சாதித்து காட்டிய இளைஞர் படை !
இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மனதில் திக் திக் திக் ....
4 பந்துகளில் 6 ரன்கள் தேவை ....
பந்து வீசுவதோ புதிய முகம் - ஜோகிந்தர் ஷர்மா....
மட்டையுடன் அடிக்க காத்திருப்பது அதிரடி ஆட்டக்காரர் - மிஸ்பாஹ் உல் ஹாக்
அதற்கு முந்தய பந்தில் தான் ஒரு சிக்ஸர் அடித்தார் மிஸ்பாஹ்!
ஜோகிந்தர் மித வேகத்தில் பந்து வீச மிஸ்பாஹ் அதை சாதாரனமாய் ஷர்ட் பைன் லேக் திசையில் தூக்கி அடிக்கிறார் பந்து நீராக அங்கு தயாராய் இருந்த ஸ்ரீசாந்த் கையில் தஞ்சம் அடைந்தது. டோனி தலைமையில் ஆனா இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன்!
இந்திய அணி அவ்வளவு சுலபமாக இறுதி போட்டிக்குள் நுழையவில்லை. ஸ்காட்லான்ட் உடன் ஆனா போட்டி மழை காரணமாக கைவிடப்பட ஒரு புள்ளியுடன் பாகிஸ்தானுடன் மோதியது. அந்த போட்டி tie ஆகா பெளல் அவுட் முறையில் இந்தியா வென்று அதிக புள்ளி யுடன் அடுத்த சுற்றுக்கு நுழைந்தது. அந்த சுற்றில் முதல் போட்டியில் நியூசீலாந்துஉடன் 10 ரன் களில் தோற்று இங்கிலாந்த் மற்றும் சவுத் ஆப்ரிக்கா விடம் வென்று அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வென்றது
இறுதி போட்டி:
டோஸ் வென்ற டோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். முதன் முதலாக சர்வதேச கால் பதித்த யூசுப் பதான் 4 வது பந்தில் சிக்ஸர் அடிக்க ஆடம் சுடு பிடித்தது. ஆனால் அடுத்து அடுத்து பதான் மற்றும் முத்தப்ப அவுட் ஆகா யுவராஜ் காம்பிருடன் ஜோடி சேர்ந்து 14 வது ஓவரில் 100 ரன்களை சேர்த்தனர். பிறகு யுவராஜ் மற்றும் டோனி அவுட் ஆகா, கம்பீர் மறு முனையில் அதிரடி ஆடம் ஆடினார். ஓய்ந் வந்த ஷர்மா தன் பங்குக்கு சிக்ஸர், பௌண்டரி என விளாசி இந்திய அணி எணிக்கையை 157 நிர்ணயித்தார்
பேட் செய்ய களம் இறங்கிய பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, 5 வது பந்தில் ஹபீஸ் ஐ அவுட் ஆகினார் ஆர் பீ சிங். ஆனால் அடுத்த ஓவரில் ஸ்ரீ சாந்த் 4 ,6 ,6 ,4 என வாரி கொடுத்தார். அடுத்த ஓவரில் ஆர் பீ சிங் மீண்டும் ஒரு விக்கெட் அடுத்து நிம்மதி தந்தார். ஆனாலும் பாகிஸ்தான் நசிர் அதிரடியில் வேகமாக இலகு நோக்கி முன்னேறியது. 6 வது ஓவரில் 50 ஐ கடந்தது பாகிஸ்தான். அடுத்த 2 ஓவரில் நசிர் மற்றும் யூனுஸ் அவுட் ஆகா பாகிஸ்தானின் வேகம் குறைந்தது. 12 வது ஓவரில் ஈர்பான் பதான் அடுத்து அடுத்து 2 விக்கெட் எடுத்து, 4 விக்கெட் மீதம் இருக்க 48 பந்துகளில் 80 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தார். 16 வது ஓவரில் மீதும் ஒரு விக்கெட் பதான் னுக்கு. அடுத்து வந்த ஹர்பஜன் ஓவரில் மிஸ்பாஹ் 3 சிக்ஸர் அடித்தார், அத்த ஸ்ரீ சாந்த் ஓவரில் தன்வீர் தன் பங்குக்கு 2 சிக்ஸர் அடிக்க 2 ஓவரில் 20 ரன்கள் தேவை என மாறியது. ஹர்பஜன் 19 வது ஓவர் இல் 7 ரன்கள் கொடுத்தார். 13 ரன் 6 பால் . வேறு அனுபவ பந்து வீச்சாளர்கள் இல்லாததால் இளம் ஜோகிந்தர் ஷர்மா வை தேர்வு செய்தார்
ஜோகிந்தர் மித வேக பந்து வீச்சாளர், வெறும் 13 ரன்களே தேவை, அடிக்க போவதோ ஹர்பஜன் ஐ பதம் பார்த்த மிஸ்பாஹ் உல் ஹாக், உலக கோப்பை இறுதி போட்டி வேறு - ஜோகி கு டென்ஷன். தொனிக்கும் தான்.
முதல் பந்தை wide ஆக வீசினார், டோனி ஜோகிந்தர் ஐ சமாதன படுத்தினார், அடுத்த பந்தில் ரன் இல்லை. 2 வது பந்தில் இமாலய சிக்ஸர் இப்பொது வெறும் 6 ரன்கள் 4 பந்துகளில்.... ( பதிவின் தொடக்கத்தை படித்து கொள்ளுங்கள்)
சாதித்து காட்டியது இளைஞர் படை !
4 comments:
மறக்க முடியாதவைதான்.. நன்றி :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரச்சன்னா
unmayilaye nalla matchthan. palay match niraya podungal
இந்த மாதிரி ஒரு சில மாட்ச் அடி, ந்ம்மல உசிப்பேத்தி டொச்சு மேட்சயும் பாக்க வச்சிருரானுக...
Post a Comment