Cricket Countdown....

Tuesday, July 26, 2011

ஷமி பக்கங்கள்....

என் குழந்தை ஷம்ஹித்தாவின் குறும்புகளை சொல்லி ரொம்ப நாளாச்சு, இதோ உங்களுக்காக.....

குறும்பு 1:
இந்தியா சென்று வந்ததுல இருந்து இவளின் ஆட்டமும், சந்தோஷமும் அதிகமாகி இருக்கு... கூடவே குறும்புகளும். இப்பொழுது எல்லாம் பேனாவை வைத்து கொண்டு நிறையவே கிறுக்க ஆரம்பிச்சி இருக்கா. நாங்கள் வேற அதை கட்டாயம் வேடிக்கை பார்த்தே ஆகனுமாம்.

ஒருநாள் ஹாலில் விளையாடிட்டு இருந்தா, நான் ரொம்ப சீரியசாக நிதின் கோகலே எழுதிய “இலங்கையின் இறுதிப்போர்” புத்தகத்த படிச்சிட்டு  இருந்தேன். சுற்றி சுற்றி விளையாடிட்டு இருந்தவ  என் கிட்ட வந்து நின்னா. நான் புத்தகத்துல மும்முரமா இருந்தேன். என்னை பார்த்துட்டு பிறகு குனிந்து புத்தகத்தின் அட்டையை பார்த்தா. அதுல இருந்த ராஜபக்‌ஷே, பிரபாகரன், இலங்கை வரைபடங்களை தொட்டு ஏதோ சொல்லிட்டு, என்னை பார்த்து “அப்பா, Bookaa No” ன்னு சொல்லிட்டு அந்த புத்தகத்தை விடாப்பிடியாக என்னிடம் இருந்து பிடுங்கி அலமாரியில் வெச்சிட்டா. நான் அந்த புத்தகத்தை படிச்சா என்னங்க தப்பு? ஏனோ தெரியல, இன்னைக்கு வரை அந்த புத்தகத்தை நான் எடுக்கறதும் உடனே அவ வந்து அதை பிடுங்கி வைக்கறதும் தொடர்ந்துகிட்டே தான் இருக்குது. அப்போதான் அந்த புத்தகத்தை படிச்சி முடிப்பேனோ....

குறும்பு 2:

இவகிட்ட இருக்கற ஒரே கெட்ட பழக்கம் தூங்கும் போது விரல் சூப்புறது. தூங்கும் போது மட்டும் தான், மத்த நேரத்துல இல்லை. ஒருநாள் தூங்க படுத்துட்டு இருக்கும் போது விரல் சூப்பினா. நான் “பாப்பாக்கு 2 வயசு ஆக போகுது இல்லையா? விரல் சூப்பாமா தூங்கனும். பாரு அப்பா, விரல் சூப்பரனா இல்லைல, நீயும் விரல் சூப்பாம சமத்தா தூங்கனும்” என்றேன். உடனே என் பொண்ணு, “அப்பா, இந்தா” என தன் இன்னொரு கை விரலை எடுத்து என் வாயில் வைத்து சூப்ப சொல்கிறாள். என்னத்த பண்ண?

குறும்பு 3:
என் பொண்ணு குறும்பு செய்யும் போது “வாலு” என செல்லமா திட்டுவேன். ஒருநாள் ஏதோ குறும்பு செய்ததற்காக, அவளை பார்த்து “வால் பொண்ணு நீ” என்றேன். அதற்கு அவள் “வாலு NO" என்றாள். உடனே நான் “நீ தான் வாலு, பாரு பின்னாடி வால் முளைச்சி இருக்கு”ன்னு சொல்ல. உடனே, வேகமாக என் பின்னாடி வந்து நின்னு, என் முதுகை பார்த்து  “அச்சசோ, வால் காணோம்” ன்னு சொல்றா? என் பொண்ணுக்கும் தெரிஞ்சி போச்சோ!

19 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////, நான் ரொம்ப சீரியசாக நிதின் கோகலே எழுதிய “இலங்கையின் இறுதிப்போர்” புத்தகத்த படிச்சிட்டு இருந்தேன். //////

குழந்தைங்க இருக்கும் போது இப்படித்தான், நாம ஏதாவது சீரியசா செஞ்சிட்டிருந்தா அவங்களுக்கு பிடிக்காது....... எப்பவும் அவங்களையே பாத்துட்டு இருக்கனும்னு விரும்புவாங்க........

Madhavan Srinivasagopalan said...

மொதோ மேட்டர் பல்பா தெரியலை..

ரெண்டும் மூணும் சந்தேகமே இல்லை..
பல்போ பல்பு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

Unknown said...

me the firstu..

வைகை said...

சந்தோசத்திலே பெரியது குழந்தைங்க பண்ற சேட்டைய நேர்ல பாக்குறதுதான்! அனுபவி மச்சி நீ :))

எஸ்.கே said...

இரண்டாவதும் மூணாவது நல்ல பல்புகள்!

எஸ்.கே said...

Children are the living messages we send to a time we will not see. ~Neil Postman

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நீங்க வேற புக் ஒன்னும் படிக்கலையே ..ஹ ..ஹா ..மத்த ரெண்டும் செம பலப் தான்

சிவசங்கர். said...

:)

Mohamed Faaique said...

குழந்தைகள் விரல் சூப்பினா, தடுக்க கூடாது`னு சொல்வாங்க.. மருத்துவர்களிடம் கேட்டுப் பாருங்கள்

வெங்கட் said...

// “அப்பா, Bookaa No” ன்னு சொல்லிட்டு அந்த
புத்தகத்தை விடாப்பிடியாக என்னிடம் இருந்து
பிடுங்கி அலமாரியில் வெச்சிட்டா. நான் அந்த
புத்தகத்தை படிச்சா என்னங்க தப்பு? //

ம்ம்.. அந்த லட்சணத்துல படிச்சி
இருக்கீங்க.. பாப்பாவாலயே உங்க
வாசிப்பை தாங்க முடியல..!

எப்பயும் நம்ம அப்பா புக்கை எடுத்தா
பொம்மை தானே பார்ப்பாரு.. இப்ப
மட்டும் ஏன் ரொம்ப நேரம் பார்க்கறாருன்னு
பாப்பா நினைச்சி இருக்கும்..!

வெங்கட் said...

// “அச்சசோ, வால் காணோம்” ன்னு சொல்றா? என் பொண்ணுக்கும் தெரிஞ்சி போச்சோ! //

அப்ப நீங்க ஒரு " அறுந்த " வால்னு
சொல்லுங்க..

ஜெட்லி... said...

:)...sweet..

இந்திரா said...

ரெண்டாவது, மூணாவது பல்பு ரொம்ம்ம்ப ப்ரகாசமா எரியுது போங்க..

செல்வா said...

புத்தகம் படிக்கிறதவிட அவ பண்ணுற சேட்டைகளை நீங்க பாக்கனும்னுதான் அவ அப்படி எடுத்து வச்சி இருக்கானு நினைக்கிறேன்னா :-))

இந்திரா said...

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் அருண்,உங்க பதிவுக்கு முதன்முறையாக வருகிறேன்.நல்ல பகிர்வுகள். உங்கள் குழந்தையின் பெயர் நன்றாக இருக்கு,வாழ்த்துக்கள்.

பெசொவி said...

//இவகிட்ட இருக்கற ஒரே கெட்ட பழக்கம் தூங்கும் போது விரல் சூப்புறது. தூங்கும் போது மட்டும் தான், மத்த நேரத்துல இல்லை. ஒருநாள் தூங்க படுத்துட்டு இருக்கும் போது விரல் சூப்பினா. நான் “பாப்பாக்கு 2 வயசு ஆக போகுது இல்லையா? விரல் சூப்பாமா தூங்கனும். பாரு அப்பா, விரல் சூப்பரனா இல்லைல, நீயும் விரல் சூப்பாம சமத்தா தூங்கனும்” என்றேன். உடனே என் பொண்ணு, “அப்பா, இந்தா” என தன் இன்னொரு கை விரலை எடுத்து என் வாயில் வைத்து சூப்ப சொல்கிறாள். என்னத்த பண்ண?//

cho, chweeeeeeet!

:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துளேன்... (மரியாதையா சொன்னா தான் நீங்க ஒத்துப்பீங்கன்னு சொன்னான்ன அது தான்)