இணைய நண்பர்களே,
பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி
உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த
வருடமும் அப்படியான ஒரு போட்டியை டெரர்கும்மி மேலும் சிறப்பாக நடத்தவுள்ளது.
ஆம், நண்பர்களே உங்கள் புத்தியை தீட்ட நேரம் வந்துவிட்டது.... வரும் புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி http://www.terrorkummi.com/ ல் தொடங்கும். மொத்தப்பரிசு ரூ 10,000....
இந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:
என்ன புதிர் போட்டி இது?
1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.
2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்
3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும்.
பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில்
ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல
வேண்டும்
4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....
5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்
6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....
7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.
8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை
சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும்
கலந்து கொள்ளலாம்
9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
பரிசு விவரம்:
முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.
அந்த விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த இதோ சில சாம்பிள் விளையாட்டுக்கள்......
=> சாம்பிள் கேம் 1 - http://testarun1981.blogspot.com/2012/08/click.html
=> சாம்பிள் கேம் 2 - http://contest.terrorkummi.com/samples/welcome.html
இந்த போட்டியை பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களை பாருங்கள்......
Facebook Page - https://www.facebook.com/HuntForHint
Facebook Group-https://www.facebook.com/groups/huntforhint
Twitter - https://twitter.com/HfH_tk
சென்ற வருட கேமை மறுபடி விளையாட http://hfhseason1.terrorkummi.com/Game/Home.aspx
சென்ற வருட போட்டியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.terrorkummi.com/search/label/Hunt%20for%20hint
வேட்டை நாளை ஆரம்பம்....