாபட்டி//
நல்ல வேலை வயித்துல தேன் வார்த்தீங்க. ஹிஹி
மெதுவா பேச்சு கொடுத்தோம் அவர்கிட்ட. ரமேஷ் நீங்க எந்த கிரெடிட் கார்டு உபயோகிக்கறீங்கனு கேட்டப்போ, உண்ட மயக்கத்துல இருந்த சிங்கம் (அதாங்க ரமேஷ்) தன்னோட கிரெடிட்கார்ட்டை கொடுத்துடுச்சு. உடனே ஜெய் அந்த கிரெடிட்கார்டு வெச்சி பே பண்ணிட்டாரு. எப்பூடி.....//
சாப்பாட்டுல வசிய மருந்து வச்சு என்னை ஏமாத்திய அருண் ஒழிக..
:))) இது நல்ல டெக்னிக்கா இருக்கே!
//நரிப்பயபுள்ள, பிச்சை எடுத்த காசை நமக்கு பிரிச்சி குடுக்காம கம்பி நீட்டிட்டானே அதையும் சேத்துச் சொல்லிடுப்பா, நம்ம மக்களுக்கு அதுவும் தெரியனுமில்ல... //
நரியும்,அருணும் ஒண்ணா போனாங்களே எதுக்குன்னு தெரியாதா?
ஜெய்..
//உண்ட மயக்கத்துல இருந்த சிங்கம் (அதாங்க ரமேஷ்) தன்னோட கிரெடிட்கார்ட்டை கொடுத்துடுச்சு//
எனக்கு என்னவோ ரமேஷ் உங்க யாரோட கார்ட்டையோ அடிச்சு தான் உள்ள வச்சிருப்பார்னு தோணுது.. உண்ட மயக்கத்தில நீங்க கவனிக்காம விட்டுடலயே?? எதுக்கும் அடுத்த மாச ஸ்டேட்மெண்ட்ட செக் பாண்ணிக்கோங்க..
ஆஹா, என்ன கலகலப்பான சந்திப்பு.
எனக்கு டீ மட்டும் குடுத்து, போலீசுக்கெல்லாம் சாப்பாடு வாங்கி குடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
சிரிப்பு போலீஸ் அசத்தறார்
ம்ம் வெல்கம் பேக் மாம்ஸ்...!
நல்ல ஜாலி ட்ரிப்தான்..
நம்ம ஊருபக்கம் வர்றதாக சொல்லியிருந்தீங்கன்னு நினைக்கறேன்..
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.
New Classified Website Launch in India - Tamil nadu
No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
Post a Comment